பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக சர்தார்ஜி இடம் பெற்றிருந்தார். முதல் ஓவரை வீச சோயப் அக்தர் வந்தார். வழக்கம்போல் அவர் வேகமாக பந்துவீச, பந்து சர்தார்ஜியைக் கடந்து விக்கட் கீப்பரிடம் சென்றது. அதற்கடுத்த பந்து பவுன்சராக சர்ரென்று விக்கெட் கீப்பரிடம் சென்றது. மேலும் இரண்டு பந்துவீச்சுகள் அசுரவேகத்தில் விக்கெட் கீப்பரை அடைந்தன. சர்தார்ஜி கொஞ்சம்கூட அசையவே இல்லை.

ஐந்தாவது பந்தை ‘நோ பால்’ என்று அறிவித்தார் அம்பயர். அவரிடம் நேரே சென்றார் சர்தார்ஜி.

“இறுதியாக அவரிடம் பந்து இல்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டீர்கள்!”