புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.

விமானி சொன்னது இதுதான்:

“நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.”