தொடக்க காலத்தில் மனித உயிருக்கு விஷ பாம்புகள், விலங்குகள் போன்றவற்றால் தான் ஆபத்து இருந்தது. தற்போது மனிதனுக்கு எதிரி மனிதன்தான். இதற்கு காரணம் நாம் உயிர் வாழ்வதற்காக சாப்பிடும் உணவு பயிர்களில் மனித மரபணுவை சேர்த்து விபரீத ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் சில விஞ்ஞானிகள். இதனால் எதிர்காலத்தில் மனித இனம் சிதைந்து போவதற்கு வழி வகுத்து விடும்.

     இன்னும் சொல்லப் போனால் மனித தோற்றத்தில்கூட ஏராளமான மாற்றங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார் பிரபல செக்சாலஜிஸ்ட் நிபுணர் டாக்டர். காமராஜ். அவர் கூறியதாவது :

     அமெரிக்காவின் மிசோரி பகுதியில் மரபணு மாற்று பயிர்கள் அதிக அளவில் உள்ளன. அங்குள்ள அரிசி மற்றும் இதர தானியங்களில் மனிதன் மற்றும் விலங்குகளின் மரபணுவை சேர்த்து விளை விக்கப்படுகிறது. இந்த மனித மரபணு பயிர்களை ஏன் விளைவிக்கிறீர்கள்? என்று விஞ்ஞானிகளிடம் கேட்டால் அதற்கு அவர்கள் கூறும் பதில் இதுதான். மனித மரபணு சேர்த்து பயிரிடும் தானியங்களில் இருந்து சில மருந்துகளை தயாரிக்கிறோம்.

     சில வகை மரபணு தானியங்களில் இருந்து பீர் மற்றும் மதுபானங்கள் சிலவற்றை தயாரிக்கி றோம். இதனால் யாருக்கும் கெடுதல் ஏற்படாது. மரபணு ஆராய்ச்சியின் புதுமைகளில் மரபணு பயிர்களும் ஒன்று என்று சர்வ சாதாரணமாக விளக்கம் அளிக்கிறார்கள். உண்மையில் மனித மரபணு நெற்பயிர்கள் ஆபத்தானவை தான்.

     இதில் இருந்து கிடைக்கும் அரிசியை தொடர்ந்து சாப்பிடும் மனிதர்கள், அவர்கள் சந்ததிகள் ஏதாவது ஒருவகையில் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மூளை செயல்பாட்டை சீர்குலைக்கும் சக்தி இந்த வகை மரபணு அரிசிக்கு உண்டு. இந்த வகை அரிசிக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இங்குள்ள இயற்கை ஆர் வலர்கள் மரபணு பயிர்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை விற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

     ஆனால் அதையும் மீறி மரபணு அரிசி, மற்றும் மரபணு காய்கறி, பழங்களை சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி செய்கிறது. மரபணு ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் விலங்குகளின் மரபணு சேர்க்கப் படுவதால் அவை அசைவமாக மாறி விடுகின்றன. இதனால் சைவ பிரியர்கள் மரபணு பழங்களை வாங்க மறுக்கின்றனர்.

இந்தியர்களுக்கு குறி :

     கடந்த சில ஆண்டுகளாக மரபணு அரிசி தயாரிப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரிசி தென் இந்தியர்களின் விருப்ப உணவு. எதிர்காலத்தில் இந்த மனித மரபணு அரிசியை இந்தியா கொண்டு வர சில சர்வதேச நிறுவனங்கள் திட்டமிட்டுள் ளன. இதற்கான அனுமதியைப் பெற ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

     இந்த மரபணு நெற்பயிர்கள் மீண்டும் முளைக்கும் தன்மையற்றவை. இதை விளை வித்தால் விதைகளை சர்வதேச நிறுவனங்களிடம் மட்டும் தான் வாங்கமுடியும். இந்த முளைக்காத தன்மையுடைய நெல் விதைகளை தயாரிக்க அமெரிக்க நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து வருகிறது.

முறையற்ற ஆராய்ச்சி :

     மரபணு மாற்று பழங்களோ காய்கறிகளோ விலங்குகளுக்கு தந்து ஆராய்ச்சி செய்தபோது மாதக்கணக்கிலேயே தந்து அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு தொடர்ந்து சாப்பிட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்.? இவ்வகை பயிரை தொடர்ந்து சாப்பிடும் போது அடுத்த தலைமுறைக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? என்ற ஆராய்ச்சிகள் இன்னும் செய்யப்படவில்லை.

குறைபாடான குழந்தை பிறக்கும் :

     சர்வதேச விதை நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதை லட்சியமாகக் கொண்டு எளிதில் கெட்டுப் போகாத மரபணு கத்திரிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு, பெரிய மஞ்சள் வாழைப்பழம், வெள்ளரிக்காய், பப்பாளி, வெண்டைக்காய்போன்ற காய்கறி, பழங்களை உருவாக்கி வருகின்றன. இதில் எலி, அணில், தவளை போன்ற விலங்குகளின் மரபணுவை சேர்த்து உருவாக்கு கிறார்கள். இந்த மரபணு காய்கறி- பழங்களுக்கு நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவற்றுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

     இந்த நிலையில் விஞ்ஞானிகள் விலங்குகளைப் போல மனித மரபணு மூலம் அரிசி உருவாக்கி வருவது வேதனையின் உச்சகட்டம். இதுபற்றி விஞ்ஞானிகள் கூறும் போது, “மனிதர்களிடம் உள்ள சில வைரஸ் நோய்களை தீர்ப்பதற்கு மனித மரபணு அரிசியை உருவாக்கி உள்ளோம்” என்கிறார்கள். ஆனால் அமெரிக்க குழந்தைப் பேறு மருத்துவர்கள் கூறும்போது, “மனித மரபணுவை நாம் சாப்பிடும் அரிசியில் சேர்ப்பது தவறு. இது குழந்தைகளின் மூளையை முதலில் தாக்கும். பின்னர் மற்ற உறுப்புகளை சீர்குலைக்கும். இதனால் குழந்தைகள் குறைபாட் டுடன் பிறக்க வாய்ப்பு அதிகம். ஆரோக்கியமான குழந்தை பிறப் பதற்கு மரபணு உணவுகள் பெரும் தடையாக உள்ளன. மரபணு பயிர்களை பயிரிட உலகம் முழு வதும் தடை விதிக்கவேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர். ஆனால் மரபணு பயிர்களில் அதிக முதலீடு செய்துள்ள சர்வதேச நிறுவனங்கள் மறைமுகமாகஇந்தியா போன்ற நாடுகளுக்கு மரபணு ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றை ஏற்றுமதி செய்கின்றன. விரைவில் மரபணு அரிசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளன. இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்பி அணிபவர்கள்.

     இதனால் அமெரிக்க பயோடெக்னாலஜி விஞ்ஞானிகள் தங்க நிறத்தில் மரபணு அரிசியை உருவாக்கி உள்ளனர். இதே போல் ஊதா நிறம், ஆரஞ்சு நிறம், சாம்பல் நிறம், பச்சை, சிவப்பு வண்ணங்களில் அரிசியை உருவாக்கத் திட்ட மிட்டுள்ளனர். விஞ்ஞானத்தை ஆக்க சக்திக்கு பயன்படுத்தினால் நல்லது.

அழிவு சக்கிக்கு பயன்படுத்துவது நல்லதல்ல. விஞ்ஞானிகள் உண்மையில் நல்லவர்கள் என்றால் மனிதர்கள் சாப்பிடும் உணவுக்கான பயிர்களில் மனித மரபணுவை சேர்ப்பார்களா? மேலும் பயிர்கள் மீண்டும் முளைக்காதபடி அதில் உள்ள விதைகளை மலடாக்குவார்களா? இது உலக மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

நோய்களை பரப்பும் மரபணு பழங்கள் :

     மரபணு மாற்று காய்கறி - பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய், நீரிழிவு, அலர்ஜி, மூட்டு தேய்மான பிரச்சினை, ஆண்-பெண்களிடம் மலட்டுத்தன்மை, சைனஸ் கோளாறு, நுரையீரல் கோளாறு, வயிற்று கோளாறுகள், ஞாபக சக்தி குறைவு, சிறுநீரகத்தில்

கற்கள் உருவாதல், நரம்பு தளர்ச்சி ஏற்படுதல், உடல் பருமன் கோளாறு, மாரடைப்பு, ரத்த அழுத்த நோய், குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது, இதய நோய் என்று பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி விடும் பேராபத்து உள்ளது.

     மரபணு பழங்களில் குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு போன்றவை பளபளப்பாக பளிச்சிடு வதற்கு பன்றி மற்றும் குதிரை போன்ற விலங்கு களின் மரபணுவை சேர்த்துள்ளனர். இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆஸ்தி ரேலிய மருத்துவர் நிபுணர் ராபர்ட் எச்சரித்துள் ளார்.

மலட்டுத்தன்மை அதிகரிப்பு :

     மரபணு பயிர்களில் உள்ள விதைகளை விஞ்ஞானிகள் மலட்டுத்தன்மை ஆக்கி விடுகிறார் கள். இந்தியர்கள் தற்போது ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இதே போல் மனித குலத்தை சீரழிக்க வரும் மரபணு பயிர்களை இந்தியாவில் நுழைய விடாமல் தடுப்போம். இளைய தலைமுறையை காப்போம் என்கிறார். டாக்டர். காமராஜ்.

(20-12-2011 - மாலைமலர்)

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)