எல்லோரும்
அது குறித்து
அழுது முடித்து
எதேச்சையாகவோ அல்லது
கட்டாயமாகவோ
மறந்து விட்ட சூழலில்
இன்று தான் சாவகாசமாய்
அங்கு சென்றேன்.

சாயம் போனதாய்
சில எழுத்துக்கள் அழிந்ததாய்
கிடந்தது
முதல் மதிப்பெண்ணிற்குரிய அட்டை
பெற்றோர் கையொப்பத்தில்
அழுத்தப்பட்ட கைநாட்டு
ஒழுகியிருந்தது

அன்றுதான்
அது குறித்து
முதன் முதலாய்
அழ ஆரம்பித்திருந்தேன்.

கதிர்மொழி
Pin It