மரணத்தை தழுவுவது ஏன்?

‘மந்த்லி இன்டெக்ஸ் ஆப் மெடிக்கல் ஸ்பெஷாலிட்டி (எம்.ஐ.எம்.எஸ்.,)’ என்ற மருத்துவ இதழின் ஆசிரியர் டாக்டர் சந்திரா எம்.குல்காதி, ‘50 வயதான நோயாளிகள் இருமல் மற்றும் தொண்டை, கரகரப்பிற்காக, வலிக்காக எரித்திரோமைசின் சாப்பிடுகின்றனர். Dyspepsiaவிற்காக ‘சிசாபிரைடு’ விழுங்குகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மாரடைப்பால் இறக்கலாம். ‘சிசாபிரைடு’ இருதயத்துடிப்பு சீரற்று மரணத்தை தழுவுகின்றனர் என்கிறார்.

கேஸ்ரோஎன்டர்லாஜிஸ்ட் டாக்டர் தாக்கூர், இதுபற்றி கூறுகையில், “சிசாபிரைடு மாத்திரைகளை நோயாளிகளுக்கு எழுதித் தருவதில் தவறில்லை. அதே நேரத்தில் அதை எச்சரிக்கையோடு செய்யவேண்டும். தொடர்ச்சியாக அந்த நோயாளியை பரிசோதிக்க வேண்டும் அல்லது பரிசோதனை செய்து கொள்ளும்படி கூற வேண்டும். எனது டாக்டர் தொழிலில் கிடைத்த அனுபவம், மருந்துகளை பயன்படுத்துவதற்கான தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் இந்த மாத்திரையால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது நன்கு அறிந்த உண்மையே” என்று கூறுகிறார்.

அங்கீகாரமே இல்லாமல் 4 ஆயிரம் மருந்து, மாத்திரைகள்!

டி.சி.ஜி.ஐ., யின் அங்கீகாரம் இல்லாமல் சந்தையில் தற்போது 4 ஆயிரம் மருந்து, மாத்திரைகள் விற்கப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடு இல்லாத நிலைமையால் நாட்டில் தற்போது 17 ஆயிரம் மருந்து, மாத்திரை உற்பத்திக் கம்பெனிகள் முளைத்துள்ளன. சட்டவிரோதமாக மட்டுமில்லாமல், சோதனைக்கு உட்படுத்தப்படாத மருந்துப் பொருட்களையும் பயன்படுத்தி கூட்டுக் கலவையில் மாத்திரைகள், மருந்துகள் தயாரிக்கப்படுவதால் அவை நோயாளிகளின் உடல்நிலையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. Aceclofenac மாத்திரை வலி மற்றும் வீக்கங்களைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் இந்த மாத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல வளர்ந்த மற்றும் முன்னேற்றங்களாலும் இதற்கு அனுமதி இல்லை. ஆனால், இந்தியாவில் அனைத்து விதமான வலிகளுக்கும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.

அங்கே உள்ளது தடை; இங்கே...?

‘நிம்சூலிட்’ பயன்படுத்துவது பற்றி பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தாலும் இந்த மாத்திரை இந்தியாவில் வலி நிவாரணியாக பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. நமது வளர்ச்சி அடையாத அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம் போன்றவற்றில் இந்த மாத்திரைகளை மார்க்கெட்டிங் செய்ய மறுக்கப் பட்டுள்ளது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நம்நாட்டில் அந்த மருந்து, மாத்திரைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் பெருமளவு விற்கப்படுகின்றன. ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு நிறுவனம் ‘நிம்சூலிட்’டை தங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ள 25 நாடுகளிலும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதித்துள்ளது. காய்ச்சலை குறைக்க, பெரியவர்களுக்கு ஏற்படும் மற்ற பல உபாதைகளைத் தவிர்க்கவும் இந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சுவீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மற்ற 168 நாடுகளிலும் இந்த மருந்தின் பயன்பாட்டிற்கு அனுமதியே வழங்கப்பட வில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த ‘லேக்சைடு பார்மசூட்டிக்கல்ஸ்’ நிறுவனம் மட்டும் இந்த மருந்தை உற்பத்தி செய்து மெக்சிகோ நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய மட்டும் அனுமதி பெற்றுள்ளது. ஆனால், இம்மருந்தை அமெரிக்காவில் விற்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த மருந்தை சாப்பிட்ட பின்பு இரு குழந்தைகளுக்கு Reye’s Syndrome ஏற்பட்டு இறந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பின்லாந்தில் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அதை மாற்றவேண்டிய நிலைக்கு, கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் நிம்சூலிட் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம செயல் இழந்துள்ளது பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கான்பூரைச் சேர்ந்த ஒருவர் நிம்சூலிட் சாப்பிட்டதால் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரை செய்வது தொடர்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இதன் விற்பனையை அதிகரிக்க பெருமளவு ஸ்பான்சர் செய்கின்றன. காய்ச்சல் பாதித்த ஒருவரை நிம்சூலிட் அதிலிருந்து விடுபடச் செய்யும். உடம்பின் வெப்பநிலையை வழக்கத்திற்கும் மாறாக குறைக்கும் தன்மை கொண்டது. உயிருக்கும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு இது உடனடி நிவாரணம் வழங்கும். ஆனாலும், பக்கவிளைவுகள ோ அதைவிட பயங்கரமானதாக அமையும்.

(இக்கட்டுரை மாற்று மருத்துவம் ஜூலை 2009 இதழில் வெளியானது)