கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்கண்ணி. அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை ...

                சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.

                பொன்னாங்கண்ணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை.

                பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணி எனவும் இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

பொன்னாங்கண்ணியின் பயன்கள் :

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)