அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கேரள அரசு எடுத்த முடிவுதான் அய்யப்பன் கோபத்துக்கு உள்ளாகி, அதன் காரணமாக கேரளம் வெள்ளத்தால் தவிக்கிறது என்று ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு எதிரான தீண்டாமைக்கு எதிராகப் போராடும் பெண்கள், அய்யப்பன் பக்திமயக்கத்திலிருந்தும் வெளியேற வேண்டாமா?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் “ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் அனைவருக்கும் கோயிலில் வழிபட உரிமை உள்ளது” என்றும் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் “மாதவிடாய் காலத்தில் உள்ள 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தால் புனிதம் பாதிக்கப்படும் எனவே அவர்களை அனுமதிக்க முடியாது” என்று மறுத்துள்ளது.

அதே போல நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் “நன்கு படித்தவர்கள் நிறைந்த மாநிலம் கேரளம். இங்கு 96 சதவீத பெண்கள் படித்தவர்கள். சுதந்திரமாக செயல்படக் கூடியவர்கள். சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படாததை ‘சதி’யோடு தொடர்புபடுத்தக்கூடாது. இந்து நம்பிக்கைக்கும் சதிக்கும் தொடர்பு கிடையாது. ஆணாதிக்கம் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதும் தவறு. சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. அவர் தனித்துவம் வாய்ந்தவர். கடவுளே கோயிலுக்குள் இந்த வயதுடைய பெண்கள் வருவதை விரும்பவில்லை. பிறகு நாம் எப்படி அனுமதிக்க முடியும்? இந்து மதத்தில் சகிப்புத் தன்மை அதிகம். இங்கு பாலினப் பாகுபாடும் கிடையாது. இது கோயிலின் புனிதத்தன்மையை காப்பதற்காக தொன்றுதொட்டு வரும் நிகழ்வாகும். சபரிமலைக்கு ஆண்கள் தங்களது தாய், மகள், சகோதரி என எவரையும் அழைத்துவரும் உரிமை உள்ளது. ஆனால் வயதுதான் 50-க்கு அதிகமாகவும், பத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். விரத காலங்களில் பிரம்மச்சர்யம் மேற்கொள்ள வேண்டும்” என்று இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகள் 26(பி), 25(2), 17 முன்வைத்து வாதாடியுள்ளார்.

 “சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என ஒலிப்பது பாரம்பரியத்தின் குரல்கள். அரசியலமைப்பு சட்டம் 14-க்கு இணையாக ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்த அர்த்தநாதீஸ்வரராக சிவன் காட்சியளிக்கும் மதம் இந்து மதம். சிவன் பிரம்மச்சாரி அல்ல. அவர் யோகத்தில் இருந்தபோது நித்திரையை கலைத்த மன்மதனை எரித்தார். இதேபோல் இங்கு ஒவ்வொன்றும் ஆன்மிக ரீதியிலானவை என்றும் தனது வாதங் களை முன்வைத்துள்ளார். (நன்றி: ‘இந்து’ தமிழ்)

உரிமைக்குப் போராடுவது நியாயம்தான். ஆனாலும் ஆணுக்கும் ஆணுக்கும் ஓரினச் சேர்க்கை மூலம் பிறந்த இந்துக் கடவுளான அய்யப்பனை பெண்கள் ஏன் கும்பிட விரும்புகின்றார்கள் என்பது நமக்கு வியப்பாக உள்ளது. இந்த ஆபாசத்தை நாம் சுட்டிக் காட்டினால் எங்கள் நம்பிக்கையில் தலையிடாதீர்கள் என்பார்கள்.

பொதுவாக இந்துமதம் என்றில்லாமல் எல்லா மதங்களுமே பெண்களின் உரிமைகளை நிராகரிக்கின்றன. இதற்கு காரணம் அனைத்து மதங்களும் தாய் வழி சமூக அமைப்பு தகர்ந்து தந்ததைவழி சமூக அமைப்பு உருவான காலத்தில் ஏற்பட்டதாகும். மதங்கள் அனைத்தும் ஆணின் பார்வை வழியே சொல்லப்பட்டதால் அந்தச் சமூக அமைப்பில் பெண்களின் இடம் எவ்வாறு இருந்ததோ அதையே தான் அவர்கள் பிரதி பலித்தார்கள்.

இன்று தீட்டாகவும், அருவருப்பான தாகும் கருதப்படும் மாதவிலக்கு என்பது எல்லா காலங்களிலும் அவ்வாறு பார்க்கப்படவில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆணாதிக்க தந்தை வழி சமூக அமைப்பு ஏற்படுவதற்கு முன்பு மாதவிலக்கு என்பது புனிதமானதாகவே கருதப்பட்டு வந்தது. மாதவிலக்கு இரத்தம் என்பது வளமையின் குறியீடாக பார்க்கப்பட்டது. தாந்திரீகத்தில் மாதவிலக்கு ரத்தத்திற்கு காபுஷ்பம் என்று பெயர். இந்தச் சொல்லானது தாவரங் களுடனான உறவைக் காட்டுவதாகும். பெண் குழந்தையைப் பெறுவதுபோல, இச்செடியும் பூத்துக் காய்க்கிறது. பெண் பிறப்புறுப்பு செடி அல்லது லதா என்று அழைக்கப்பட்டது. கருவுறுதலுக்கு முன்னர் மாதவிலக்கு நிகழ்வது போலக் காய்ப்பதற்கு முன்னர் பூ பூக்கிறது என்று நம்பப்பட்டது இதனால் மாதவிலக்கு இரத்தம் புஷ்பம் என்றும் அழைக்கப்பட்டது.

 “மாதவிலக்கு இரத்தம் மனித விருத்திக்கு அடிப்படையாகவும், வளமையின் குறியீடாக வும் தொல்பழங்கால தாய்வழிச் சமூகத்தால் கருதப்பட்டது. விதைப்பதற்கு முன்பு தங்கள் வயல் வெளியில் ஒரு கல்லை நட்டு அதற்கு குங்குமம் பூசுகின்றார்கள். இந்த குங்குமம் என்பது மாதவிலக்கு இரத்தத்தின் குறியீடு ஆகும். இதன் மூலம் வயல்களில் உற்பத்தியை பெருக்க முடியும் என அவர்கள் நம்பினர். பண்டையக் காலத்திலும், மத்திய காலத்திலும் வாழ்ந்த இயற்கைவளம் சார்ந்த சிந்தனை யாளர்களான அரிஸ்டாட்டில், பிளினி போன்றோர் மாதவிலக்கு நின்ற பின்னர் கருப்பையில் தேங்கியிருக்கும் இரத்தத்திலிருந்து கரு உருவாகிறது என்று கருதினார்கள்.

தாம்சன், “மனித இனவிருத்தி சார்ந்த மந்திரத்தில் அதன் முடிவு (குழந்தை) பற்றிக் கவனிப்பதில்லை. அதில் இடம்பெறும் செயல் முறைக்குத்தான் (பிரசவக் கழிவுகள், மாதவிலக்கு இரத்தம்) அதிக முக்கியத்துவம் அளிக்கப்படு கின்றது. எனவே மாதவிலக்கு இரத்தம், பிரசவக் காலக் கழிவுகள் ஆகியன பெண்ணிடம் உள்ள உயிர்ச் சத்தியின் வெளித்தோற்றங்கள் என்று கருதப்படுகின்றன. தொல்பழங்காலக் கருத்துப் படி மாதவிலக்கு என்பது குழந்தைப்பேற்றிற்கு ஒப்பதான செயலாகும்” என்கின்றார்.

“இந்தியாவின் பிற்கால மதங்களில் இந்தப் தொல்பழங்கால நம்பிக்கைகள் இடம் பெற் றிருந்தன. வானம் இடித்து முதல் மழைத்துளி விழும்போது பூமித்தாய் மாதவிலக்காகித்தான் கருவுறுவதற்கு வேண்டிய செழிப்பை உரு வாக்கிக் கொள்கின்றாள் என்று வங்காளத்தில் நம்பப்படுகிறது. அப்போது உழவு, விதைப்பது, பிற விவசாய வேலைகள் எல்லாவற்றையும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அந்த நாளில் கொண்டாடப்படும் சடங்கு ‘அம்வுவசி’ எனப்படுகிறது.”

“இதே போலத் திருவனந்தபுரத்தில் கோயிலில் அவ்வப்போது ஒரு முக்கிய சடங்கு இடம் பெறுகின்றது. இதற்கு ‘திரிப்புக்கரட்டு’ சடங்கு அல்லது சுத்தி செய்தல் என்று பொருள். இது அம்மன் மாதவிலக்காகிறாள் என்பதைக் குறிக்கிறது. இது ஆண்டொன்றிற்கு எட்டு அல்லது பத்துத் தடவை நிகழ்கிறது. அம்மன் உலோகச் சிலையைச் சுற்றி அணியும் துணியில் மாத விலக்கின் போது உண்டாகும் இரத்தக் கறைகள் காணப்படுகின்றன. அவ்வாறு நம்பப் படுகின்றது) இத் துணியை வஞ்சிப் புழா அல்லது தளவூர் பட்டியில் உள்ள பெண்களுக்கு அனுப்பிச் சோதிக்கிறார்கள். இக்காலத்தில் கர்ப்பக்கிரகம் மூடப்பட்டு சிலை தனிக் கொட்டகையில் வைக்கப்படுகிறது. இத் துணியை பெண் சலவைத் தொழிலாளி வெளுத்தபின் அவளே எடுத்துக் கொள்கிறாள். அது மறுபடியும் பயன்படுத்தப்படுவதில்லை. சாயம் போன இத்துணிக்கு மிகுந்த தேவை உண்டு. இது ஒரு புனிதச் சின்னமாக விளங்கு வதால் பெண்கள் விரும்பி வாங்குகின்றனர்.”

“அதேபோல சங்கனூரில் பார்வதியின் மாதவிலக்கிற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அஸ்ஸாமில் காமக்கியா வும் இது போன்றதாகும்.உற்பத்தி, இன விருத்தியை ஒன்றாக்கும் மந்திர நம்பிக்கைகள் தாந்திரீகத்துடன் தொடர்புடையவை என்றால், மாதவிலக்கு இரத்தத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் இயல்பானதே” என்கிறார் ஆய்வாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா. எப்போது இந்திய சமூகத்தில் பார்ப்பனியம் ஒரு மதமாக கோலோச்சியதோ அப்போதில் இருந்துதான் பெண்கள் பற்றிய மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்தன. இந்துமத புராணங்கள் இந்திரனுடைய பிரம்மஹத்தி தோஷத்தில் மூன்றிலொரு பாகத்தை பெண்கள் ஏற்றுக் கொண்டதால் அவர்கள் பூப்படைந்ததாக கூறு கின்றது. இதனால் மாதவிடாய் ஆன பெண்கள் பிரம்மஹத்தி வடிவை அணிந்து கொண்டிருப் பவள் என்று சொல்லப்பட்டது. மேலும் பெண்கள் எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும் அவர்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டதால் தாழ்ந்த குலமாகவே கருதப்பட்டனர். இதனால் சொர்க்கம் செல்லும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. எட்டு வயதுக்குள் பெண் களுக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்துவிட வேண்டும். அப்படி பூப்படையும் காலம்வரை செய்யாதிருப்பது பெரும் குற்றத்திற்குரிய தண்டனையாகக் கருதப்பட்டது. பூப்படை வதற்கு முன் பெண்ணை திருமணம் செய்து கொடுக்காத தந்தை அப்பெண்ணின் ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் மாதவிடாயை பருக வேண்டும் அல்லது “பிராமணனுக்கு” கொழுத்த பசுவை தானமாகக் கொடுத்துவிடவேண்டும்.

பெண்களின் மீது எவ்வளவு வன்மம் நிறைந்த பார்வை பார்ப்பனியத்துக்கு இருந்திருந் தால் இப்படியொரு தண்டனையை வழங்கி யிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். பெண் களுக்கு இந்துமதம் சம உரிமையை கொடுத்திருக் கின்றது என்று பேசிக்கொண்டே அவர்களின் அத்தனை உரிமைகளையும் புராணபுரட்டுகளின் மூலம் பறித்தது பார்ப்பன இந்துமதம். புராணங்களை எழுதியவன் எல்லாம் யார் என்று தெரியாது, அதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, உள்ளபடியே இந்துமதம் பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்தே பார்க்கின்றது என்று சண்டைக்கு வருபவர்களுக்கு சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதிய தெய்வத்தின் குரல் என்ற நூலை படித்து உண்மையை தெரிந்து கொள்ளலாம். அதில்

“ஆலயங்களுக்கு உள்ளேயே நடக்கிற அநாசாரங்களை என்னைத் தவிர யாரும் எடுத்துச் சொல்லமாட்டார்கள் போலிருக்கிறது. அதையும் நானே சொல்கிறேன். இப்போதெல் லாம் டூரிஸ்டுகள், 45, 50 நாள் யாத்திரை கோஷ்டிகள், காலேஜ் பெண்கள், ட்ரெயினிங் ஸ்கூல் பெண்கள் என்று பலர் கூட்டம் கூட்டமாகக் கோயில்களுக்கு பஸ்கள் அமர்த்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் எத்தனையோ பேர் விலகியிருக்க வேண்டிய காலத்திலும் தரிசனத்திற்கு வந்து விடுகிறார்கள். இப்படி செய்வது தோஷம் என்று தெரியாத தாலேயே பெரும்பாலும் கோயிலுக்கு வந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் வீட்டு விலக்கு என்று அவர்களை வீடுகளிலேயே தனித்து வைத் தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும் கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்து விடு கிறார்கள். ‘ஸ்வாமிக்கு ஏது தீட்டு?’ சீர்திருத்தக்காரர்கள் நான் சொல்வதை ஆட்ஷேபிக்கலாம். தீட்டு இல்லாத சுவாமி எங்கேயும் இருக்கிறார். அவரைக் கோயிலில் தான் வந்து தரிசிக்க வேண்டுமென்பதில்லையே? சாஸ்திரப் பிரகாரம் ஸ்வாமியின் சாந்நித்தி யத்தைக் கிரகித்துத் தரும் கோயில்களில், அந்த சாஸ்திரங்கள் சொன்ன விதிப்படிதான் ஸ்வாமியைத் தரிசிக்க வேண்டும். இந்த விதிகளை மீறுவதால்தான் பல மகாஷேத்திரங்களில், விபத்து, விபரீதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்” என்றும்,

“இப்போது அந்த மூன்று நாட்களும் ஸ்திரீகள் ஆஃபீஸுக்குப் போவதில் ஊர் பூராவும் தீட்டுப் பரவுகிறது. ‘அட்மாஸ்ஃபைரிக் பொல்யூஷ்ன்’ (atmospheric pollution) என்று இன்றைக்கு அநேக விஷயங்களை எடுத்துக் காட்டி எதிர் நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கிறார்கள். அந்தப் ‘பொல்யூஷன்’ எல்லாவற்றையும் விடப் பொல்லாதது ஸ்திரீகளின் தீட்டே. அது செய்கிற கெடுதல் வெளியிலே தெரியாததால் அதைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள். கவனிக் கிறவர்களையும் ஆசாரப் பைத்தியங்கள் என்று ஒதுக்குகிறார்கள். வாஸ்த்தவத்திலோ இந்தத் தீட்டு அமங்கள சக்திகளையெல்லாம் இழுத்துக் கொண்டு வரும். அதை இப்படி எல்லா இடத்திலும் கலக்க விட்டால் ஜனங்களுக்கு எத்தனை தான் வரும் படி வந்தாலும், கவர்ன்மென்ட் எத்தனைதான் கiஎந லநயச யீடயn போட்டாலும் தேசத்தில் துர்பிக்ஷமும், அசந்தியும், வியாதியு மாகத்தான் இருக்கும்” என்றும் கூறுகின்றார்.

உலகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினை களுக்கும் பெண்ணின் மாதவிலக்குத்தான் காரணம் என்று பார்ப்பன தெய்வத்தின் குரலாய் நின்று சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஒலிக் கின்றார்.

இதனால்தான் ஐயப்பன் கோயிலில் மட்டுமல்ல மாதவிலக்கான காலத்தில் எந்தப் பார்ப்பன கடவுள்கள் இருக்கும் கோயிலிலும் பெண்கள் உள்ளே வர சாஸ்திரங்கள் அனுமதிப் பதில்லை. இதை எல்லாம் சாஸ்திரங்கள் எழுதிய காலத்தில் மாதவிலக்கு பற்றிய அவர்களின் அறியாமையால் எழுதப்பட்டது என்று நாம் புறம்தள்ளிவிட முடியாது. இன்று அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்திலும் மாதவிலக்கு தீட்டாக கருதப்பட்டு பெண்களை இழிவுபடுத்தும் செய்கைகள் தொடர்ந்து நடந்து தான் வருகின்றது. இதை எல்லாம் செய்வது படிக்காத பாமரர்கள் கிடையாது. அனைவருமே மெத்த படித்தவர்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே அதிகமான கல்வியறிவு கொண்ட, அதிகமுறை இடதுசாரிகளால் ஆளப்பட்ட கேரளத்திலேயே இந்த நிலைமை என்றால் கல்வியறிவில் பின்தங்கிய மாநிலங்களில் இருப்பவர்களின் சிந்தனை நிலமை எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெளிப்படையாக பெண்களுக்கு எதிரான தீண்டாமை கடைபிடிக்கப்படுவதற்கு பெரும் பாலான பெண்கள் பார்ப்பன ஆணாதிக்க கருத்தியலை கேள்வி இன்றி ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணமாகும். பெண்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களை இழிவு படுத்தும் மதங்களையும் அது பிரதிநிதித்துவப் படுத்தும் சாஸ்திரங்களையும், கடவுள்களையும் எதிர்ப்பதற்கு முன்வரும்போது தான் பெண் ணுரிமை உறுதியாக முடியும். மதங்களுக்குள் நின்றுகொண்டு உரிமை கோருவது பீக்காட்டில் நின்றுகொண்டு நாற்றம் எங்கிருந்து வருகின்றது என்று தெரியாமல் புலம்புவது போன்றதாகும்.