மகளிர் தினம்.  1857, 1907, 1910, 1920 ஆகிய வருடங்களில் பல போராட்டங்களை நடத்தி இறுதியில் 1921-ல் கிளாரா செட்கின், லூயிச்  zietz, Rosa heixensurix  போன்றோர்களால் விழிப்புணர்வு தன்னபிக்கை, வளர்த்துக்கொண்டு ஆண்களின் அடிமைச் சமூகத்திலிருந்து விடுவித்துக்கொள்ளவே மார்ச் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால் 2017-ல் இன்றும் விடுதலை வேண்டி போராடிக்கொண்டு தான் இருக்கிறோம். பாலினம், சாதி பற்றி ஒரு பெண்ணால் எடுக்கப்படும் குறும்படங்களைக் கூடத் தடை செய்யும் நிலையில் தான் உள்ளோம் (உதாரணம்: ‘கக்கூஸ்’ லெ திவ்யா பாரதி)

நான் வன உயிரின ஆராய்ச்சி (Wildlife Researcher) மாணவி  என்பதனால் குறிப்பாக இந்தத் துறையில் ஆரம்பத்திலிருந்து நடைபெறும் பிரச்சனைகளையும், என்னுடைய மற்றும் எனது நண்பர்களின் அனுபவத்தை கூறுகிறேன்.

எவ்வளவு பெரிய வேலையிலிருந்தாலும், துறையாகயிருந்தாலும் அதற்குத் தகுந்தாற்ப்போல் பெரிய அடிமைத்தனம், அரசியல் நடத்தி அவர்களின் அறிவு, நேரம், உடல் உழைப்பு, சிந்தனை போன்றவற்றைத் திருடவும், தடைசெய்தும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை, ஆசிரியர்களை, பெண்களைப் பின்னுக்குத் தள்ள முயல்கிறது பார்பன மற்றும் ஆன்கள் சமூகம்.

ஆனால் படித்தவர்களுக்கே இது புரியாமல் ‘தற்போது தாழ்த்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெண்கள் வசதியாகத்தான் இருக்கிறார்கள் என்கின்றனர்’ எதற்கெடுத்தாலும் அப்துல் கலாம், கிரண்படி போன்றோரை அவர்களுக்கு பின்னனியிலிருக்கும் அரசியல் தெரியாமலேயே மேற்கோள் காட்டுவது வருத்தமாகவே உள்ளது.

ஆராய்ச்சித் துறையில் 87.27% - ஆண்கள் , 12.78% பெண்கள்.

women scientist 600அறிவியல்துறை வரலாறு

ஈபில் டவரில் நோபல் பரிசு பெற்றவர்களின் 72 விஞ்ஞானியின் பெயர்கள் பொறிக்கபடுகிறது. ஆனால் மாரி சோஃபி என்ற பெண் விஞ்ஞானி இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவரின்   பெயர்   பொறிக்கபடவில்லை. அவர் பெண் என்பது மட்டுமே காரணமாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். 

 Rosalind Franklin என்ற பெண் ஆராய்ச்சியாளர் 1920-ல் பிறந்தார், 1958 ல் X கதிர் வீச்சு பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பின் டி.என்.ஏ இரட்டைச்சுழல் அமைப்பை (DNA double helix structure) கண்டுபிடித்தார். இதனைத் திருடி வெளியிட்டு நோபல் பரிசும் வாங்கினார்கள் வாட்சன் மற்றும் கிரிக் என்ற இரண்டு ஆண்கள். பள்ளி- கல்லூரி பாடபுத்தகங்களில் கூட வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ இரட்டை சுழல் அமைப்பைக் கண்டுபிடுத்ததாகவும், அதற்கான நோபல் பரிசு பெற்றதாகவும் கூறப்பட்டு, கற்பிக்கப்பட்டும் வருவது கொடுமை.

பெண் ஆராய்ச்சியாளர்கள் சந்திக்கும் தடைகள்

நான் படிக்கும் ஆராய்ச்சி நிலையத்தில் 14 ஆண்கள் உள்ளனர். ஒரே ஒரு பெண் விஞ்ஞானி தான் உள்ளார். அவரும் பார்ப்பனர் என்பது குறிபிடத்தக்கது. ஆய்வு மாணவர்களில் 30 பேர் ஆண்கள், 8  பெண்கள் அதில் 4  பேர் பார்ப்பனர்கள்.

எனது PhD Guide மற்றும்  seniors பார்ப்பனர். எனது ஆய்வு அதிக நேரம் ஆய்வகத்தில் தான். கற்றுக் கொடுக்க மறுத்தார்கள். முன்னுக்குப்பின் குறைகூறுவது, “நீ படித்து என்ன பண்ணப் போற?” என்று தாழ்த்துவது போன்ற தடைகளைத் தொடர்ந்து கொடுக்கையில் - நாம் ஆய்வு குறித்துச் சிந்திப்பதை விட, இந்தத் தடைகளைச் சமாளிக்க அல்லது உடைத்துத் தாண்டி வரத் திட்டமிடுதலில் தான் அதிக கவனமும், நேரமும் செலுத்தவேண்டியுள்ளது. இதில் என்னுடைய ஆய்வுபற்றிய சிந்தனை, வேலைகள் தடைபடுகின்றன. இவை அனைத்தும் இணைந்து இறுதியில் மிகப்பெரிய இழப்பாகக் குவிந்து முன்னேற்றம் தடைபடுகின்றன.

எனது நண்பர்களின் அனுபவம்

பெயர் குறிப்பிட வேண்டாம் (குறிப்பிட்டால் மேலே குறிப்பிட்டது போல இடையூறு களுக்குள்ளாக நேரிடும்). எனது நண்பர். இப்பெண்ணுக்கு கேரளாவில்லுள்ள அகஸ்த்தியர் மலையில் தான் ஆய்வுப்பணி. ஏற்கனவேயிருக்கும் சபரிமலைப் பிரச்சனை போன்று அகஸ்த்தியர் மலையிலும் வயது வந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கபட்டிருக்கிறது. ஆய்வுக்காக  மறைந்த மூத்த விஞ்ஞானி, முனைவர் பூபதி அவர்களின் பல முயற்சிளைத்தாண்டி ஒரு சில கட்டுபாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் பண்டிகை நாட்களில் செல்லக்கூடாது. வனத்துறை சொல்லும் காரணம் பாதுகாப்புக் கருதி அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியானால் யார் இந்தப் பாதுகாப்புக்குத் தடையாய் (பக்த்தர்கள்) இருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் காட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்படவேண்டும் . ஆனால் இங்கு பெண்களின் ஆராய்ச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது.

இவ்வளவு தடைகளை மீறி வெற்றிகரமாக இறுதிப் பயணத்தின் போது 28 ஏப்ரல் 2014-ல் மூத்த விஞ்ஞானி, முனைவர் பூபதி அவர்கள் அகஸ்தியர் மலையிலிருந்து கீழே இறங்கும் பொழுது தவறி விழுந்து இறந்து விட்டார். சொல்லவா வேண்டும் நம்மக்களுக்கு? இப்பெண் கலாச்சாரத்தை மீறியதால் தான் இப்படி நேர்ந்துவிட்டதாக பலி சுமத்தினர். தற்போது இப்பெண் (ஒடிசா பார்ப்பன பெண்) விஞ்ஞானியாக உள்ளார்.

அதித்தி முகர்ஜ்ஜி (Adity Mukarji) ராஜத்தானில் கிளியாடோ தேசிய பூங்காவில் (KNP) குகை விலங்குகள்(Burrow animals - எ.கா. மலை பாம்பு) பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவர் தங்கியிருந்த அறையில் ஒரு ஆண் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயற்ச்சித்தான். தற்போது வழக்கு நடந்துகொண்டிருப்பினும் முதலில் இப்பெண்ணுக்கு எதிராகவே இருந்தது. பல போராட்டங்களுக்குப் பின் நடவடிக்கைகள் எடுக்க தொடங்கினர்.  (வங்காளப் பார்ப்பன பெண்).

சாதரணமாகவே ஆய்வுப்பணி என்பது 24மணி நேரமும் சிந்தித்து எடுத்துக்கொண்ட பிரச்சனைக்கான தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும். அதிலும் வன உயிரின ஆராய்ச்சி என்பது உடல், மனம், மூளை என அனைத்தும் வலிமையாக இருந்தால் மட்டுமே பல வகையான காடுகளிலுள்ள மேடு, பள்ளம், விலங்குகள், மனிதர்கள் என அனைத்தையும் எதிர்கொள்ள முடியும்.

பெண்கள் இவை அனைத்திற்கும் தயாராக இருந்தால் மட்டுமே இத்துறையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அதையும்மீறி இவர்களுக்கே இந்நிலை என்றால் மற்ற துறையிலிருக்கும் பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்று நினைத்துபாருங்கள்.

பெரியார் - மணியம்மையார், காரல் மார்க்ஸ் - ஜென்னி இன்னும் சிலர் சாதி, பாலினம் போன்ற அடிமைப்படுத்தப்பட்ட அனைவருக்காகவும் போரடியதால் நாம் இன்று இதுவரை செல்ல முடிகிறது. ஆனால் இன்னும் முழுமையாக மாறவில்லை என்பதால் அடுத்த தலைமுறைக்காக நாமும் போரடிக்கொண்டிருக்கிறோம்.

ஆராய்ச்சியில் பெண்கள் 1950 - ல் ஓரிருவர் மட்டுமே இருந்தனர் 1990 களில் 10 சதம் உயர்ந்தது. 2000 - ல் சற்று உயர்ந்தது. இந்த உயர்வு பெரியார், அம்பேத்கர், காமராசர் போன்றோர்களால் சாத்தியமாயிற்று. ஆனால் மீண்டும் இவை அனைத்தும் இளங்களை, முதுகலைப் பட்டப் படிப்பு களோடு நின்றுவிட்டது. முதுகலையிலிருந்து ஆராய்ச்சியாளர்களாக 25% – 30% மும், ஆராய்ச்சி யாளர்களிலிருந்து விஞ்ஞானி அல்லது ஆசிரியர்களாக 10 ரூ க்கு குறைந்தவர்களாகவே இன்னும் இருக்கின்றனர்.

இந்தக் குறைபாடு முதுகலைப் பட்டதாரிகள் வேலைக்கோ அல்லது ஆராய்ச்சிக்கோ வராமல் திருமண வாழ்க்கையில் திணிக்கப்பட்டுவிடுவதால் / விருப்பத்துடனோ ஏற்றுக்கொள்வதால் இந்நிலை உருவாகிறது.