Kaviri arasiyalசுதந்திர இந்தியாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சனை தீர்க்கப்படாமல் ஒரு மாநிலம் வஞ்சிக்கப்பட்டுவருவது ஜனநாயகத்தின் தோல்வி. மத்தியில் ஆளக்கூடிய இரண்டு கட்சிகளும் கர்நாடகாவில் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்வதை மட்டுமே சிந்திக்கின்றனர். இந்திரா காந்தி முதல் மோடி வரை வந்த பிரதமர்களில் ஒருவர் கூட தங்கள் வாக்குவங்கியை பற்றி கவலைப்படாமல், நியாயத்தின் பக்கம் நிற்காதது வருத்தத்திற்குரிய விஷயம். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் செயல்படும் கர்நாடக மற்றும் மத்திய அரசுகள் மேல் நடவடிக்கை எடுக்கும் துணிவு நீதிமன்றத்துக்கும் இல்லை. அமைதி வழியில் இருக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் முயற்சி செய்த பிறகும், தமிழகத்திற்கான நீதி கிடைக்கவில்லையெனில், பிரிவினைக்கே வழிவகுக்கும்.

ஒரு மாநிலத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையில் உச்சநீதி மன்றத்தின் இறுதித்தீர்ப்பில் கடைசி நிமிடம் வரை எந்த ஒரு முடிவும் எடுக்காமல், அதற்குக் காரணமோ, மக்களுக்கு ஆறுதலோ, நம்பிக்கையோ சொல்லாத பிரதமரை நாம் தமிழர்களின் துரோகி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை உதிரும் மயிருக்கு இணையாகக் கூட மத்திய அரசு மதிப்பதில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாககாவிரி விவகாரத்தில் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரே ஒரு பிரதமர் கூட நியாயத்தின் பக்கமோ தமிழர்களின் பக்கமோ நிற்கவில்லை என்பது துருதிஷ்ட்டமானது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசையோ, கர்நாடக அரசையோ கண்டிக்கும் துணிவு உச்சநீதி மன்றத்திற்கு இல்லை என்பது வெட்கக்கேடானது.

பிரிவினைக்கு வழிவகுக்கும் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். தமிழ்நாடு-தனிநாடு என்ற கோரிக்கைக்கு இவர்களே வலு சேர்க்கிறார்கள். நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்திடம் தமிழகம் எதிர்பார்ப்பது ஆறுதலை அல்ல. நீதியை என்பதை இவர்கள் எப்பொழுது புரிந்துகொள்ள போகிறார்கள். மத்திய அரசும் - கர்நாடகவும், தமிழகத்திற்கு இழைத்த துரோகத்தைதான் ஆவணப்படுத்துகிறது இந்த புத்தகம்.

நூல்: காவிரி அரசியல்
ஆசிரியர்: கோமல் அன்பரசன்
பதிப்பகம்: தமிழ் திசை
விலை: ரூ.225

- தங்க.சத்தியமூர்த்தி