துகளாய் மேவிய பொடிமணலன்றி
வேறென்ன இருக்கிறது கரையில்?
பொங்கி நுரைத்தழியும் புத்தலையும் பழையதே
பூரித்து மகிழ ஏதுமில்லை நீர்க்கோட்டில்
விரைத்த பிணம் போலிருக்கும் நடுக்கடலின் மௌனம்
துவளவைக்கிறது கிளர்ச்சியுற்ற மனத்தை
மீனின் கண்ணொன்றில் தங்கி
ஆழம் ஆழமென அகழ்ந்து பாய்கையில்
கடலும் தரையும் கக்கத்தில் விலக
மண்ணுக்குள் புதைகிறேன்
மறைந்திருக்கும் அற்புதங்கள் தேடி.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)