மேடு பள்ள வழிகளை
பெரிதும் விரும்புகிறேன்
பாறை ஏறி நீரில் இறங்குவது
பிடிக்கிறது
தொலைந்து விடுதலின் மகத்துவம்
கிடைத்து விடுதலில் இல்லை
ஏதேதோ புரிகிறது
ஒவ்வொரு முறையும் உணர்கிறேன்
துருவம் எங்கே மறக்கிறேன்
இலையும் அசைவும் மனதுள்
இதயம் மீட்டும் பூங்குருவிகள்
மரம் பேசும் அருவி பாடும்
அரூப அசைவென
வந்து போகும் யாகமென
ஒரு கூடு விடுதலின் நிம்மதி
வனமெங்கும்
இதோ இம்முறையும்
இப்படி கண் விழித்தபடி
முணுமுணுத்தபடி
மலை ஏறுகிறது ஒரு பெருந்தவம்...!

- கவிஜி