ரெண்டு சம்சாரத்துக்காரன்
செய்த தில்லாலங்கடி
கொழுத்த பணக்காரன் ஒருத்தன்
பண்ணின பாங்கு
போதையேற்றி
சதா ஆடித் திரிந்தவன்
எவனோ ஒருவனின் கை வண்ணம்
கடைசி வரை யாரும் மாட்டாமல்
தனியாக மரத்தடியில் தூங்கியவன்
வெச்சு செதுக்கியது
தனையே மாடலாக்கிய ஓவியன்
செய்த சித்து
பிற்கால சந்ததியினருக்கு
முகம் எது உடல் எது என
தெரியவா போகிறது என்ற
முன்னொரு வடிவேலு செய்த
முகம் மாற்று சிரிப்பு
போதாததற்கு இசையில்
கூடவே அகப்படாத திசையில்
தொந்தி கனவான் உடைத்த தேங்காயை
வயிறு ஒட்டியவன் பொறுக்குகையில்
தோன்றியது
கடவுள் என்பவன்
வலுத்தவனின் வாரிசும்
இளைத்தவனின் கூழைக் கும்பிடும்

- கவிஜி