நம்புகையில்
நம்பாத ஒரு துளி தான்
பெரும் பாறை
சிரிக்கையில்
அழுவது மாதிரி சித்திரம்
நீரினில் இல்லை
இசைக்க மறந்திருக்கும்
சில போதுக்கும்
அர்த்தம் இருக்கிறது
நீண்டு வளைகையில்
உடைவது தானே இயல்பு
கொட்டி விடும் துளியெல்லாம்
பொட்டு வேட்டுகள்
உணர்கிறேன்
மிகு நுட்பமாக
நன்னோடை கவிழ்ந்து
முகம் பார்க்கிறேன்
நகர்ந்தபடியே நிற்பது
நிபுணத்துவத்துக்குரியது
இருந்தபடியே நகர்வது
கவிதைக்குரியது
ஒரு பெருமூச்சுக்குப் பின் தோன்றுகிறது
விடாப்பிடியாக
பற்றிக் கொண்டிருக்கும்
என்னைத்தான்
விடாபிடியாக இப்படி
விட்டுக் கொண்டிமிருக்கிறேன்

- கவிஜி