வெடியில்லா வளி...
விவரங்கள்
கோ.சுனில்ஜோகி
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2019
தீபாவளி
ஆனைவெடி
லட்சுமி வெடிகளின்
சப்தங்கள்
ஏக்கம் கூட்ட
'மாதி' பாட்டியின்
கெடுபிடியால்
வெடிக்கப்படாத
பட்டாசுகளோடு
மிச்சமிருக்கிறது
பெயர் தெரியாத
பறவையொன்றின்
கூடும்
கூடு நிரம்பிய
அன்பும்....
- முனைவர் கோ.சுனில்ஜோகி