ஒரு இருளின் துவக்க நாட்கள் இவை
பாதாள நரகத்தின் வாசலில் நீங்கள்
மக்களின் மரண ஓலங்கள் இங்கே!
உங்களுக்கு எதுவெலாம் வேண்டாமோ
அதுவெலாம் இனி உங்கள் தலையில்.....

ஜனநாயகம் ஜனநாயகம் என
கத்தும் மனிதர்களை நோக்கி
இதோ "தேசத்துரோகி...
இவனை நாடுகடத்துங்கள்" என்பார்கள்
நரகத்தின் காவலாளிகள்!

நீங்கள் அழுது புரண்டாலும்
மீளும் வழி இல்லை
உங்கள் குரல்வளையை நெறித்து
ஜெய்ஹிந்த் என்பார்கள்!

பயப்படாதீர்கள்!

சிறுகீற்றாய் ஒரு "நெருப்புத் துளி"
உங்கள் வசம் உள்ளது
அதை உங்கள் அருகில் உள்ளவர்களின்
உள்ளங்களில் பற்ற விடுங்கள்!

அது அதிகாரத்தை அடக்கும் நெருப்பு
எதற்கும் அஞ்சாத கருப்பு

எரியும் அந்த பெருநெருப்பு
இருட்டின் திரைவிலக்கும்!
அடிமைச் சங்கிலியை அறுக்கும்!
பாதாள வாயில் திறக்கும்!
சமத்துவ வழி பிறக்கும்!

அது "பெரியார்" எனும் நெருப்பு
அது அறிவின் பெருவெளி!

- கவுதமி தமிழரசன்