தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் 20-02-2011 அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து அவரது இறுதி எரிநீற்றை வங்கக் கடலில் கரைக்கும் நிகழ்வு 22.03.2011 செவ் வாய் அன்று சென்னை மெரினா கடற் கரையில் மிகுந்த எழுச்சியோடு நடை பெற்றது.

திருவாளர்கள் பழ. நெடுமாறன், வைகோ, எம்.நடராஜன், ஆவடி மனோகரன், மல்லை சத்யா, ஓவியர் வீர சந்தனம் எனப் பல தலைவர்கள், முன்னோடி ஆதரவாளர்கள் மற்றும் பெருந் திரளான உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் முழக்கமிட்ட எழுச்சியும் ஆவேசமும் தமிழீழ விடுதலை யின் பால் அவ்விடுதலைக்கான போராளி அமைப்பின்பால் தமிழர்களுக்கு உள்ள அக்கறையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

எப்படிப்பட்ட சூழ லிலும் சோர்வுக்கோ தளர் வுக்கோ உள்ளாகாது தமிழக மக்களிடம், மங்காத தண லாகக் கனன்று கொண்டிருக் கும் இந்த உணர்வைப் பார்த்து பெருமிதமும் பூரிப்புமடையும் அதே வேளை, இத்தோடு தொடர்புடைய வேறு சிலவற்றைப் பற் றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒன்று பார்வதியம்மாளின் இறுதி விருப்பங்களில் ஒன்றாக அவர் முசிறி யில் தங்கி ஓய்வு பெற நினைத்து அது இயலாமலேயே போனது. அவர் தமி ழகத்தில் தங்கி சிகிச்சை பெற நினைத்து அதுவும் நிறைவேறாமலே போனது. தவிரவும் தன் மகன் தலைமையில் நடந்த தமிழீழ விடுதலைப் போராட் டத்தின் இலக்கை தன் மகன் தலைமை யில் அமைந்திருக்க வேண்டிய சுதந் திரத் தமிழீழம் என்னும் இலட்சி யத்தை மகன் அடையவோ, அதை அவர் காணவோ இயலாமலே போனது.

இம்மூன்றுக்கும் காரணம் என்ன என்று யோசித்தால், அனைத்துக்கும் காரணம் தில்லியை ஆளும் காங் கிரசும், தமிழகத்தை ஆளும் திமுகவும் தான் என்றே தெரியவரும். இவ் விரண்டு கட்சிகளுமே தமிழீழ மக்கள், தமிழீழ விடுதலை என்னும் இலட்சியத் தைத் அடையவிடாது தடுத்ததுடன் பல்லாயிரக் கணக்கான போராளி களையும் பொது மக்களையும் கொன்று குவித்து சிங்கள அரசுக்குத் துணையாக நின்றன.

இதை ஏன் தமிழக மக்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை? தமிழக மக்கள் உணர்வற்றவர்களாகிப் போய் விட்டார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. அவர்கள் எப்போதும் போல உணர்வோடும் தகிப்போடும்தான் இருந்தார்கள். இருக்கிறார்கள். ஆனால் அவர்களது உணர்வுகளை ஒருங்கிணைக்க, வடிவமைக்க, அதை முறையான வழிகாட்டுதலோடு கள மிறக்கி மக்கள் போராட்டங்களை முன் கொண்டு செல்லத்தான் தமி ழகத்தில் தலைவர்கள் இல்லை. அமைப்புகள் இல்லை. இருக்கிற தலைவர்களுக்குள்ளும் தமிழக, தமிழீழ உரிமைகளுக்குப் போராடுகிற ஒரு நிலைத்த அணி சேர்க்கை இல்லை.

இதனுடைய விளைவுதான் தமி ழகத் தமிழினம், தாய் மண்ணின் உரி மைகள் பற்றிய சிந்தனையே இல்லாது, அது பற்றிப் போராடும் விழப்பே இல் லாது அண்டை மண்ணில் நடை பெறும் தொப்புள் கொடியுறவின் போராட்டத்துக்குப் பார்வையாள னாகி, அப்போராட்டம் வெற்றி பெறும் தருணங்களில் கைதட்டிப் பாராட்டி, பெருமை பேசி மகிழ்வதும், இழப்பு ஏற்படும் தருணங்களில் கண்ணீர் சிந்தியும் இரங்கல் தெரி வித்தும் தன் இயலாமையை வெளிப் படுத்துவதுமான இனமாக மாறிப் போயுள்ளது.

ஜூலை 83 படுகொலையைத் தொடர்ந்து அதற்கும் முன்னதாகவும் இருந்தே கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நாம் தமி ழீழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தாலும், அதன் வெற்றிப் பாதைக்கு வழி என்ன என்கிற சிந் தனையே இல்லாமல் வெறும் மந்திர உச்சாடனம் போல “விடுதலைப் புலிகள் வென்றே தீரு வார்கள், தமிழீழம் மலர்ந்தே தீரும்” என்று முழக்கமிட்டுக் கொண்டு, போராளிகளும் பொதுமக்களும் மாபெரும் இழப்புகளைச் சந்திக்க விட்டு, அதற்காக நாம் கண் ணீர் சிந்தி இரங்கல் நிகழ்வு களை நடத்திக் கொண்டிருப் பவர்களாகவே இருந்தோம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த முப்பது ஆண்டுகளில்தான் எத்தனை நிகழ்வுகள். தியாக தீபம் திலி பனைப் பறி கொடுத்தோம். புலேந்திரன் குமரப்பா உள்ளிட்ட 17 போராளிகளின் உயிரிழப்புக்கு பரித வித்தோம். யாழ் தளபதி கிட்டு உள் ளிட்ட போராளிகள் பலரை, வங்கக் கடலில் இந்தியக் கடற்படை காவு வாங்கவிட்டோம். ஆண்டன் பால சிங்கம் தமிழகத்தில், இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற வாய்க்காமல், போதுமான மருத்துவ வசதியின்றி விரைவில் அவர் மறைய பார்வை யாளராக நின்றோம். இந்திய உளவுத் துறையின் காட்டிக் கொடுத்த கய மைக்குப் பலியான படைத் தளபதி தமிழ்ச்செல்வனைப் பறிகொடுத்தோம்.

இடையில் இலங்கையின் இன வெறி விமானப்படைத் தாக்குத லுக்குப் பலியான செஞ்சோலைச் சிறுமிகளுக்கு அஞ்சலி செலுத்தி னோம். இப்படி எத்தனை இழப்புகள். இவ்வாறு போராளிகளும் பொது மக்களும் அவ்வப்போது மடிய இவர் கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத் தவும், இரங்கல் தெரிவிக்கவுமா நாம் பிறந்தோம். இதுவா நாம் ஆற்ற வேண்டிய கடமை. இதற்குமேல் நாம் செய்வதற்கு வேறு எதுவுமே இல் லையா? அல்லது செய்வதற்குத் திராணியில்லையா? அப்படித் திராணி யற்றவர்களாக வக்கற்றவர்களாக தமிழ்ச் சமூகம் மாறிப் போயிருக்கிறது. தமிழ்ச் சமூகத்துக்கு ஏன் இந்த நிலை.

இவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடுவது யாரையும் குற்றம் சாட்டவோ குறை சொல்லவோ அல்ல. எனவே, போனது போகட்டும். ‘சென்றதினி மீளாது’ என்கிற தெளி வோடு கடந்தகாலம் பற்றிய மனக் குமுறல்களைத் தவிர்த்து அதிலிருந்து பாடம் பெற்று இனி வரும் காலங்களி லாவது நாம் விழிப்போடும், உணர் வோடும் இருந்து நாம் நம் உரிமை களுக்காகப் போராடும் இனமாக அதன் வழி நம் சகோதர இனத்துக்கும் உதவும் இனமாக மாறுவோம். மாற வேண்டும். அதற்கான ஊக்கமும் ஆக்கமும் பெறவேண்டும் என்பதற் காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

இப்படி யோசித்துப் பாருங்கள். தாய்த் தமிழகம் மட்டும் உரிமை பெற்ற இனமாக, சுதந்திரத் தமிழகமாக இருந்திருந்தால் தமிழகத் தமிழர்களுக் கென்று சுதந்திர அரசு, தமிழ்த் தேசக் குடியரசு, அதற்கென்று ஒரு ராணுவம், கப்பல், விமானப்படை எல்லாம் இருந்திருந்தால் தமிழீழ மக்களுக்குப் போராளிகளுக்கு இந்த அவலம், பின் னடைவு நேர்ந்திருக்குமா. நேர விட்டிருப்போமா.

சரி, சுதந்திர அரசுதான் இல்லை. குறைந்த பட்சம் நமக்கான அடிப்படை உரிமைகளுக்காகவாவது நாம் போரா டினோமா - அதாவது எம் தாய்நாட் டில் எம் மண்ணில் யார் வந்து தங் குவது, மருத்துவ சிகிச்சைகள், உதவிகள் பெறுவது, நாம் யார் யாருக்கு உதவு வது, எப்படிப்பட்ட உதவிகள் செய் வது, யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப் பது என்பது போன்ற உரிமைகள் பற்றியாவது சிந்தித்தோமா, இந்த மாதிரி உரிமைகளுக்காகப் போராடி யிருந்தால் கூட நாம் தமிழீழ மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும். அவர் களுக்கு ஏற்பட்ட இழப்பைத் தடுத் திருக்க முடியும். ஆனால் எதையுமே செய்யாமல் விட்டோமே என இப் படிப் பல்வேறு கோணங்களில் சிந்திக்க இந்த இழப்புகளின் காரணம் புரியும்.

இறுதியாக ஒன்று, திரும்பவும் சொல்கிறோம். இந்த இரங்கல், கண்ணீர் சிந்தல்களைப் பற்றியெல் லாம் குறிப்பிடுவது இந்த உணர்வு களைக் கொச்சைப்படுத்தவோ குறை கூறவோ அல்ல. அப்படி யாரும் பொருள் கொண்டுவிடக்கூடாது. மாறாக இது மட்டுமே ஒரு இனத்தின் வேலையல்ல. இதற்கு மட்டுமே ஓர் இனம் பிறந்திருக்கவில்லை. விதிக்கப் பட்டிருக்கவில்லை. மாறாக, போரா டும் இனத்திற்கு உதவும் இனமாக மாற நாமும், அதற்குரிய உரிமை பெற்ற இன மாக இருக்க வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். இப்புவிக் கோளில் வாழும் எந்த இனமும் உரிமை பெற்ற சுதந்திர இனமாக சமத்துவமிக்க இனமாக வாழ வேண்டும். இப்பூமிப் பந்தில் சுதந்திரமாக வாழும் எல்லா இனங்களையும் போலவே தமிழகமும், தமிழீழமும் எல்லா உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

Pin It