ஓர் அகதியின் வாழ்க்கையை
உனக்கு
புரிந்து கொள்ள முடியுமா
எனக்கு முடியாது

எல்லா சவுகரியங்களும்
நிறைந்த நம் வாழ்க்கையில்
கண்ணாடி தம்ளர்களுக்கு
சரக்கூற்றித் தருவது
அவனின் வேலை

நாடேறி வந்ததால்
நடுங்கும் உள் கரங்களினூடே
மேசைகளை சுத்தம் செய்கிறான்

இடிந்து விழுந்த
வீடுகளினூடே தனது உயிருக்காய்
குரலெழுப்பும் வாய்களினூடாக
உள் நுழைந்து வெளிவரும்
சாகசம் தெரியுமென்று
பீற்றிக் கொள்கிறாய்

ஈழத்தில்
உனக்கு வீடில்லையென்று
மகிழ்ச்சி கொள்கிறாய்

சாவகாசமான
எங்கோ ஓரிடத்தில்
வீட்டு மனை வாங்கி
ஈழத்திற்குக்
கிழிந்த உடையும் நைந்த உணவும்
அனுப்பிவைப்போம்
நாம் நடுத்தரம்.