சினிமா... மனித மனங்களை எளிதில் கவ்வி பிடிக்கும் சக்தி கொண்டது, நல்ல செய்திகளை சொல்ல வேண்டிய இந்த கலை, நஞ்சையும். அபத்தத்தையும் விதைத்துக் கொண்டிருக்கிறது, அந்த வகையில் எந்திரன் படம் வெளிவந்துள்ளது.

எந்திரன் இந்த பெயர் உச்சரிக்கப்படாத உதடுகளே இல்லை என்ற நிலை திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா சாமானிய மக்களின் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி பெரு முதலாளிகளின் கூடாரம் என்பதற்குஉதாரணம் எந்திரன். திரைத்துறையில் ஏகபோக முதலாளித்துவ அமைப்பிற்கு வித்திட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செல வில் (120கோடி) சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்து பெற்ற நடிகர் ரஜினிகாந்த், உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கர் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது எந்திரன்.

பிரம்மாண்டம் என்ற பெயரால் நச்சுக்கருத்துக்களையும், சமூகநீதிக்கு எதிரான விஷத்தை உமிழ்ந்து வரும் சங்கர், இதில் உலகமயத்தின் நோக்கங்களையும், மனித மாண்புகளை சிதைக்கும் கருத்துக்களையும் திணித்துள்ளார்.

இந்த படத்தை ஐயங்கரன் நிறுவனத்திடம் பலப்பிரயோகம் செய்து தயாரிப்பை தன்வசமாக்கிக் கொண்டது சன் பிக்சர்ஸ். எந்திரன் தயா ரிப்பு குறித்த செய்திகளை ரகசியமாக வைத்து ரசிகனின் பொது புத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் யுக்தி நன்றாகவே கையாளப்பட்டது.

விஞ்ஞானி(ரஜினி) ஒரு ரோபோவை தயாரிக்கிறார், அதனை ராணுவத்தில் சேர்க்க விரும்புகி றார், ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது. ரஜினி உருவாக்கிய ரோபோவை, வில்லன் தீவிரவாத சக்திகளிடம் விற்க முயற்சிக்கிறார். இதற்காக ரஜினி காந்திற்கு பல தடைகளை அவர் உருவாக்குகிறார். திடீர் விபரீதமாக விஞ்ஞானி ரஜினியின் காதலி ஐஸ்வர்யா ராய் மீது ரோபோவிற்கு (எந்திரன்) காதல் ஏற்படுகிறது. இறுதியில் வில்லனிடம் கதா நாயகன் உருவாக்கிய ரோபோ கிடைக்க அவர் அதை தவறான செயல்களுக்கு பயன்படுத்த முனை கிறார். இதை தடுக்க கதாநாயகன் முயற்சிக்கிறார் என்று நீளும் கதை இறுதியில் எல்லா தமிழ் சினிமாவையும் போல் சுபத்தில் முடிகிறது.

இந்தியா போன்ற வளர்முக நாடு களில் ராணுவத்திற்கு செய்யும் செலவுகளை குறைத்து அதனை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை முற்போக்கு இயக்கங்கள் வலியுறுத்தும் நேரத்தில், மேற்கத்திய நாடுகளை போல் ராணு வத்தில் ரோபோக்களை பயன்படுத்தலாம் என்ற கருத்தை இயக்குநர் சங்கர் முன்வைக்கிறார். வளர்ந்து வரும் சமூகத்தின் பொது புத்தியில் ஒரு தவறான கருத் தையே பதிவு செய்கிறார். சினிமாத் தனத்திற்காக ரோபோவிற்கு காதல் வருவது போல் காட்டுவதும், நாயகியிடம் முத்தம் கேட்டு நள்ளிரவில் அவள் வீட்டுக்குள் ரோபோ புகுவதும், தமிழ் சினிமாவின் கேடு கேட்ட அடையாளங்களில் ஒன் றான வில்லன்கள் நாயகியை கற்பழிக்க முயல்வதும் அதனை ரோபோ தடுப்பதும் போன்ற அம்சங்கள் ரோபோ என்ற விஞ்ஞான அதி தீவிர பரிணாமத்தின் படைப்பின் மீது சுமத்தப்படும் கரையாகவே உள்ளது.

ரஜினி என்ற மனிதனை நடிகனாக உயர்த்திய சாமானிய ரசிகனி¢ன் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஜினியின் ஊதியம் லட்சங்களை கடந்து கோடிகளை தொட்டுள்ள போதும், கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் ஒரு பாமரத்தனத்தோடு ரசிகர்கள் உள்ளனர். தொலைக்காட்சிகளில் 3 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த படத்தின் விளம்பரத்தை ஒளிபரப்பி எரிச்சலை ஏற்படுத்துவதோடு, ரசிகர்கள் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதையும், மண் சோறு சாப்பிடுவதையும், மொட்டை அடித்துக் கொண்டதையும் தலைப்புச் செய்தியாகவே ஒரு சில நாட்களுக்கு ஒளிபரப்பியது மற்றுமொரு கொடுமை.

ஏகபோக முதலாளித்துவத்தை திரைத்துறையில் புகுத்தி ஜாம்பவான்களாகிய ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம் போன்றவர்களையே ஆட்டம் காண வைத்திருக்கும் புது முதலாளியாக உருவெடுத்துள்ளது சன் குழுமம். எந்திரன் திரையிட்ட ஒரு வாரத்திலேயே 500 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. சினிமா என்பது சமுதாயத்தை கட்டமைக்கும் ஒரு ஊடகமாக பார்க்கப்படும் நிலை மாறி, சன் குழுமம் சமூகத்தை, கலாச்சாரத்தை சீரழிக்கும் சாதனமாக பயன்படுத்துகிறது.

ரசிப்பவன் ரசிகன் எந்த படைப்பு வந்தாலும் அதன் தரத்திற்கேற்ப ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால், எந்திரன் பட விளம்பரம் பெரும்பாலான ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பட்டு மக்கள் மத்தியில் திணிக்கப்படுவது ஒருவித பயங்கரவாதமே. திரைப்படத்துறையில் சர்வதேச அளவில் கால் பதிக்க சன் குழுமம் மேற்கொண்டுள்ள முயற்சியானது, தமிழ் சமுகத்தில் பெரும் சவால்களை உருவாக்கி உள்ளது. கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் பிரச்சனைகளை கூறும் குறைந்த செலவிலான படங்கள் இனி உருவாகமால் பார்த்துக் கொள்ளும் பணியையும் சன் குழுமம் செய்து வருகிறது. வரிவிலக்கிற்காய் எந்திரன் என்ற தமிழ் பெயரை தாங்கி வந்திருந்தாலும், மொத்தத் தில் ஜெட்டிக்ஸ் சானலில் கார்ட்டூன் படத்தை பார்த்த அனுபவத்தையே ஏற்படுத்துகிறது.

அறிவியலின் உச்சமா?: விமல்

எந்திரன் அறிவியலின் உயரத்தை தொட்டுவிட்டது , அறிவியலை நன்றாக பயன்படுத்தி உள்ளனர், கையாண் டுள்ளனர் என பல ஊடகங்கள் விமர்சனம் தெரிவித்து உள் ளனர். எந்திரனில் அறிவியல் கற்பனையும் அறிவியல் சார்ந்த காட்சிகளும் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை , ஆனால் மொத்த அறிவியலும் ஒரே ஒரு காட்சியில் , வசனத்தில் அடி பட்டுவிட்டது. சிட்டிபாபு என்ற ரோபோவை அனைவர் முன் னிலையிலும் விஞ்ஞானி டாக்டர். வசீகரன் அறிமுகப் படுத்துவார். அப்போது பார் வையாளர்கள் கேட்கும் கேள்வி களுக்கு பதில் அளிக்கும் போது .இறுதியில் ஒருவர் எழுந்து , "கடவுள், இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்பார். அதற்கு சிட்டி, "கடவுள்னா என்ன?" என்று கேட்கும்.

அந்த நபர், "கடவுள்னா நம்மள படைச்சவர் " என்பார். உடனே சிட்டி ,"என்னை படைச்சது டாக்டர். வசீகரன் எனவே கடவுள் இருக்கிறார் " என்று சொல்லும் . இதை மேலோட்டமான பார்வையில் பார்த்தால் ஒரு வசனம் ஆனால் ஆழ்ந்து நோக்கும்போது சமூகத்தில் நிலவும் மிகப் பெரிய பிரச்சனைக்கான காரணியை ஆதரிக்கும் ஒரு செயல்பாடு , சிந்தனை. கடவுள் ஒரு கற்பிதம் என்றார் சமூக விஞ்ஞானி பெரியார். படைப்பு என்ற கோட்பாடே ஒரு கற்பிதம் என்றான் இயற்க்கை விஞ்ஞானி டார்வின் (கி.பி. 1858). Origin of Species, Das Capital, Theory of Relativity போன்றவற்றை தடை செய்திருந்த வாடிகனே கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் டார்வினிசத்தை ஏற்று கொண்ட தாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆக படைப்பு என்பதே அர்த்தமில்லாமல் போகும் போது படைத்தவனுக்கு இங்கு இடம் ஏது?

இன்றைய சமூகத்தில் நிலவும் சாதிய மத பிரச்சனைகளின் பிறப்பிடமே கடவுள், எனவே கடவுளை எதிர்ப்போம் என்றார் பெரியார். ஆனால் இத்தனை பிரச்சனைகளுக்கு காரண மான கடவுளை, அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆதரிப்பது என்பது , மதம் மற்றும் சாதிய ரீதியாக மக்களை சுரண்டும் ஒரு சிறு பகுதியினரின் நலனை மேலும் உயர்த்த வும் அவர்கள் செய்வது சரி என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் கடவுளின் இருப்பை தக்கவைக்கவும் செய்யும் ஏற்பாடே ஆகும். ஆனால் ஒரு தேசம் அல்லது சமூகம் எவ்வளவுதான் அறிவியல் அறிவு பெற்றிருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும் அந்த சமூகம் சரியான அறிவியல் பார்வை கொண்டிருக்கவில்லையெனில் அந்நாடு அறி வியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தன்னிறைவு அடையாது அறிவியலும் தொழில்நுட்பமும் ஒரு குறுப்பிட்ட வர்க்கத்துக்கு சொந்தமாகவும் சார்புடையதாகவும் இருக்கும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் இயக்குனர் திரைக்குப் பின்னால் உள்ள கருத்து முதல்வாத சிந்தனைக்கு அறிவி யல் முலாம் பூசி வலுப்படுத்தியுள்ளார். இன்னும் இயக்குனர் திரு. ஷங்கர் போன்ற மேதைகளுக்கு புரிய வேண்டிய மொழியில் கூற வேண்டுமானால்

Enthiran, the Robot'A coating the name of the science and technology on the screen for the idealistic thoughts behind the screen.

Pin It