மே 30 - 2007ல் வெளிவந்த ஆனந்த விகடனில் இது அல்லவா போர் தர்மம்! (பக்கம்-153) என்ற ஆசிரியரின் கட்டுரையை படிக்க நேர்ந்தது.

அந்த கடைசி வரிகள் “போர் தர்மம் மீறப்படும்போதும் புலி ஆதரவுக் குரலை ஒலிக்கும் தலைவர்கள்.... முற்றிலுமாக நம் மண்ணையும் மனதையும் விட்டு அந்நியப்பட்டுபோவார்கள்.”

AnanthaVikatanஆக ஆனந்த விகடன் சொல்ல வருவது நம் மண் என்று உன் வீட்டோடு வைத்துக்கொள் அடுத்த வீட்டின் துன்பங்களில் அக்கறை எடுக்காதே என்றா?

போர் தர்மம் மீறப்படும்போது என்று இங்கே ஆசிரியர் யாரை குறிப்பிட வருகிறார்?

சரி இதவிடுங்க

மே 23 -2007ல் வெளிவந்த ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் “இப்போ நான் செக்கச் சிவப்பே - ரஜினி பாலிஸ் ரகசியம்” என்று பம்மாத்து தலைப்புகளை கொடுத்து 10ரூபாய்க்கு ஆனந்த விகடனை வாங்கத் தூண்டுகிறது. சரி அதிகம் வாங்குபவர்கள் யாரையா? நடுத்தரவர்க்க மக்கள் . வாங்கி வாங்கியே சில வருடங்களில் நடுத்தெருவுக்கு வருகிறார்கள். சரினு வாங்கி உள்ளப்பார்த்தா ரஜினி கெட்ட பழக்கங்களை மாத்திட்டாராம்! இதுவாய்யா நாட்டுக்கு தேவை?

“சிவாஜி” படத்துக்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே தலைகீழ்மாற்றம் என்று ரஜினி பற்றி அக்கட்டுரை குறிப்பிடுகிறது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே தலைகீழ்மாற்றம் இது ரஜினிக்கு பொருந்துவதைவிட விகடனுக்கு நன்றாகவே பொருந்துகிறது. சிவாஜி படம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை ரஜினி பற்றி சொன்ன செய்தி அளவாவது ஈழத்தில் சாதரணமான தமிழ்மக்கள் படும் அவலநிலையை சொல்லியிருக்கிறீர்களா?

பிரேமானந்தாவின் ரகசியங்களை கண்டறிந்த விகடனுக்கு சங்கராசாரியாரின் ரகசியத்தை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல் இருக்கக்கூடும்? தமிழனின் முகவரி என்று ஆனந்தவிகடனின் அட்டைப்படம் சொல்கிறது. சரி அது இருக்கட்டும் ஆனந்தவிகடனின் முகவரி எது?

போர்த்தளங்களுக்கே சென்று அங்கு நடக்கம் நிகழ்வுகளை வெளியிடுவதற்கென்றே சில பத்திரிக்கைகள் இருக்கின்றன. அவர்கள் எழுதட்டும் “இது அல்ல போர் தர்மம் என்று”

கோடம்பாக்கத்தைபற்றி எழுதினோமா, கோட்டையைப்பற்றி எழுதினோமா என்று அந்த அளவில் நி...

- நீ 'தீ"