பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு

FDI என்றால் என்ன?

அன்னிய நேரடி முதலீடு (Foreign direct investment, FDI) ஒரு நாட்டில் மற்றொரு நாட்டு நபரோ நிறுவனமோ தயாரிப்பு அல்லது வணிகத் துறையில் நேரடியாக முதலீடு செய்வதாகும். இத்தகைய முதலீடு அந்நாட்டில் உள்ளதோர் நிறுவனத்தை வாங்குவதன் மூலமோ அல்லது தனது நிறுவனத்தினை விரிவுபடுத்துவதாலோ இருக்கலாம். இது அந்த நாட்டு நிறுவனங்களின்பங்குகளிலோ அல்லது பிணைப்பத்திரங்களிலோ முனைப்பற்ற முதலீடு செய்வதல்ல. (இவை அரசின் வார்த்தையில்).

முதலாளிகள் கொள்ளையடிக்கவே உலகு

அவர்களின் காலடியில், நாட்டின் தனியார்துறை- சுதேசி முதலாளிக்கும், அந்நிய நேரடி முதலீடு-ஏகாயபத்திய கொள்ளையர்களுக்கும்.

அன்னிய நேரடி முதலீடு எதற்க்கு?  

உலகவர்த்தக கழகத்தின் ஆணைக்கினங்க ஜனவரி 1995 ல் General Agreement on Tariffs and Trade (GATT) ஒப்பந்தம் ஏகாத்தியபத்தியத்தின் தேவைக்காக அமெரிக்க ஐரோபிய யூனியன் மற்றும் பெருமுதலாளிகளின் தொழில் வளர்ச்சிக்கு 60 நாடுகள் 500 கம்பெனிகளின் தொழில் நாடுகடந்து நாட்டின் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டு அந்த நாட்டின் எந்தபகுதிக்கும் எதையும் செய்யும் அதிகாரம் கொண்டவையே இந்த அன்னிய நேரடி முதலீட்டார்கள், எந்த நாட்டின் சட்டமும் இவர்களை கேட்கமுடியாது அமெரிக்க சட்டம் மட்டுமே இவர்களை கேட்கும் உறிமை கொண்டது. அன்னிய நேரடி முதலீடுகளால் பிந்தங்கிய வளர்ச்சி நிலையில் உள்ள இந்திய சமுதாயத்தை மேல் நிலைக்கு கொண்டுவரும் ஒரே வழி என்றும் தடைகளை அகற்றி FDI யை வரவேற்பவர்கள் நாட்டுபற்றாளர்களாகவும் எதிர்பவர்கள் பிற்போக்காளர்கவும் ஊடகங்கள் உருமுகின்றன.

அன்னிய நேரடி முதலீடால் எற்படும் மாற்றங்கள்!

தாரளமயம், தனியார்மயம் தொடங்கிய சில ஆண்டுகளிலே 2003 லிருந்து 2008 க்குள் பல நாடுகள் காட் ஒப்பந்தத்தை எதிர்த்து போர்கொடி தூக்கியுள்ளன இவை முதலாளிதுவத்தின் முடிவுரையா என்று பல வல்லரசுகளே சிந்திக்கும் நிலைக்குள்ளயின. பல நாடுகள் திவாலாகி மக்கள் போராடிய போது அவற்றை ஏகாத்தியபத்தியம் திசைதிருப்பி உள்நாட்டு கலங்களாக்கி தற்காலிக வெற்றிகண்டது. அன்னிய நேரடி முதலீடு என்பது பாம்பின் விசமே(poison) அதை வளர்ந்துவரும் நாடுகளின் இரத்த நாளங்களில் (பொதுதுறை மற்றும் இயற்க்கை மூலவளதுறையில்) செலுத்தி நாட்டின் எதிர்காலத்தை முடமாக்கும் செயலே ஆகும். இதுவரை காட் ஒப்பந்தம் உணவு, மருத்துவம் பொதுசேவை இவற்றாலே பாதிக்கபட்ட பல நாடுகள் உள்ளன ஆனால் 100% இராணுவத்தில் அன்னிய நேரடி முதலீடு என்பது இந்தியாவில் தான் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது, GATT படி நாடோ நாட்டின் வரையரையோ உலகமய அடிப்படையில் (உலகம் ஒரே குடையின் கீழ்) அமையும் எனும் பொழுது நாட்டில் இராணுவத்தின் தேவை எதற்க்கோ? பல் தேசிய இனங்களின் கூடாரமக உள்ள இந்தியாவில் தமிழக மீனவர் பிரச்சினையையும் காவேரி தண்ணீர் பிரச்சினையையும் மத்திய அரசின் மாநில அரசின் மீதான அணுகும் முறையில் இருந்தே உண்மைகள் புலப்படும், நாளைய ஏகாத்தியபத்தியத்தின் முகம் எதை கொண்டு தீர்மானிக்கும் என்று.

அன்னிய நேரடி முதலீடு இந்தியாவில் இராணுவத்தில் ஏன்? சர்வதேச போர்த்தளவாட சந்தையில் இந்தியா உலகின் பத்து சதவீத இராணுவதளவாடங்கள் இறக்குமதி செய்யும் உலகின் மிகபெரிய “திறந்த” சந்தையாகும். உலகின் மிகப் பெரிய போர்தளவாட இறக்குமதியாளன்; இந்திய நாடனது தனது மொத்த தேவைகளின் 70 சதவீதத்தை இறக்குமதிகளின் வாயிலாகப் பூர்த்தி செய்து கொள்ளூம் நிலையே நீடிக்கிறது. இதற்க்கு பெரும் சந்தைகளான அமெரிக்கா, இரசியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள் நாட்டு சந்தையிலே தன்தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றன, அமெரிக்கா 10 சதவீதத்தையும் சீனா 30 சதவீதத்தையும் மட்டுமே இறக்குமதி செய்து நிறைவேற்றி கொள்கின்றன.

பொன்முட்டையிடும் வாத்தை யார் விடுவார்கள்? இந்தியா இராணுவதளவாட இறக்குமதியின் திறந்த பெரும் சந்தை என்பதால் பல ஆயுதவியபார வல்லரசுகள் இந்திய ஆயுததேவையை அறிந்து அதன் அடிப்படையில் நாட்டின் எல்லா முனைகளிலும் தன்னை நிலை நிறுத்தி கொள்ள முனைகின்றது. ஆம் இரசியாவையே ஓரங்கட்டி விட்டு கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவனது இந்திய போர்தளவாட விற்பனையாளனாக உள்ளது. 2009ல் 20 கோடி டாலருக்கு அமெரிக்காவிடமிருந்து இராணுவ தளவாடங்களை வாங்கிய இந்தியா 2015 ல் 330 கோடி டாலருக்கு இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

பாஜகவின் உண்மை முகமும் பன்னாட்டு முதலாளிகளின் அடியாள் படையும்

 பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பாக இதே அந்நிய முதலீட்டை 26%லிருந்து 100% ஆக உயர்த்த வர்த்த அமைச்சர் ஆனந்த் சர்மா முயன்ற போது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இன்றோ பா.ஜ.க அரசு, அரசு பொதுத் துறைநிறுவனங்கள் மூலமோ ராணுவ பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி நிறுவனம் மூலமோ ஆயுதங்களை தயாரிப்பது சாத்தியமில்லை என்று முடிவு செய்து விட்டது. ஆனாலும் பாக் மற்றும் சீனாவைபகை நாடாக காட்டி உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு துறையில் தனியார்மயம் வந்தால் மட்டும்தான் சாத்தியம் என்றும் அவர்கள் தனியார்மயத்தைநியாயப்படுத்துகிறார்கள். தேர்தல் நேரத்தில் தேசபாதுகாப்பு, தேசபக்தி, இராணுவம் இவற்றை முன் நிறுத்தி ஆட்சியை பிடித்த மோடி கும்பலின் எல்லா நிறமும் வெழுத்து விட்ட நிலையில், “மேக் இன் இந்தியா” “மேட் இன் இந்தியா” என்று ஏமாற்றிய மோடி கும்பல் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதாக கூறிய உறுதிமொழி எங்கே போனதோ? அரசை விமர்சிப்பவர்களை எல்லாம் தேசதுரோகத்தின் பெயராலோ அல்லது தீவிரவாதத்தின் பெயராலோ ஒடுக்கப்படலாம். ஊடகங்கள் தனியார்துறையின் கையில் அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் செய்தியாக கூட வெளியிடத கடையர்கள் தன் முதலாளிகளின் கைபாவையாகவும் முதுகெழும்பற்ற ஊடகதுறை வீணாகி கொண்டிருக்கின்றது !

இராணுவத்தை பற்றி எழுதினாலே நாட்டின் இரகசியம் வெளிவந்து விட்டதாக கூப்பாடு போடும் மேல்தட்டு மக்களோ அறிவுஜீவிகளோ இந்த பெரிய நடவடிக்கையை தன் எதிர்ப்பாக பதிவுசெய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறேன், நாட்டின் அச்சாணியான இராணுவம் வெளிநாட்டு பெரு முதலாளிகளின் கைகளுக்கு கைநழுவி போவதைபற்றி மவுனம் சாதிக்கும் இவர்களை என்னவென்று சொல்ல!.

அன்னிய நேரடி முதலீடு என்பது அதாவது ஊழல்களும் ஏகாத்தியபத்திய கொள்ளையர்கள் நாட்டின் பாதுகாப்பு துறையில் நுழைவது நாட்டின் இறையாண்மைக்கு சவாலாகும் இனி நாட்டின் மொத்த இரகசியமும் வெளி நாட்டின் கையில் தேசபக்தி கூப்பாடு போடும் தேசபக்தர்கள் தங்களின் பங்கை ஏகாத்தியத்திடமிருந்து வசூலித்து கொள்வார்களா அல்லது பாரத்மாதாவை காக்க தெருவில் இறங்கி போராடுவார்களா?

இராணுவ தளவாடங்களை இறக்குமதி வரலாறு

இந்திய இராணுவ தளவாடங்களை நேரு காலம் தொட்டே துப்பாக்கி முதல் விமானம் வரை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டே வந்தன. புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம்செய்யப்பட்டு இந்த இறக்குமதி பிரம்மாண்டமாக வளர்ந்து, இன்று இங்கேயே இராணுவ தளவாடங்களைத் தயாரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை வெளியில் இருந்து கொள்ளை அடித்தவர்கள் இனி நாட்டில் உட்கார்ந்து கொண்டு கொள்ளை அடிக்க உள்ளனர், தற்போது பா.ஜ.க அரசு இதை தொடங்கியுள்ளது, இனி தன்கமிசன் உள் நாட்டிலே வசூலாகிவிடும்.

சுதந்திர இந்தியாவில் இரஷ்யாதான் அதிக அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வந்தது. இப்போது அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. தனியாரிடமிருந்துதான்ஆயுதங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

 தனியார் துறை மற்றும் பொது துறை பற்றி பார்ப்போம்:-

பொது துறைக்கு மாற்று தனியார் துறைதான் என்று ஆட்சியாளர்கள் வாதிடுவதில் என்ன நியாயம் உள்ளது? 2001ஆம் ஆண்டில் 201 தனியார் நிறுவனங்களுக்கு 333 அனுமதிகளை அரசு வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை 81 அனுமதிகளைத்தான் 51 நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. 2014-2015 ஆம் ஆண்டுக்கான முப்படைகளுக்கும் கொள்முதல் செய்யபட்ட ரூ 78,751 கோடிகள் மதிப்பிளான ஆயுதத் தளவாடங்களுள் ரூ 49,532 கோடிகள் மதிப்பிளான பொருட்கள் உள் நாட்டிலிருந்து கொள்முதல் செய்யபட்டவையாகும், அதிலும் பாதுகாப்புத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் ரூ 46,936 கோடிகள் மதிப்பிளான தளவாடங்களை அளித்தபோது தனியார்துறையோ ரூ 2,595 கோடிமதிப்பிளான தளவாடங்களை கொள்முதல் செய்ய பங்களித்துள்ளது. இதிலிருந்து தனியார் துறையின் வேகத்தை புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் பொது துறை நிறுவனமான DRDO

இராணுவ தளவாடங்கள் உற்ப்பத்திக்காக இந்தியாவின் பொது துறை நிறுவனமான DRDO 1958இல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் அல்லது வலையமைப்புகள்உள்ளன. DRDO ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவின் இது பாதுகாப்பை சார்ந்தஎல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாக வானூர்தி இயல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனித வள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகைண,கவசதாங்கி போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வமைப்பில் 5000 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 25000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களை புறம்தள்ளி வெளி நாட்டின் இராணுவ தளவாடங்கள் வாங்க முனைதுள்ளமை ஏனோ? அரசு தெரிவிக்குமா?

பா.ஜ.கவின் முதலாளிகள் சேவைக்கு காவி முலாம் எதற்க்கு?

பன்னாட்டு ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களை நேரடியாக வரவழைத்த பிறகு அவர்களை வைத்து அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கும் வேலையுடன், இரவில் கூடதுல்லியமாக குண்டு போடுவதற்கான உபகரணங்கள், விமான எதிர்ப்பு ரேடார்கள், ஹெலிகாப்டர்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறது அரசு. அதற்கு தடையாக இருக்கும் அரசியல்அதிகார சோம்பேறித்தனத்தை உடைக்கவிருப்பதாக பா.ஜ.க ஏற்கெனவே கூறியிருந்தது.

மொத்த தேசிய வருமானத்தில் 1.7 அல்லது 1.9% என இதுவரை இருந்தது போல ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக 2.5% ஒதுக்கப் போவதாக சொல்லி இருந்தனர். சீனஎல்லைக்கருகில் பாதுகாப்பை பலப்படுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இதற்கெல்லாம் சீன எல்லையை சாலைகள், பாதுகாப்பு எந்திரங்கள் மூலமாக பாதுகாக்க முற்படும்போதேஉள்நாட்டு கனிம வளத்தை கடல் வழியாக முதலாளிகள் கடத்திப் போக சுரங்கம் அமைந்துள்ள பகுதியிலிருந்து துறைமுகம் வரை தடையேயில்லாத பறக்கும் சாலைகளைஅமைக்கின்றனர். இதனை எதிர்த்துக் கேட்பவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி கொல்வதற்கான ஆயுதங்களை கொள்முதல் செய்ய தேசிய வருமானத்தில் பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்படுகிறது.

சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கருகில் 73 தந்திரோபாய சாலைகள், 14 ரயில்வே லைன்கள், ஹெலிபேடுகள், முன்னேறிய தொழில்நுட்பத்துடன் கூடிய இறங்குமிடங்கள் எனபாதுகாப்பை அதிகரிக்கப் போகிறார்கள். அந்தமான் தீவிலும் கூட பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தப் போகிறார்கள். இது போக விண்வெளி, இணையம் மற்றும் சிறப்புநடவடிக்கைகளுக்கெல்லாம் இணைந்து செயல்படும் மையமான அமைப்பு ஒன்றை நிறுவி தங்களது பாசிச கண்காணிப்பு ஆட்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு அந்நிய நேரடிமுதலீட்டுக்கு அடிகோலியுள்ளனர்.

மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ (DRDO) என்ற பாதுகாப்பு துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகளை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றாலும் இனி இத்துறை ஊற்றி மூடப்படும். அல்லதுஅன்னிய முதலீட்டு தயாரிப்புகளுக்கு சான்றிதழ் தரும் நிறுவனமாக மாற்றப்படும்.

ஃபோர்பர்ஸ் நிறுவன பீரங்கியை இந்தியாவில் வந்து உற்பத்தி செய்தால் இடைத் தரகர்கள் இல்லாத நிலைமை ஏற்படும் என்கிறார்கள். லஞ்ச ஊழல் நடக்காது என்கிறது பா.ஜ.க. அதாவதுராஜீவ் மாட்டியது போல இனி யாரும் மாட்ட தேவையிருக்காது என்கிறார்கள். அதாவது சட்டவிரோதமாக இதுவரை கமிசன் பரிமாறப்பட்டதற்கு பதிலாக பங்குச்சந்தை மூலமாக சட்டப்படிநேரடியாக நாட்டைச் சூறையாடலாம் என முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது பாஜக.தேசபக்திக்காக அதிகம் கூச்சலிடுபவர்கள் தான் வேகமாக தேசவிரோதிகள் என்றுஅறியப்படுகிறார்கள்.

தனியார் மயம் தாளாரமயம் எப்போது தொடங்கியது என்பது உங்களுக்கு தெரியும் அதில் சிறப்பு பொருளாதர மண்டலங்களின் (SEZ) செயல்பாடுகளை பற்றி சிறிது அறியலாம், மூலதனவரவில் 69% குறைவாகவும், ஏற்றுமதி 75% க்கு குறைவாகவும், வேலைவாய்ப்புக்கு 93% குறைவாகவும் போய் சேர்ந்தது. SEZ தொடங்கபட்டபோது வேலைவாய்ப்பு மூலதன குவியல் மற்றும் ஏற்றுமதி என்ற பெரும் ஆரவாரத்துடன் தொடங்கபட்ட SEZ மக்களுக்கு பயன்படாமல், நிலங்களை கையகப்படுத்தியவை வெறும் வாய்சவடாலாகி போயுள்ளதை கணலாம். இன்றோ அந்த நிலங்கள் முக்கியமாகியுள்ளன.

இன்னொருபுறம் காடு மலைகளையும் கனிமவள கொள்ளைக்காக காட்டுவேட்டை மாவோஸ்ட் வேட்டை என்று பல லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டுவெளியேற்ற பட்டுள்ளனர் வெளியேறதவர்களை மோதல்கள் பெயரிலோ தீவிரவாதத்தின் பெயராலோ கொல்லபடுகின்றனர் அல்லது விரட்டி அடிக்கபடுகின்றனர், இவை இந்தியாவின் மொத்த அலுமினியத் தாதுஉற்பத்தியின் 1.3 மில்லியன் டன்னில் வேதாந்தாவின் பங்கு, 85,000 டன்னாகும். இந்த கம்பெனியின் 5,00,000 டன் உருக்கும் திறன் உள்ள ஆலை ஒரிசாவின் ஜார்ஜிமூடாவில் உற்பத்தியைதுவக்க உள்ளது. அங்கு இந்த கம்பெனி 1.6 மில்லியன் டன் உருக்கும் திறன் உள்ளதாக விரிவடையும். இது லால்கரில் உள்ள 5 மில்லியன் டன் அலுமினியம் பதப்படுத்தும் தொழிலுடன், 3750மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் பிரிவும் துணை நிற்கும். இதனது துணை நிறுவனமான பால்கோவின் உற்பத்தி திறன் 1மில்லியனாக உயர்த்தப்படும்.*

லன்ஜிகார்கில் மட்டும் வேதாந்தா கம்பெனிக்கு 75 மில்லியன் டன் அளவுள்ள பாக்சைட் படிமங்களை உரிமம் கொண்டாடும் அதிகாரம் பெற்றதுடன் அதே அளவுக்கு சமமான படிமங்களைசொந்தம் கொள்ளும் பகுதியையும் கொடுக்க அரசு உறுதியளித்துள்ளது. 50 ஆண்டுகள் வரை பாக்சைட் படிமங்கள் கிடைக்கும் பகுதியில் 5 மில்லியன் டன் உருக்கும் ஆலை நியாயமானதேஇந்தியாவின் மொத்த அலுமினிய இருப்பு 3.3 மில்லியன் டன்னில் வேதாந்தாவின் அலுமினியத் தொழில் நடக்கும் ஒரிசாவில் மட்டும் 1.7 மில்லியன் டன் உருக்காலை தொழில் உள்ளது.உலகின் மிகப்பரிய உருக்காலை ஒன்றை ஜார்குடாவில் உருவாக்க இந்த பகுதியிலுள்ள படிமங்களை விடுவிக்கும் உரிமை தனக்கு உள்ளதாக வேதாந்தா கூறிவருகிறது.*

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் வைர வளம் இருப்பதை பன்னாட்டு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. தாங்கள் மேற்கொண்ட வான்வெளி சர்வேயில், வைர வளம் நிறைந்திருப்பதுதெரிய வந்ததையடுத்து ரியோ டிண்டோ மற்றும் பி.எச்.பி. பில்லிடன் ஆகிய நிறுவனங்கள் அங்கு பூர்வாங்க ஆய்வு நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன; மேலும், “மாவோயிஸ்டுகளின் தலைமையில் போராடும் பழங்குடிமக்களின் எதிர்ப்பை எவ்வளவு காலத்துக்குள் அடக்குவீர்கள்” என சத்தீஸ்கர் அரசை கேட்டுக் கொண்டுள்ளன.

 “பச்சை வேட்டை இயக்கம்” (ஆபரேசன் கிரீன் ஹன்ட்) என்ற போரில் ஆதிவாசிகள் உள்ள பகுதியிலிருந்து போராளிகளை வெளியேற்றவும். ஆதிவாசிகள் தங்களது பல்லாண்டுகள்பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இருப்பிடங்களை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர். நாட்டின் முதலாளிகளின் தேவைக்கே இப்படி என்றால் நாளை வெளிநாட்டு முதலாளிகள் தேவைக்காக அமெரிக்க இராணுவம் கூட்டு நடவடிக்கை என்று நமது மக்களை என்ன செய்வார்களோ?

இந்திய இராணுவ ஆயுதங்களை பற்றி பார்க்கலாம்:- இந்தியாவின் பெரும்பாண்மையான ஆயுதங்கள் இரசியாவிலிருந்து(USSR) இறக்குமதி செய்யபட்டவையே அவற்றின் உறுதியும் பயன்பாடும் இந்தோ-பாக் சண்டை நிருபிக்கபட்டவை மற்றும் அதன் பராமறிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முன்னனியில் இருந்தது. இந்தியாவின் தயாரிப்புகளான பல தாளவாடங்கள் இரசியா அடிப்படையில் தயாரிக்கபட்டவை அல்லது அவர்களின் காப்புறிமை பெற்று சரியான முறையில் தயாரிக்கபட்டவையே அதிகம் அவற்றுள் சில:- INSAS, ARJUN TANK, T-90 BHEESHMER etc..

திறன்மிக்க சில ஆயுதங்களை பற்றிபார்ப்போம் :- 1970 அதற்க்கு முன் அறிமுகபடுத்தபட்ட சிலவகையான பீரங்கிகள் 130MM M-46,122MM D-30, கவச வாகனங்கள் T-55,T-72,T-90 and BMP-1 & BMP-2 இவை இரசியாவை சேர்ந்தவை, Anti Aircraft (1968) 40mm L/70 ஒரு சுவிடனின் Bofors கம்பெனி சேர்ந்தவை மற்ற 23mm ZU, 23mm ZSU Schilka இவை இரசியாவை சேர்ந்தவை இன்னமும் மாற்றும் திறனின்றி அரசு உள்ளது, நீங்கள் அறிந்த தெகல் கா டாட் காம் புகழ் NDA அரசின் ஊழல் நாடறிந்த ஒன்று அதில் கூட்டுகளவானிகளாக இருந்த அதிகாரிகளும் அதிகார மையத்தினறும் ஏற்படுத்திய கையூட்டு என்பது அதன் பின் எங்கும் ஊழல் மழிந்து இராணுவ தளவாடங்கள் புதிப்பிக்கும் பெயரால் வயோதிகனை வலிபனாக்கும் வீண் செலவுகள் பல்கி பெருகின. இஸ்ரேலின் TI (Thermal Image Finder) பல கோடிகளுக்கு வாங்கி அவை சரியான பயன்பாடின்றி பொருத்தப்பட்டுள்ளது அதனை கொடுத்த இஸ்ரேல் அதன் Trail or warrenty முடியும் முன்னே ஒதுங்கிகொண்டது, இப்போது பராமறிப்பது சிரம்மாக உள்ளது. அதேபோல் பல வெளிநாட்டு தானியங்கி ஆயுத தளவாட்ங்கள் செப்பனிக்க முடியாமல் பெரும் பொருளாதர முடக்கம் அடைந்துள்ளது. 155mm 77FHBO2 என்றழைக்கப்படும் Bofors சரியான உதிரிபாகம் இன்மையால் சரிபடுத்த முடியாத நிலை! இரசியாவின் பல ஆயுத தளவாடங்கள் செப்பனிடல் சிரமம் இல்லை அதேபோல் நீண்டகாலம் உழைக்கும் திறன் கொண்டவை ஆனால் சரியான பறமரிப்புடன் உதிரிபாகமும் அடிக்கடி தேவைபடுவதால், திட்டமிடலின் திண்டாட்டத்தால் சரியானமுறையில் இப்போது வைத்துகொளல் கடினம். எல்லை பாதுகாப்புக்கு ரோந்து பணிக்கு பயன்படுத்தபடும் ஜெர்மனியால் மற்றும் வெளி நாட்டில் தயாரிக்கபட்ட பல மின்னணு பொருட்கள் சரியான உதிரிபாகம் மற்றும் பறமரிப்பு மேற்கொள்ள திட்டமின்மையால் பழுது நீக்கபட்டாமல் பல கோடி மதிப்புடைய சாதனங்கள் பயன்படாமல் வீணாக உள்ளன. இப்படி திட்டமிடலின் கோட்பாட்டை சீர்படுத்தாமல் அன்னிய நேரடி முதலீடு என்பது மக்கள் மீது புதிய சுமையே!

2020ஆம் ஆண்டிற்குள் இராணுவத்திலிருக்கும் துருப்புக்களில் 30 சதவீதம் பேரை நீக்கிவிட்டு எந்திர ரோபோக்களை நியமிப்பதென அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன்திட்டமிட்டிருக்கிறதாம்.

இந்த நிறுவனங்களுக்கு தடையற்ற இலவச மின்சாரம், தண்ணீர், இடம் எல்லாம் மக்களிடமிருந்து பறித்து கையளிக்கப்படும். பதிலுக்கு மண்ணைப் பறிகொடுத்த மக்கள் அங்கு போய்செக்யூரிட்டி கார்டுகளாக – ஒப்பந்த தொழிலாளர்களாகத்தான் பணிபுரிய வேண்டியிருக்கும். அன்று நாட்டின் பாதுகாப்பே பறிபோய் விடும் என்று காங்கிரசை பலமாக எதிர்த்து நின்றபா.ஜ.க, இன்று தான் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் பாதுகாப்பை நல்ல விலைக்கு விற்பதில் அவசரம் காட்டுகிறது. (வினவில் இருந்து)

பழைய என்ரான் மோசடி கதைதான் நடக்கும். அதாவது அவர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கும் சேர்த்து மக்களின் வரிப் பணத்தில் வட்டி கட்டிக் கொண்டிருப்போம். இனி ஆயுத நிறுவனங்களின் இறக்குமதியில் இந்தியாவே முதலிடம்!

சில பத்திரிக்கையில் ஜனநாயகத்தின் குரல்:- (1)கொஞ்சம்கூட தொலை நோக்கு சிந்தனை இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு நூறு சதவிகித அந்நிய நேரடி முதலீடு அதுவும் பாதுகாப்புதுறையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன ? இது நமது தற்சார்பு மற்றும் சிந்தனை திறனை மழுங்கடித்து விடாதா ? மேலும் வேலை வாய்ப்பில் நம்முடைய பங்கு எவ்வளவு ?இனிமேல் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களது குல தொழிலை செய்யும் நிலைக்கு தள்ளும் முயற்சி. நூறு சதவிகித வர்ணாசிரம தத்துவத்தின் வெளிப்பாடு, இதுவும்ஒருவகையான பயங்காரவாதமே .நாட்டை வெளியிலிருந்து வந்துதான் அழிக்கவேண்டும் என்றில்லை. காந்தி தேசம் காணமல் போய்கொண்டு இருக்கிறது .

(2)அப்படியே அமைச்சர் முதன்மை அமைச்சர் உயர் அலுவலர்கள் அனைவர் பதவிகளையும் அந்நிய நாட்டு அமைப்புகளின் அலுவலர்க்கு குத்த கைக்கு விட்டு விட்டு இவர்கள் ஓய்வுஎடுக்கலாம் இவர்கள் செலவு எல்லாம் நாட்டுக்கு மிஞ்சுமே சொந்த காலில் நிக்க முடியாத கயவர்கள் இவர்கள் 60 மாதங்கள் கேட்ட கனவான்கள் இவர்கள் 24 மாதங்களில் நாட்டை வெளிநாட்டு நிறுவனங்களின் மேய்ச்சல் காடாக மாற்றியது தான் இவர்கள் சாதனை இதில் வேறு பெருமை பீத்தல் வேறு ஊழலே 2 வருடமா நடக்கலை - மன்மோகன் சிங்க் எவல்லோ நல்லவரு அடபோங்கப்பா நீங்களும் உங்க ஆட்சியும் சர்ச்சில் அன்னைக்கே சொன்னார் இவிங்க்ய எல்லாத்துக்கும் வரி போட்டு மக்களை தண்டிப்பார்கள் - கேட்ட இந்துவம் அது ஒரு கொள்கையாம் இதுசரியுனு சொலரதுக்கு ஒரு மூடர் கூட்டம் வேறு.

பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு குறித்த என் முடிவுறை FDIயின் மாற்று என்ன?:-

1. ஸ்டீபன் லெண்ட்மன் வார்த்தையிலிருந்து:- அந்நிய நேரடி முதலீடு பற்றிய தன் கட்டுரையில் கூறியுள்ளார் அதன் அடிப்படையில் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கவும் நாட்டின் இறையாண்மையை தகற்க்கவும் முயலும் ஏகாதியபத்தியம் மக்கள் நலன் இம்மியளவுமில்லா!

2. ஒட்டு மொத்தமாக- அந்நிய நேரடி முதலீடு என்பது, “நாட்டின் சுதந்திரம், மக்களின் இறையாண்மை” ஆகியவற்றை ஆபத்துக்குள்ளாக்குகிறது. வளர்ந்துவரும் நாடுகள் தங்கள் மக்களை ஓர் அதீத விலை கொண்ட, ஒரு வழிபாதை செயல்தந்திரம் மக்களின் ஆற்றலை சீரழித்துவிடுவதாகும். வளர்ந்துவரும் நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டை மிகவும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது; காரணம்- பொருளாதார, சமூக மற்றும் அரசியல் துறைகளில் அதற்க்கு தரவேண்டியுள்ள விலை மிகுந்த துன்பத்தை கொண்டுள்ளதாகும்.

3.நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசு சரியான திட்டத்துடன் நாட்டின் நலன் சார்ந்த தொழிற்துறை வளர்ச்சி மக்களுக்கானதாக இருக்கும்.திருடபட்டுவிட்ட கருவூல நிதிகளையும், சொத்துக்களையும் மீட்டெடுப்பது, செலுத்தபடாத வரித்தொகையை வசூலிப்பது,வேலை வாய்ப்புகளை அதிக்கப்படுத்துவது, நாட்டுக்கு வெளியே செல்லக்கூடிய இலாபங்களைத் திரும்ப சமூக முதலீடுக்ளாக்குவது, மூலதனம் பறந்தோடாமல் தடுப்பது.இப்படி சமூக அக்கறையுடன் தொட்ர்ந்தாலே நாட்டின் வளர்சிபாதையில் பயணிக்கலாம்.....

4.நான் இதன் இரண்டாம் பகுதியில் இந்திய பெரும் முதலாளிகளின் ஏகாத்திபத்தியத்துடனான கூட்டும் தாளவாடம் தயாரிக்க கட்டுமாணமேயின்றி பல்லாயிரம் கோடிக்கு அரசாணை. (இதனை அடுத்த கட்டுரையில் தொடர்வேன்). அதற்க்கு முன் சில முக்கிய நிகழ்வுகள் அறிவோமே! பெரும் முதலாளிகள் திரும்ப செழுத்தாதக் கடந்தொகை ரூ.4 லட்சம் கோடிகளை எட்டிவிட்டதால் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ஆட்டங் கண்டு வருகின்றன, இது மட்டுமின்றி நாள்தோறும் ரூ.240 கோடிகள் கறுப்புப் பணமாகவே நாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றதாம்!

5.கர்நாடகாவில் ரெட்டிச் சகோதரர்கள் லட்சக்கணக்கான டன் இரும்புக் கனிமத்தை வெட்டி கப்பலில் ஏற்றினார்கள் என்றால் இங்குள்ள பி.ஆர்.பி. யோ ஒரு லட்சம் கோடிகள் வரை கிரானைட்டை வெட்டிக் கடத்தியிள்ளார். இவற்றை தடுக்க திறனற்ற முப்படையும் ஆளே செல்லா சியாசென் பனிபாறைகளை காக்கவும், நாட்டின் பெரும் செல்வம் செலவிடபடும் இராணுவத்தின் சேவை மக்கள் பணியில் எவ்வளவு சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

- சி.பி.செங்கதிர்

தொடர்புடைய பதிவுகள்:-

@ (ஆதாரம்: http://online.wsj.com/articles/india-approves-more-foreign-investment-in-defence-and-railways, 10.12.2014)

#( ஆதாரம்: EPW Vol XLIX, No 34, 23-08-14)

* நன்றி வினவு.

மற்றும் ஸ்டீபன் லெண்ட்மன்:- அந்நிய நேரடி முதலீடு பற்றிய தன் கட்டுரை.