அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் எனும் உயரிய நோக்கில், “இந்திய மக்களுக்கு கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும்” என ஆங்கிலேய அரசின் சட்டப்பேரவையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே(1911) கோபால கிருஸ்ண கோகலே பேசியுள்ளார். சமூக நீதிக்காக போராடும் பலரின் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் கல்வி அடிப்படை உரிமையாகியுள்ளது.

child_630

6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி பெறுவதை, அடிப்படை உரிமையாக்கும் சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு “இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமானது 01.04.2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழக அரசும் இச்சட்டத்தை நிறைவேற்ற விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தற்போது 6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22 கோடியாகும். இதில் 92 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. இவர்கள் அனைவருக்கும் கல்வி வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தினை அமுலாக்க சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி நிதியினை ஒதுக்கிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சட்டம் இவ்வாறாக இருக்க, அனைவருக்கும் கல்வி வழங்கிட மத்திய அரசானது “சர்வ சிக்ஸ அபியான்” (அனைவருக்கும் கல்வி இயக்கம்) எனும் திட்டத்தினை 2001 முதல் நடத்தி வருகிறது. 6 முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லாத, பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து இவர்கள் அனைவருக்கும் கல்வி வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 2010ஆம் ஆண்டிற்குள் பள்ளிசெல்லா மாணவர்களே இல்லாத நிலையை அடைவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். கடந்த பத்தாண்டு காலமாய் பல கோடிகளை செலவிட்டும் இலக்கை எட்ட முடியவில்லை.

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகமானது, 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அபாயகரமான மற்றும் அபாயகரமற்ற வேளாண் தொழில்களில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை மீட்டு, குழந்தைத் தொழிலாளர்களுக்கென சிறப்புப் பள்ளிகளை  அமைத்து, ஊக்கத் தொகையுடன் கூடிய கல்வியை வழங்கி வருகிறது.

தமிழக அரசானது, பள்ளி இடைநின்றலைத் தடுக்க பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, மடிக்கணிணி என இந்த பட்ஜெட்டில் இந்தியாவிலேயே மிக அதிக அளவாக கல்விக்கு 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இவ்வாறாக மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு கல்வி வழங்கிட பல திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வந்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தின் நிலையோ கவலையளிப்பதாக உள்ளது.

ஆம், சமீபத்தில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில், எழுத்தறிவில் பின்தங்கிய மாவட்டங்களாக தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் 22.60 லட்சம்பேரில் 15.16 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், மொத்தமுள்ள 14 ஒன்றியங்களில், சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், அம்மாப்பேட்டை, நம்பியூர் என ஐந்து ஒன்றியங்கள் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களாக அமைந்துள்ளது. ஆம், இந்த ஐந்தில் நான்கு ஒன்றியங்கள் மலைப்பகுதி ஒன்றியங்கள்.

ஈரோடு மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு மலைப்பிரதேசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு, நிலமற்ற ஏழை ஆதிவாசிமக்களே அதிகம் வசிக்கின்றனர். பள்ளிகளுக்கும் மக்களின் வாழிடங்களுக்குமான தொலைவு மிக அதிகம். இவர்கள் வாழுமிடம் வனவிலங்குகள் நடமாட்டமிக்க வனப்பகுதியென்பதால் இவர்கள் வசிப்பிடத்திலிருந்து பள்ளிக்கு நெடுந்தொலைவு நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்ப+ர், தாளவாடி, ஆசனூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகள் இல்லாத கிராமங்கள் உள்ளன. இதனால், பள்ளிவயதில் கரும்புவெட்டுதல், கேரளாவிற்கு சென்று மூங்கில் வெட்டுதல், செங்கல் சூளைகளில் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படுதல் என குழந்தைத் தொழிலாளர்களாக்கப்படுகின்றனர்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தொடக்கப்பள்ளிகள், தொடங்கிட தற்போது இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம்-2009 சொல்கிறது. ஆனால், மலைப்பகுதிகளில், தொடக்கக்கல்விக்கு ஏழு கிலோ மீட்டர் நடந்து செல்லவேண்டிய கிராமங்கள் கூட உள்ளன. கிராமங்கள் தோறும், குடிமக்களின் குறைதீர்க்க, டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கும் அரசுக்கு, இந்த ஆதிவாசிகளின் குரல் எட்டுமா?

மறுபுறம், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தெல்லாம், ஈரோட்டிற்கு வந்து பயிலும் வண்ணம் புகழின் உச்சியில் ஈரோட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரம் அமைந்துள்ளது. ஈரோட்டில் தான் தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். சமீபத்தில் வெளியான மேல்நிலை தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளது ஈரோடு மாவட்டம். அடுத்து வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதலிடத்தை ஈரோடு மாவட்டம் பெற்று கல்வி வரலாற்றில் பெரும் சாதனை படைத்துள்ளது.

இவ்வளவு பெருமைகளையும், பெண்கல்வியை போற்றிய பெரியார் பிறந்த மண் எனும் பெருமையையும் பெற்ற ஈரோடு மண், இன்று கல்வியில் பின்தங்கியுள்ளது எனும் கூற்றை யாரும் நம்ப முடியவில்லை.

ஏன் இந்த முரண்பாடு.... சட்டங்களும், திட்டங்களும் சாமான்ய மக்களை எட்டுவது எப்போது...?

ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் தொடக்கப்பள்ளிகள் தேவைப்பட்டியல் :

எண்

ஒன்றியம்

ஊராட்சி

தொடக்கப்பள்ளி தொடங்கப்படவேண்டிய ஊர்

 

சத்தியமங்கலம்

குத்தியாளத்தூர்

திக்கரை

1

 

குத்தியாளத்தூர்

கூட்டார்தொட்டி

2

 

குத்தியாளத்தூர்

கிளாத்தூர்

3

 

குன்றி

கிளமன்ஸ்தொட்டி

4

 

குன்றி

நாயகன்தொட்டி

5

 

குன்றி

சின்னகுன்றி

6

பவானிசாகர்

தொப்பம்பாளையம்

மணல்மேடு

7

தாளவாடி

திங்களுர்

செலுமிதொட்டி

8

 

தலமலை

அள்ளாபுரம்தொட்டி

9

 

திங்களுர்

வைத்தியநாதபுரம்

10

 

கேர்மாளம்

ஒரத்தி

11

 

கேர்மாளம்

ஜே.ஆர்.எஸ்.புரம்

12

 

திகினாரை

தமிழ்புரம்

13

 

தலமலை

இட்டரை

14

 

தலமலை

காளிதிம்பம்

15

அந்தியூர்

பர்கூர்

ஒன்னகரை

16

 

பர்கூர்

அக்னிபாவி

17

 

பர்கூர்

சுண்டைபோடு

18

 

பர்கூர்

கொங்காடை

19

 

பர்கூர்

ஆலசொப்பனட்டி

20

 

பர்கூர்

பெரியூர்

21

 

பர்கூர்

வெள்ளிமலை

22

 

பர்கூர்

திண்ணக்காடு

23

 

பர்கூர்

ஆலணை

24

 

பர்கூர்

வேலம்பட்டி

25

 

பர்கூர்

ஜுயன்தொட்டி

26

டி.என்.பாளையம்

கொங்கர்பாளையம்

விளாங்கோம்பை

 

ஏன் வேண்டும் இங்கு பள்ளி...?

      இவர்களின் வாழ்விடத்திற்கும், பள்ளிக்குமான தொலைவு அதிகமாக உள்ளதால், இக்குழந்தைகள் பள்ளிக்கு வராமல் உள்ளனர்.

      இவர்கள் வாழும் பகுதி வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் மிக்க பகுதியென்பதால் இவர்கள் வசிப்பிடத்திலிருந்து பள்ளிக்கு நெடுந்தொலைவு பள்ளிக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

      தொடக்கப்பள்ளியானது ஒரு கிலோ மீட்டருக்குள் அமைய வகை செய்துள்ளது, தற்போது வந்துள்ள “இலவச கட்டாய கல்வியுரிமை சட்டம்”

ஆக, இவர்களது வசிப்பிடங்களிலேயே தொடக்கப்பள்ளிகள் அமைதல் வேண்டும்.

- சுடர் நட்ராஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)