கொழும்பு சர்வதேச மாநாட்டைப் புறக்கணிப்பீர்
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி வேண்டுகோள்
வரும் 2011 சனவரி 5,6,7,8 தேதி களில் கொழும்புவில் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த இருப்பதாக சில எழுத்தாளர்களிட மிருந்து அறிவிப்பு வந்துள்ளது. இந்த ஆண்டு சனவரி 3 இல் கொழும்புவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அங்குள்ள சிலரும், புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் கூடி இம்மா நாட்டை நடத்த முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எழுத் தாளர்கள் சிலர் கூடி அறிவித்த மாநாடாக புறத்தோற்றத்துக்கு காண்பிக்கப்பட்ட போதிலும், முழுக்க முழுக்க இலங்கை அரசின் பின்னணி யோடும். அதன் ஏற் பாட்டோடுமே இது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடு.
இந்திய அரசின் கூட்டுச் சதியோடு இலங்கை அரசு கடந்த ஆண்டு மாபெரும் தமிழின அழிப்புப் போரை நடத்தி பல்லாயிரக் கணக்கில் போரா ளிகளையும், அப்பாவிப் பொது மக் களையும் கொன்று குவித்தது உல கெங்கும் பேரதிர்ச்சிகளையும், இலங்கை அரசின் பால் கடும் கோபத் தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.
சர்வதேசப் போர் நெறிமுறை களையும், போர்க் கைதிகள் தொடர் பான ஒப்பந்தங்களையும் மீறி இலங்கை அரசு சிங்கள இன வெறியோடு தமிழி னத்தின் மீது தொடுத்த தாக்குதல்களுக் கும் நிகழ்த்திய கொடூரங்களுக்கும் எதிராக வெகுண்டெழுந்த உலக நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரான தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி யுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதரத் தடை விதித்துள்ளது. ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளரும், ஐநா அமைப் பில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாடு களின் தலைவர்களும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளி யாக சர்வதேச நீதிமன்றத்தில் விசார ணைக்கு உட்படுத்த வேண்டு என வலி யுறுத்தி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் தான் உலக நாடுகளின் குற்றச்சாட்டுகளி லிருந்தும், கண்டனங்களிலிருந்தும் மீளவும், உலக மக்களின் கோபத்தைத் தணிக்கவும் ஏற்கெனவே 2010 ஜுன் 3,4,5 தேதிகளில் இந்தியத் திரைப்பட விழா ஒன்றைக் கொழும்புவில் நடத்தி தமிழகத் திரையுலகை கொழும்புவிற்கு வரவைத்து தான் தமிழினத்துக்கு எதிரி யில்லை என்று காட்டிக் கொள்ள முயற்சித்தது.
ஆனால் தமிழ்த் திரையுலகம் அந்த விழாவைப் புறக்கணித்ததுடன் இந்தியா வின் பிறமொழி பேசும் திரையுலகின ரையும் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள, கொழும்பு இந் தியத் திரைப் பட விழா படு தோல்வியில் முடிந்தது.
இப்படிப் படுதோல்வியில் முடிந்த அந்த நிகழ்வை யடுத்துதான் தற்போது சர்வதேசத் தமிழ் எழுத் தாளர் மாநாட் டை கொழும் புவில் நடத்தி தன் கைகளில் உறைந்துள்ள லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் ரத்தக்கறையை மறைக்க முயற் சிக்கிறது இலங்கை அரசு. இதில் தன் கொலைகார கோர முகத்தை நேரடியாக வெளிக்காட்டயில், எழுத் தாளர்கள் என்கிற முக மூடியுடன் இந்த மோசடியில் அது இறங்கியிருக் கிறது.
ஆதிக்கங்கள் எப்போதும் தங்கள் மோசடிகளை மறைக்க மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, போதை வயப்படுத்துவது, கேளிக்கைகளுக் குள்ளாக்குவது முதலான நடவடிக்கை களில் ஈடுபடுவது வரலாறு முழுவதும் அறியப்பட்டு வரும் செய்தி தமிழின அழிப்புப் போரில் கொழும்பு - இந்தியக் சுட்டுக் கொலைக்குத் துணை போன கருணாநிதி , தன் துரோகத்தை மறைக்க இந்த ஆண்டு ஜுன், தேதிகளில் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்கிற கும்பமேளாவைக் கோவையில் நடத்தி தமிழ் உள்ளங்களைக் குளிர்வித்து, தன் துரோகக் கறையை அதில் கழுவிக் கொள்ள முயற்சித்தார். இவரைப் பின்பற்றியே தற்போது ராஜபக்ஷேவும் கொழும்பு சர்வதேசத் தமிழர் எழுத் தாளரை மாநாட்டை த் நடத்தத் திட்ட மிட்டுள்ளார்.
எனவே, எந்தப் பின்னணியில் எப் படிப்பட்ட நோக்கத் தோடு, இந்தத் மாநாடு நடத்தப்பட இருக் கிறது என்பதைத் தமிழ்ப் படைப்பாளி கள் உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடுகள் கடந்து மொழி இன வரம்பு கள் கடந்து மானி டத்தை உள்ளன் போடு நேசிப்பவர்கள் படைப்பாளர்கள், மனித நேயச் சிந்தனை யாளர்கள், கலைஞர்கள் மற்றும் பத்திரி கையாளர்கள். அதே போல உலகின் எந்த மூலையில் மனித உரிமை மறுக்கப்பட் டாலும் மனிதகுலம் தாக்கப்பட் டாலும் அதைக் கண்டித்துக் குரல் கொடுக்க ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடக் கடமைப்பட்டவர்களும் அவர்கள்.
இந்தப் புரிதலோடும் கடமையுணர்ச்சியேடுமே நாம் இந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை நோக்க வேண்டியுள்ளது.
காந்தி தேசம் தந்த கொலை ஆயுதங் களோடு புத்ததேசம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கொழும்பு தாக்குதல் களையும், அதன் உச்சமாக முள்ளி வாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்ட படுபயங்கர கோரப் படுகொலைகளை யும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது இப்படிப்பட்ட கோர முகத்துக்கு இந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் மூலம் சனநாயக தமிழ்ப் பாச தமிழ் நேச அரிதாரம் பூசிக்காட்டும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை அரசின் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு எந்த நிலையிலும் யாரும் துணைபோகக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற மொழி, இன விடுதலைப் போராட்டங் களில் நேரடியாகப் பங்கு கொண்டும் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் பல சித்ரவதைகளையும், கொடுமைகளையும் எதிர்கொண்டு மரணத்தையும் சந்தித்தவர்கள் எழுத் தாளர்கள், கவிஞர்கள்.
ஈழப் போராட்டத்திலும் அப்படிப் பல சம்பவங்கள் நேர்ந்துள்ளவை நாம் அந்த அளவுக்கு இப்போராட்டங்களில் நேரடியாகப் பங்கு கொள்ளவும் சூழல் இல்லையானாலும் குறைந்தபட்சம் இலங்கை அரசின் இப்படிப்பட்ட போலிப் பாசாங்கு, பசப்பல் முயற்சி களுக்குத் துணை போகாமல் இருக்க வேனும் நாம் உறுதி பூண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மாநாட்டின் நோக்கங்களாக இலக்கிய வளர்ச்சி, மொழி வளர்ச்சி, திரைக்கலை வளர்ச்சி என்பதாக அறி வித்து படைப்பாளாகள், ஆய்வாளர் கள், அறிஞர்கள் கலைஞர்களை ஈர்க்க முயலுகிறது சிங்கள அரசு.
ஆனால் ஓர் இனம் அரசியல் ரீதியான விடுதலை அடையாமல் தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையைப் பெறாமல் தந்திரமான எந்த வளர்ச்சிகளையும் அடைய முடியாது என்பதைப் புரிந்து இலங்கை அரசின் -அரசு ஆதரவு எழுத் தாளர்களின் இந்த அழைப்பை நாம் புறக்கணிக்க வேண்டும்.
அதேபோல, இல வச விமானப் பயணம், தங்குமிடம், உணவு, சுற்றுலா என்று தமிழக அரசு போல் பல இல வசங்களை அறிவித்தும் இலங்கை அரசு படைப்பாளிகளை வசிகரிக்க முயன்று வருகிறது. சுய சொர ணையுள்ள தன்மான முள்ள இனப்பற்றுள்ள எந்தக் கலைஞனுக்கும் இந்த இலவசங்கள் கால் தூசுக்கு சமம் என இவற்றை நிரா கரித்து இலங்கை அர சுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதன் தமி ழினப் படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராக அதைப் பழி தீர்க்க வேண்டும்
மாநாட்டு எதிர்ப்பாளருக்கு மிரட்டல்
இந்த மாநாட்டு அறிவிப்பு தொடர்பாக, இதன் பின்னணியில் நிலவும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ஈழ எழுத்தாளர் எஸ். பொ எழுதிய ஒரு கட்டுரையை கீற்று இணையதளத்தில் தளம் வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரை மிரட்டும் நோக்குடன் ஆஸ்திரேலியாவிச் சேர்ந்த முருக பூபதி என்பார் ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு கோரி வழக்கு தொடர்வதாக மிரட்டியிருந்தார்.
இதன் எஸ்.பொ.வின் கட்டுரை தீராநதி இதழிலும் வெளிவந்தது.
இதற்கிடையில் திரைப்பட இயக் குநர் புகழேந்தி, எழுத்தாளர் செயப்பிர காசம், மண்மொழி ஆகியோர் இரா சேந்திர சோழன் ஆகியோர் முன் முயற் சியில் 02.09.2010 அன்று சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.
இதில் தமிழகத்தின் கலைத்துறை முன்னோடிகள் பலரும் கலந்து கொண்டு இது சார்ந்த தங்கள் கருத்து களை வெளிப்படுத்தி,கொழும்பு மாநாட்டிற்கான தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
எனவே இந்தப் புரிதலில், தமிழக மெங்கும் உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வு எழுத்தாளர்கள், மனித உரிமைப் போராளிகள், மாந்த நேயப் பற்றாளர்கள், அவர்களுக்கு இயன்ற வகையில் இச்செய்ததியை வெளிக் கொண்டு செல்ல வேண்டும், ஒன்றிய மாவட்டத் தலைநகர்களில், சிற்று£ர்ப் புறங்களில் இது தொடர்பாகத் எளிய நிகழ்ச்சிகள் நடத்தி இதை தமிழுலகு அறியச் செய்ய வேண்டும்.
தோல்வியில் முடிந்த எழுத்தாளர் மாநாடுகள்
இம்மாநாடு திட்டமிட்ட தேதிகளில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து எந்த சமூக சொரணையுமற்ற பெயர்தெரியாத பத்திரிகைகள், அமைப்புகள் சார்ந்து பலர் சென்று திரும்பியுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் எழுத்தாளர் கு.சின்னபாரதியும் போய்வந்தாராம் ஒருவேளை அவர் சார்ந்த கட்சி நிலைபாடு காரணமாக இருக்கலாம். மாநாட்டில் இவருடைய நூலின் சிங்களமொழி பெயர்ப்பு ஒன்று வெளியிடப்பட்டதாம் அதற்காகப் போனதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். ஆனாலும் தற்போது அவரே புலம்பவது. மாநாடு பலகெடுபிடிகளுடனும் சர்வாதிகாரத்துடனும் எந்த சனநாயகமும் இல்லாமல் நடந்தேறியது. என்பதுதான்
இந்த மாநாட்டை அடுத்து அதே மாதம் 25.01.11 தொடங்கி 30.01.11 முடிய 6 நாட்கள் இலங்கை இலக்கியத் திருவிழா என்கிற பெயரில் நடத்தியுள்ளது. இம்மாநாட்டிற்கும் உலக அரங்கிலிருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்ததுடன் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்கள் மொழியியல் அறிஞர் நோம்சாம்ஸ்கின், எழுத்தாளர், மனித உரிமைப் போராளி அருந்ததிராய், எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் தாரிக் அலி உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். ஆக மொத்தத்தில் சிங்கள இனவெறி அரசின் ஏற்பாட்டில் நடந்த இந்த இரு நிகழ்வுகளுமே சிங்கள அரசு எதிர்பார்த்த பலன் களைத் தராமல் தோல்வியில் முடிந்துள்ளன.