'ஓ' - பக்கங்கள் வாசகர் வட்டம்: பகிர்தல்
இடம்: Little Flower English School. (4th Floor auditorium), # 47, 2nd Cross, Sai baba Nagar, Near Sunrise circle, Sriramapuram, Bengaluru 560 021.
நேரம்:  10 பிப்ரவரி 2011 17:30

திரு. ஞாநி அவர்கள் தமிழீழப் போர் உச்சத்தில் இருந்தபோதும் அதற்குப் பிறகும் நேரடியாக மற்றும் மறைமுகமாக ராஜபக்ச அரசையும் அதன் செயல்களையும் நியாயப்படுத்தியது அனைவரும் அறிந்தது. பாலிவூட் திரைப்பட விழா எதிர்ப்புகள் வலுத்து திரு. கமல்காசன் முற்றுகை இடப்பட்டு அதன் காரணமாக அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்றபோது, அவர் அவ்வாறு புறக்கணிக்ககூடாது, கலையில் அரசியலை சேர்க்க கூடாது என்று எந்தவித தர்க்க நியாயமும் அற்ற கட்டுரையை குமுதம் இதழில் எழுதினார். இதைக் கண்டித்து, நேரடியான விவாதத்திற்கு அழைத்தபோது அவர் அதற்கு பதில் அளிக்காதது மட்டுமல்ல அதைப் புறக்கணித்து சனநாயக விரோதமாக நடந்து கொண்டார். இவ்வாறு  சனநாயக விரோதமாக , மானுட விரோதமாக நடந்து கொண்டவர் தமது நிலையை விளக்காமலும், மன்னிப்பு கோராமலும் இருப்பது எவ்வகையில் சனநாயக செயலாக முடியும்.

தமிழ் இனப்படுகொலையை மறைமுகமாக தொடர்ந்து நியாயப்படுத்தி வருபவர் ஒரு அறிவுஜீவியாக தமிழர்களிடத்தில் வலம் வருவது மானுடத்தை நேசிப்பவர்களுக்கு அவமானமான ஒன்றாகும். இவர் எதிர்கொள்ளப்பட வேண்டியவர். தமிழர் விரோதி மட்டுமல்ல, இவர் மானுடத்திற்கும் எதிரானவர். தனது சுயலாப நோக்கங்களுக்காக மக்களின் உன்னதப் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர். இவர் தொடர்ந்து மக்கள் மன்றங்களில் பேசுவது, மக்களிடத்தில் மானுட விரோத நஞ்சை விதைப்பதற்கே உதவும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவர் தன் கருத்தை நேர்மையானது என்று நம்புகிறவராக இருந்திருந்தால்,பொதுத்தளத்தில் இதை விவாதிக்க ஒத்துழைத்து இருப்பார். பொதுத்தளத்தில் மக்களிடத்தில் விவாதிக்கும் நடைமுறையே தொன்று தொட்டு - ஆயிரம் வருடங்களுக்கு மேலாக - அறிஞர்களிடத்தில் இருக்கும் வழிமுறை. இவ்வாறே தமது கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பர். இதைப் போன்ற விவாதங்களை தன் கருத்து மீது நடத்த மக்கள் விரோதிகளும், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் மட்டுமே மறுப்பர்.

திரு.ஞாநி இவ்வாறான கருத்து சுதந்திர விரோத வழிமுறையைக் கொண்டு இருப்பவர். இவர் அறிஞர்கள் மன்றத்தில் நின்று பேச அருகதை அற்றவர். எனவே இவர்  இந்த அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் சார்பாகக் கோருகிறோம். சனநாயக ரீதியில் எதிர்க் கருத்துக்களை எதிர்கொள்ளாதவர் இந்த அரங்கில் மட்டுமல்ல எந்த அமைப்பிலும் பங்கேற்கத் தகுதியற்றவர் என்று உறுதிபட இங்கு உரைக்கின்றோம். அவருக்கு நாங்கள் சென்ற ஜூன் மாதம் அனுப்பிய கடிதத்தின் நகலை இங்கு இணைத்துள்ளோம். இது குமுதம்  இதழுக்கும், திரு.ஞாநிக்கும் பதிவுத் தபாலிலும், இணையம் வழியாகவும் விடுத்த கோரிக்கையின் நகல்.

மரியாதைக்குரிய திரு.ஞாநி அவர்களே!
by Thirumurugan Gandhi on Tuesday, June 8, 2010 at 7:40pm
 
வணக்கம்
 
தங்களுடைய குமுதம் (9-6-2010) கட்டுரையில் ஐஃபா விருது விழா புறக்கணிப்பு பற்றிய தங்களது கருத்துக்கள் உண்மைக்கு எதிராகவும், தவறாக வாசகர்களை வழி நடத்தக் கூடிய தன்மையும் இருப்பதைக் கண்டோம்.
 
”ஐஃபா விருது விழாவை ஏன் புறக்கணிக்க வேண்டும்” என்று மே பதினேழு இயக்கம் வெளியிட்ட கட்டுரையை தாங்கள் படிக்க முடியாமல் போனதால் கூட தங்களின் இந்த கருத்துக் குறைபாடு வந்து இருக்கலாமோ என்று எண்ணுகிறோம். அல்லது தங்களின் ஆணித்தரமான கருத்தைத்தான் வெளியிட்டு இருந்தீர்கள் என்று தாங்கள் கூறும் பட்சத்தில், தங்களின் அறிவுக் குறைபாட்டையோ அல்லது புரிதல் குறைபாட்டையோ போக்கும் விதத்தில் தங்களுடன் கருத்து விவாதம் செய்ய மே பதினேழு இயக்கம் ஆர்வத்துடன் உள்ளது. ஏனெனில் தங்களின் தவறான புரிதல் வாசகர்களுக்கு மட்டும் அல்லாமல் தங்களின் அறிவிற்கும் தீங்கானது என்று உணர்ந்ததாலேயே இதை உங்களுக்கும், தமிழக மக்களுக்கும் அறிவிக்கிறோம்.
 
நீங்கள் விரும்பும் இடத்தில், உங்களுக்கு வசதியான தேதியில், வசதியான நேரத்தில் பத்திரிக்கையாளர் மற்றும் பொது மக்களின் முன்னால் தங்களுடன் விவாதிக்க விருப்பமாக இருக்கிறோம்.
 
இப்படிக்கு, மே பதினேழு இயக்கம்  | 9444146806 | www.mayseventeen.com 

Pin It