பெரும்பான்மை சமூகத்தில் காணப்படும் இருபாலின நிலையை கேள்விக்கு உட்படுத்துவதும், மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே, தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு தனக்கான ஒரு சமூகத்தையும், பாரம்பரிய குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய் மொழி மரபுகளையும் கொண்டுள்ளது இந்த அரவாணிகள் சமூகம். ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை மனிதர்களோடு ஒப்பிடுகையில் அரவாணிகள் நிலை உச்சகட்டத் துயரமானது.

M.R.Radhaஇயற்கையின் இயக்கக் கூறுகளாலும், ஆணாதிக்கப் பொது வெளிச் சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்ட அரவாணிகள் சமூகத்தின் தனித்த பண்பாடு, கலாச்சார சமூக நிலைகளைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்நூல்.

நூல்: அரவாணிகள் சமூக வரைவியல், ஆசிரியர்: பிரியா பாபு.
பக்கங்கள்: 96. விலை ரூ.70, வெளியீடு: கே.கே. புக்ஸ் நிறுவனம்,
18, சீனிவாச ரெட்டி தெரு (முதல் தளம்), தியாகராயா நகர்,
சென்னை 600 017. பேசி: 2433 8169.

******

ஒழுக்கக் கேட்டிற்கு இதுவரை காரணமாக இருந்தவைகளை, ஒழுக்க வளர்ச்சிக்குப் பயனில்லாமல் இருக்கிறவைகளை ஒழித்து விட்டு, ஒழுக்கப் பிரச்சாரமும், ஒழுக்க துரோகிகளாய் இருப்பவர்களை ஒழிக்கும் பிரச்சாரமும் செய்ய வேண்டியது தான் தனக்கென வாழாதவர்களுக்கு முக்கியம், ஒழுக்கமும் அன்பும் இல்லையானால், மனித சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது.

நூல்: பொருள் முதல் வாதம், ஆசிரியர்: தோழர் பெரியார்
பக்கங்கள் : 108, விலை : ரூ.50, வெளியீடு: கருத்துப்பட்டறை,
2, முதல் தளம், மிதேஸ் வளாகம், 4வது நிறுத்தம், திருநகர்,
மதுரை 625 006. பேசி: 98422 658584.

*****

தோழர் நல்லகண்ணுவும், பேராசிரியர் மார்க்ஸும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய விவாதங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகி உள்ளது. தமிழ் தேசியம், ஈழப் பிரச்சினை, அணு சக்தி ஒப்பந்தம், சோவியத் ரஷ்யப் பிரச்சினை பாகிஸ்தான் பிரச்சினை, தலித்தியம் போன்ற பல்வேறு பொருட்களில் நடத்திய விரிவான விவாதம் இந்த நூலில் முழுமையாக இடம் பெற்றுள்ளது.

வெளியீடு: தென் திசை.
நூல்: அரசியல், பக்கங்கள் : 88 விலை ரூ.50
முகவரி: 18, சீனிவாச ரெட்டி தெரு (முதல் தளம்)
தியாகராய நகர், சென்னை 600 017. பேசி: 2433 8169.

*****

நாடக மேடைக்கு நடிக்க வரும் போது கூட கைத்துப்பாக்கியோடு, இருக்கும் நடிகவேள் எம்.ஜி.ஆர் வீட்டிற்குள் கைத்துப்பாக்கியோடு சென்றது தற்செயலான, வழக்கமான ஒன்று தான். ஆனால் ‘‘என் முடிவு கடிதமும், நடிகவேள் கைத்துப்பாக்கியோடு சென்றதும் கொலை செய்யத் திட்டமிட்டது & திடீரென்று நடந்ததல்ல’’ என்று பக்தவத்சலத்தின் காவல் துறை பொய் வழக்குப் புனைந்தது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின் இரத்தக் காயத்துடன் தான் முதல் புகாரை கொடுத்ததாக நடிகவேள் சொன்னார். நடிகவேளின் காதருகே ஒருவர் சுட்ட காயம் இருந்தது. அந்தக் காயத்தை நடிகவேள் தற்கொலைக்கு முயன்றதாய் பக்தவச்சலத்தின் காவல் துறை மாற்றியது.பிணையில் வெளிவந்த நடிகவேள் இதை மக்களுக்கு உணர்த்தவே ‘‘சுட்டான்... சுட்டான்.. சுட்டேன்’ என்ற புதிய நாடக அறிவிப்புச் செய்தார்.

பக்கங்கள்: 48, விலை ரூ.20, புரட்சி நடிகர் எம்.ஆர். ராதா.
ஆசிரியர்: திருச்சி செல்வேந்திரன், வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
தொடர்பு முகவரி: இரா.மனோகரன், 68, காந்தி மண்டபம் வீதி,
பொள்ளாச்சி 642001. பேசி: 94421  28792.