முதன் முறையாக சென்னையில் தனது அமைப்பின் தேசிய செயற்குழுவை கூட்டி யிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். வழக்கம்போல அது கிளப்பும் பிரச்சினையைத்தான் சென்னையிலும் கிளப்பியிருக்கிறது.

"வங்காள தேசத்திலிருந்து இந்தி யாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியுள்ள முஸ்லிம்களைக் கண்டறிந்து அவர்களை வெளி யேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இவர்கள் அஸ் ஸாமிலும், வட கிழக்கு மாநிலங்க ளிலும் குடியேறியுள்ளனர். எனவே இவர்கள் திருப்பி அனு ப்பப்பட வேண்டும்' என அது தீர் மானம் நிறைவேற்றியுள்ளது. செய் தியாளர் சந்திப்பிலும் இதையே வலியுறுத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.

இந்த ஊடுறுவல் பிரச்சினை நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலி ருந்தே தொடர்ந்து பேசப்படும் விஷயம். தொடர்ந்து பேசப்படும் விஷயம் என்பதை விட தொடர் ந்து அரசியலாக்கப்படும் பிரச் சினை என்றதான் சொல்ல வேண் டும்.

ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள் ளிட்ட சங்பரிவார அமைப்புகள் தொடர்ந்து இப்பிரச்சினையை முன்னெடுத்து வருகின்றன. என்றா லும், சமீபத்தில் அஸ்ஸாமில் நிகழ்ந்த வரலாறு காணாத வன்மு றைக்குப் பின் இப்பிரச்சினை அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

வங்காள தேசத்திலிருந்து இந்தியாவிற்குள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல... மிகப் பெரும்பான் மையாக இந்துக்களும் சட்ட விரோதமாக குடியேறுகிறார்கள். அதேபோல பாகிஸ்தானிய இந் துக்களும் இந்தியாவிற்குள் குடி யேறி வருகின்றனர். இந்த நிலை யில், தேசியவாதம், தேசப் பற்று குறித்து வாய் கிழியப் பேசும் சங் பரிவாரங்கள் என்ன செய்ய வேண் டும்?

இந்தியாவிற்குள் ஊடுறுவும் அந்நிய நாட்டவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என அவை குரல் எழுப்பியிருந்தால் அதை வரவேற்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.úஸô வங்காள தேசத்திலி ருந்து இந்தியாவிற்குள் குடியேறி யுள்ள முஸ்லிம்களை மட்டும் கண் டறிந்து அவர்களை நாடு கடத்த வேண்டும். ஆனால் பாகிஸ்தானி லிருந்தும், வங்காள தேசத்திலிருந் தும் வந்து இந்தியாவிற்குள் குடி யேறியுள்ள இந்துக்களுக்கு அகதி கள் அந்தஸ்து கொடுத்து எல்லா வித உரிமைகளையும் கொடுத்து இந்தியாவிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன் சைடாக குரல் எழுப்புகிறது.

உண்மையில் வங்காள தேசத்தி லிருந்து இந்தியாவிற்குள் குடியே றியுள்ள முஸ்லிம்களைவிட இந்துக் களின் எண்ணிக்கைதான் அதிகம்.

அஸ்ஸாமை ஆட்சி செய்த காங்கிரஸ், ஜனதா கட்சி, அஸ் ஸாம் கன பரிஷத் போன்ற கட்சி கள் அரசியல் ஆதாயங்களுக்காக வங்கதேச ஊடுறுவல்களை அனு மதித்தன. காங்கிரஸ் கட்சி, இந்துக் கள் மட்டுமல்லாது முஸ்லிம்க ளும் தனக்கு வாக்களிப்பார்கள் என்றும் ஜனதா கட்சி, அஸ்ஸாம் கனபரிஷத் போன்றவை இந்துக்க ளின் வாக்குகளை அள்ளலாம் என்றும் போட்டி போட்டே இவர் களை அனுமதித்தன என்பதே உண்மை.

தற்போது வங்கதேச முஸ்லிம் களை மட்டும் விரட்டியடிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சொல்வதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது. அஸ்ஸாமில் ஆர்.எஸ். எஸ்.ஸின் அரசியல் குழந்தையான பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை.

மாநிலக் கட்சிகளுடன் அது கூட்டணி வைத்தா லும் சில இடங்களில்தான் வெல்ல முடியும் என்ற நிலையில்தான் அஸ்ஸாம் தேர்தல் களம் இருக்கிறது. இந்நிலையில் வங்கதேசத்திலிருந்து குடியேறியுள்ள முஸ்லிம்கள் விரட்டப்பட்டு விட்டால் இந்து வெறியூட் டப்பட்டு பெரும்பான்மை இந்து மக்களின் வாக்கு களை பெறலாம் என அது கணக்கு போடுகிறது.

வங்கதேச மக்களின் ஊடுறுவல்களுக்கு காங்கி ரஸ்தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மீது பழியைப் போடும் ஆர்.எஸ்.எஸ்., ஆகஸ்டு 15, 1985ல் அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் கூட்டமைப்பின ருக்கும் ராஜீவ்காந்திக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந் தத்தை நிறைவேற்றத் தவறியதன் விளைவுதான் அந்நிய நாட்டினரின் ஊடுறுவல் அதிகரிக்கக் கார ணம்; இதனால் வங்கதேச முஸ்லிம்கள் இந்தியாவிற் குள் ஊடுறுவி அஸ்ஸாம் மற்றும் வட கிழக்கு மாநி லங்களின் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட மக்கள் தொகை புள்ளி விபரங்களில் பெரும் மாற்றத்தைச் செய்து விட்டனர் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

வங்கதேச முஸ்லிம்களின் குடியேற்றத்தினால் மட்டுமல்ல... இந்துக்களின் குடியேற்றத்தினால்கூட இந்த புள்ளி விபரங்களில் மாற்றங்கள் நிகழத்தான் செய்யும் என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு புரியாத தல்ல... ஆனால் அதன் இலக்கு முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்பதுதான்.

அஸ்ஸாம் மாணவர் கூட்ட மைப்புக்கும் (தற்போ தைய அஸ்ஸாம் கனபரிஷத் கட்சி) அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்திக்கும் இடையில் நடைபெற்ற அஸ்ஸாம் உடன்பாடு - மாணவர் கூட்டமைப்பு ஆயு தங்களை கை விட்டு அரசியலுக்கு திரும்பினால் அங்கு அரசாங்கம் உருவாக்கித் தர வழிவகை காணப்படும் என்கிற முக்கிய அம்சத்தை கொண்டது.

அந்த ஒப்பந்தத்தில், இந்தியாவிற்குள் சட்ட விரோ தமாக குடியேறியுள்ள அந்நிய நாட்டினரை வெளி யேற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது ஆர். எஸ்.எஸ். சொல்வதைப்போல முஸ் லிம்களை வெளியேற்ற வேண்டும்; இந்துக்களுக்கு அகதிகள் அந்தஸ்து தர வேண்டும் என்ற வகையில் இல்லை.

அந்த ஷரத்து இப்படி சொல்கிறது...

Problem of Foreigners in Assam என்ற தலைப்பின் கீழ் Foreigners Issue என்ற குறுந்த தலைப்பின் கீழ்,

All Persons who were expelled earlier. But have since re-entered illegally in to Assam, Shall be expelled

(முன்னதாக வெளியேற்றப்பட்டு மீண்டும் சட்ட விரோதமாக அஸ்ஸாமிற்கு நுழைந்திருக்கிற அனை வரும் வெளியேற்றப்பட வேண்டும்)

அதே போல, Foreigners who came to Assam on or after March 25, 1971 shall continue to be detected, deleted and expelled in accordance with law, immediate and practical steps shall be taken to expel such Foreigners.

(மார்ச் 25, 1971ல் அல்லது அதற்குப் பின் அஸ் ஸாமில் குடியேறியவர்கள் தொடர்ந்து கண்டறியப் பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு இணங்க அவர் களின் (குடியேற்ற) ஆவணங்கள் நீக்கப்பட்டு வெளி யேற்றப்படுவார்கள். இவர்களை வெளியேற்றும் செயல்பாட்டு ரீதியிலான வழிமுறைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.)

ஆக, இந்த உடன்படிக்கையின்படி 1971க்குப் பின் சட்ட விரோதமாக குடியேறிய அனைத்து மக்களும் தான் வெளியேற்றப்பட வேண்டும். இதில் முஸ்லிம் கள் மட்டும் வெளியேற வேண்டும் என்று சொல்ல ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு உரிமை இல்லை. அஸ்ஸாம் உடன்பாட்டில் சொல்லப்படாத விஷயத்தைக் கூறி ராஜீவ்காந்தி மீதோ, காங்கிரஸ் மீதோ குற்றம் சுமத்த வும் அதற்கு தார்மீக உரிமை கிடையாது.

இந்தியாவிற்குள் ஊடுறுவும் இந்துக்களை மட்டும் அகதிகள் அந்தஸ்து கொடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு, உலகம் முழுக்க இருக்கும் இந்துக்களுக்கு இந்தியாதான் தாய்நாடு என்று ஆர்.எஸ்.எஸ். வியாக்கியானம் கூறுகிறது.!

இந்தியா எந்தக் காலத்திலும் இந்துக்களின் நாடாக இருந்ததில்லை. இன்றைய இந்தியா பல நூறு தேசங்களாக கூறுபட்டுக் கிடந்தது. இவற்றை ஒன்றி ணைத்து இந்தியா என்ற அகண்ட நிலப்பிரதேசத்தை உருவாக்கியவர்கள் முகலாயர்கள். சுமார் 1000 ஆண் டுகள் இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கி றது இந்த நிலப்பரப்பில்! அதனால் வங்காள தேச, பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கு இந்தியாதான் தாய் நாடு என்று முஸ்லிம்கள் சொன்னால் அதை ஆர்.எஸ்.எஸ். ஒப்புக் கொள்ளுமா?

பாகிஸ்தானிலிருந்து முறையான ஆவணங்களு டன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்து பின்னர் பாகிஸ்தான் திரும்பாமல் இங்கேயே பல வருடங்களாக தங்கியுள்ள ஏராளமான இந்துக்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என குர லெழுப்ப ஆர்.எஸ்.எஸ். தயாரா?

பாகிஸ்தானிலிருந்தும், வங்கதேசத்திலிருந்தும் வந்து இந்தியாவிற்குள் குடியேறுபவர்களை அந்நிய நாட்டினராகத்தான் பார்க்க வேண்டும். அந்நிய நாட்டினரை வெளியேற்ற சட்ட ரீதியான என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ அதைத்தான் பிரயோ கிக்க வேண்டும். இதுதான் நியாயமான, சட்ட ரீதியான நடவடிக்கையாக இருக்க முடியும். மாறாக, இவர் களை மத ரீதியாகப் பிரித்துப் பார்த்து இந்தியாவில் இந்துக்கள் தங்கிக் கொள்ளலாம். முஸ்லிம்கள் விரட் டியடிக்கப்பட வேண்டும் என்பது மதவெறியின் உச்சம்.

இந்தியாவிற்குள் ஊடுறுவியுள்ள பாகிஸ்தானியர் கள், வங்கதேசத்தவர்கள் அனைவரும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தையே நாமும் வலி யுறுத்துகிறோம். ஆனால் அது முஸ்லிம்கள், இந்துக் கள், கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாட்டின் அடிப்படை யில் இருக்கக் கூடாது என்பதை கூடுதல் அழுத் தத்துடன் சொல்கிறோம்.

இந்தியாவிற்கு இரட்டை நிலை தேவையில்லை!

டிசம்பர் 31, 2004க்கு முன் பாகிஸ்தானிலி ருந்து இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத் திற்குள் குடியேறிய பாகிஸ்தானிய இந்துக்கள் 919 பேருக்கு ராஜஸ்தான் அரசு இந்திய குடியுரிமையை வழங்கும் முயற்சியை துவங்கியிருக்கிறது என்ற செய்தியை டெக்கான் கிரானிகல் ஏடு வெளியிட்டுள் ளதாக ஆகஸ்டு 31, 2012 தேதியிட்ட தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் ஆங்கில இதழ் கூறுகிறது.

குடியுரிமை வழங்குவதற் காக ராஜஸ்தான் அரசு, சம்மந் தப்பட்ட பாகிஸ்தானிய இந்துக்க ளிடம் உள்ள உரிய ஆவணங் களை சமர்ப்பிக்க கேட்டுக் கொண் டது.

“எங்கள் பதிவுகளின்படி, இந் திய குடியுரிமை பெற விண்ணப் பிப்பதற்கு அடிப்படை தகுதி யான 7 வருட காலத்தை இந்தி யாவிலேயே பூர்த்தி செய்துள்ளனர் பாகிஸ்தான் நாட்டிலிருந்து வந்த இந்துக்கள்...'' என தெரிவித் துள்ளார் ஜோத்பூரின் கூடுதல் மாஜிஸ்ட்ரேட் ராஜேந்திர சிங் ரத்தோட்.

மேலும், “நடைமுறை விஷயங்களை கடை பிடிக்க அவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறோம். கட்டணம் உள்பட அவர்கள் எல்லா நிபந்தனைகளை யும் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு இந்திய குடியு ரிமை வழங்கப்படும்...'' என்றும் தெரிவித்துள்ளார் ரத்தோர்.

இந்த 919 பாகிஸ்தானிய இந்துக்களும் பாகிஸ் தானின் கராச்சி, பலுசிஸ்தான் மற்றும் சிந்து பகுதி யிலிருந்து ராஜஸ்தானுக்குள் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் வரும் இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங் கும் அரசு, இந்தியாவை நேசிக்கும் பாகிஸ்தானிய முஸ்லிம்களும், வங்கதேச முஸ்லிம்களும் இந்தியா விற்குள் வந்தால் இதே நடைமுறையைத்தான் பின்பற்றுமா?

இந்திய அரசு இப்படி செய்து விடக் கூடாது என்ப தற்காகத்தான் பாகிஸ்தானிலிருந்தும், வங்கதேசத் திலிருந்தும் இந்தியாவிற்கு வரும் முஸ்லிம்களைத் தீவிர வா திகள், பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தி - அவர் களை விரட்டியடிக்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இந்திய அரசும் இதில் ஒரு தலைப்பட்சமாகவே நடந்து கொள்கிறது. ராஜஸ்தானில் இதுவரை 7 ஆயிரம் பாகிஸ்தானிய இந்துக்கள் தங்கியிருப்பதாக அந்த அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள் ளது.

இலங்கையிலிருந்து வந்து ஆண்டுக்கணக்கில் அகதிகளாக தமிழகத்தில் அல்லல்பட்டு வரும் ஈழத் தமிழ் மக்கள் அகதிகளைவிட கீழ் நிலையில் நடத் தப்படுகின்றனர். தமிழகத்திலேயே தங்கி விட்ட ஈழத் தமிழர்கள் இந்தியக் குடியுரிமை பெற முழு தகு தியுடையவர்கள். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வக்கற்று இருக்கிறது தமிழக அரசு.

பாகிஸ்தானும், வங்கதேசமும், இலங்கையும் மதச்சார்புடைய நாடுகள். ஆனால் இந்தியா மதச்சார் பற்ற நாடு. எனவே இந்த விஷயத்தில் இரட்டை அளவுகோல் இந்தியாவிற்குத் தேவையில்லை.