பொதுப் போட்டி முறையில் திறமைசாலிகள் தேர்ந்து எடுக்கப்படுவது இல்லை என்பதையும், இட ஒதுக்கீட்டின் மூலம் ஓரளவிற்காவது திறமைசாலிகளைத் தேர்ந் தெடுக்க முடிகிறது என்பதையும், முழு அளவில் திறமைசாலிகளைத் தேர்ந்து எடுப்பதற்கான ஒரே வழி விகிதாச்சாரப் பங்கீடுதான் என்பதையும் புரிந்து கொள்ள முடியாத ஹர்திக் படேல் என்ற இளைஞர் மீதான வழக்கின் மீது தீர்ப்புக் கூறிய குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பர்திவாலா ( ..) தனது கருத்தையும் அதில் தெரிவித்தார்.

"இந்திய நாட்டைக் கெடுக்கும் அல்லது முன்னேறவிடாமல் தடுக்கும் இரண்டு விஷயங்கள் என்னவென்று கேட்டால், அவை இட ஒதுக்கீடும், ஊழலும் என்று கூறுவேன். சுதந்தரம் அடைந்து 65 ஆண்டுகளுக்குப் பின்னும் ஒருவன் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம்" என்பதுதான் அந்தக் கருத்து. இத்தீர்ப்பும், கருத்தும் வெளிவந்த பின் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இந்திய பொதுவுடைமைக் கட்சி, தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அந்நீதிபதி மீது குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றத்தில் விவாதித்து, தண்டனை வழங்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான இக்கருத்தை ஒப்புக் கொள்ள முடியாது என்றும், இப்படிப்பட்ட கருத்து உடைய ஒருவர் நீதிபதியாகப் பதவி வகிப்பது, நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்கச் செய்வதாக உள்ளது என்றும் அம்மனுவில் அவர்கள் கூறியுள்ளனர், இதன் தெடர்ச்சி யாக 18.12.2015 அன்று அந்த நீதிபதி, தனது கருத்து வழக்கின் தீர்ப்புக்குத் தொடர்பு இல்லாதது என்றும், தேவை இல்லாதது என்றும் கூறி, அத்தீர்ப்புரையில் இருந்து விலக்கிக் கெண்டுவிட்டார்.

அதன் மூலம் குற்றச்சாட்டில் இருந்து நழுவிக்கெண்டார். இட ஒதுக்கீட் டிற்கு எதிராக ஒரு நீதிபதி கருத்தைக் கூறியவுடன், அதை எதிர்த்து அவர் மீது குற்றஞ்சாட்ட முனைந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் பாராட்டிற்கு உரியவர்கள். அதுவும் அவர்களுடைய உடனடியான செயல்பாடு மிகவும் பாராட்டிற்கு உரியது. ஆனால் மண்டல் குழுவின் சில பரிந்துரைகளை ஏற்று வி.பி.சிங் அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு மைய அரசு வேலை வாய்ப்பில் 27 இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிரான வழக்கில், இட ஒதுக்கீட்டிற்கு 50 உச்ச வரம்பு விதித்த உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பு, சமூக நீதிக்கு மிகவும் கேடு பயக்கும் தீர்ப்பாகும். அரசியல் நிர்ணயச் சட்டத்தில் இட ஒதுக்கீட்டு அளவுக்கு எவ்விதமான உச்ச வரம்பும் விதிக்கப்பட வில்லை.

அப்படி இருக்கையில், சமூக நீதிக்குக் கேடு பயக்கும் இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் மீது குற்றஞ் சாட்டி, நாடாளுமன்றத்தில் விவாதித்து, தண்டனை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வராதது மிகவும் மானக்கேடான விஷயமாகும்.

இட ஒதுக்கீடு சிறப்பான முறையில் செயல்பட்ட இடங்களில் எல்லாம், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்சாதிக் கும்பலினரைவிடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பித்து இருக்கும்போது, இட ஒதுக்கீட்டுக் கெள்கையை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்காமல் 50க்குக் குறுக்கிய நீதிபதிகள் நாட்டு முன்னேற்றத்திற்கு எதிரான வர்கள் என்று நாடாளு மன்றத்தில் விளக்கி இருக்க வேண்டும். அப்படி விளக்கி விட்டு, நாட்டு முன்னேற் றத்தைப்பற்றி அக்கறை கொள்ளாதவர்கள் தகுந்தபடி தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியும் அப்படிச் செய்ய முன்வராதது மிகவும் வேத னைக்குரியது. சரி! அப்படித் தான் செய்யவில்லை.

உச்சநீதிமன்றத்தின் 50 உச்ச வரம்புத் தீர்ப்பைச் செயலற்றுப் போகச் செய்யும் விதமாக, அரசியல் நிர்ணயச் சட்டத்தில் திருத்தம் செய்து இருக்கலாம் அல்லவா? அதையும் செய்யவில்லை. சரி! காலம் கடந்து, இப்போதா வது இதைச் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வருவார்களா?