சமற்கிருதம் பேச்சுவழக்கில் இல்லாத மொழி : இது நூற்றுக்கு நூறு மெய், மெய். மெய்யே!

இந்தி அதிகம் பேரால் பேசப்படும் மொழி” : இது நூற்றுக்கு நூறு பொய், பொய், பொய்யே!

பார்ப்பனிய - பிராமணிய மதமே இந்துமதம். எங்கோ தென்கோடியில் இருக்கிற கேரளாவில் பிறந்த ஆதிசங்கரர் கி.பி.800-832இல் 32 ஆண்டுகளே வாழ்ந்தார். அவர் இமயம் முதல் குமரி வரை உள்ள பரப்பைச் செயல்படுகளமாகக் கொண்டார். இந்தியா முழுவதிலும் இருந்த அரசர்களைக் கண்டு, அவர்கள் வழியாக, பௌத்த பிக்குகளுடன் வாதிட்டு, ‘இந்து மதமே உயர்ந்த மதம்’ என்பதை நிலைநாட்டினார்; பார்ப்பனரே எல்லா இந்துக்களுக்கும் மதகுரு என்பதை நிலைநாட்டினார். இதை எதிர்த்தவர்கள் அப்போதும் இருந்தனர்; இப்போதும் உள்ளனர். அந்த எதிர்ப்பை அவரவர் பகுதியில் மட்டுமே செய்தனர்; செய்கின்றனர். இந்திய அளவில் எப்போதும், எவரும் செய்யவில்லை.

பார்ப்பன மதம்-நீர் புனிதமானது; கங்கை, பிரம்ம புத்ரா புனிதமானவை; பசு, புனிதமானது; குரங்கு புனித மானது; சமற்கிருமம் புனிதமானது - தேவர்களுக்கும் கடவுள்களுக்கும் - சிலை வழிபாட்டுக்கும் - ஆண்-பெண்ணை இணைத்து வைக்கும் விவாகம் என்கிற திருமணத்துக்கும் - ஈமக் கடன்களுக்கும் ஓதப்பட ஏற்ற தேவ மொழி - புனித மொழி என்பதை இந்தியா முழு வதிலும் உள்ள இந்துக்களை நம்ப வைத்தது ஏற்க வைத்தது. இவற்றையும் இந்திய அளவில் எவரும் எதிர்க்கவில்லை.

கி.பி.6ஆம் நூற்றாண்டில், வடக்கில் குப்தர் ஆட்சிக் காலம் முதலும், கி.பி.8ஆம் நூற்றாண்டில், தெற்கில் பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சிக் காலம் முதலும் மேலே கண்ட நம்பிக்கைகளும் நடை முறைகளும் உள்ளன. இன்றுவரை இவை மாற்றப்பட வில்லை.

இஸ்லாமியர்கள் ஆட்சியோ, வெள்ளையர் கள் ஆட்சியோ இவற்றை மாற்றிட முன்வரவில்லை. இவை அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன.

வெள்ளையர் வெளியேறிய பின்னர் இந்தியா முழுவதையும் ஆண்ட இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி ஆட்சியோ, 1977 முதல் 1979 மற்றும் 1990-1996 வரை தவிர, மீதமிருந்த காலத்தில் காங்கிரசிடமே இருந்தது. இதை மாற்றுவதற்கான, உறுதியான - இணக்கமான ஒற்றை மாற்றுத் திட்டத்தை 1948 பிப்ரவரியிலேயே வகுத்த ஒரே இந்துமத அமைப்பு, இராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் மட்டுமே. கி.பி.2000இல் இந்தியாவில் இராமராஜ்யம் அமைப்பதே அத்திட்டம்.

25.12.1925இல் நிறுவப்பட்ட இந்தியப் பொதுவுடை மைக் கட்சி இந்தியாவை செயல்படு களமாகக் கொண்டது. ஆனால் முன்னர் சொல்லப்பட்ட பார்ப்பன மத “புனிதக் கோட்பாடுகள்” மற்றும் நால்வருணம், உள்சாதிப் பிரிவினைகள் பற்றி - எந்தவேலைத் திட்டத்தையும் அக்கட்சி மேற்கொள்ளவில்லை. இந்திய உழைக்கும் மக்கள் விழிப்புணர்வு பெறவும், விடுதலை பெறவும் - மேலேகண்ட இந்திய நிலைமைகள் பெருந்தடைகள் என்பதாக 14.5.1853லும், 10.6.1853லும் கார்ல்மார்க்சும் - எங்கெல்சும் எழுதியவற்றை இவர்கள் மனங்கொள்ள வில்லை. இது, ஏனோ தெரியவில்லை.

1916இல் நிறுவப்பட்ட திராவிடர் இயக்கமும், 26.12.1926இல், பார்ப்பனர் அல்லாதார் அமைப்பின் முயற்சியால் பெரியாரால் நிறுவப்பட்ட சுயமரியாதை இயக்கமும் எப்போதும் இந்தியாவை செயல்படு கள மாகக் கொள்ளவில்லை. இந்தியாவை உடைத்து ‘திராவிட நாடு’, ‘தனித்தமிழ் நாடு’ இவற்றை நிறுவவ விரும்பிய இவ்அமைப்புகளின் செயல்படுகளம் தமிழ் நாட்டோடு நின்றது. 1938இல் கட்டாய இந்திப் பாடத்தை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெரும் போராட்டம் சித்தூ ருக்கு வடக்கே கால்கொள்ளவில்லை.

இவை நிற்க.

இந்திய ஆட்சியைப் போதிய பெரும்பான்மையுடன் 2014இல் கைப்பற்றிய பாரதிய சனதாக் கட்சியின் நரேந்திர மோடி அரசு, பதவி ஏற்ற நாள் தொட்டு, இராமர்  கோவிலைக் கட்டுவது, இந்தி ஆட்சி மொழி என்பதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றுவது, சமற்கிருத மொழியைத் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி - உயர் தொழிற்கல்வி வரையில் ஒரு கட்டாயப் பாட மொழியாக ஆக்குவது, ‘மூச்சுப் பயிற்சி’யை ‘யோகா’ என்கிற பேரால் பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் புகுத்தி, ‘சூரிய பகவான்’ வணக்கத்தை இந்து - இஸ்லாம்-கிறித்துவ-சீக்கிய மக்களை ஏற்கச் செய்வது; வேதக்கணக்கு, வேத அறிவியல் என்கிற பேரால் புரோகிதம், சோதிடம், வேதங்கள் இவற்றைப் பாலர் பள்ளியில் தொடங்கிப் பல்கலைக்கழகம் வரையில் கட்டாயப் பாடங்களாகத் திணிப்பது என்கிற எல்லாத் திட்டங்களையும் பற்றி, 2015 கல்வி ஆண்டில் தொடங்கி 2016 பிப்பிரவரி, ஏப்பிரல், மே மாதங்களில் திட்டவட்ட மான முடிவுகளை மோடி அரசு அறிவித்துவிட்டது.

1.இம்முடிவுகளை நாம் எல்லோரும் எதிர்க்க வேண் டும் - அதாவது இந்தியர் எனப்படும் எல்லோரும் எதிர்க்க வேண்டும் என்பது முதலாவது.

2. இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிராத - எல்லாப் பிறமொழிக்காரரும் எதிர்க்க வேண்டும் என்பது இரண்டாவது.

3. இந்த இரண்டு எதிர்ப்புகளையும் மேற்கொள்ள விரும்பும் உண்மையான கொள்கையாளர்கள் இந்தியா முழுவதையும் செயல்படுகளமாகக் கொள்ள வேண்டும் என்பது மூன்றாவது.

ஏன்? ஏன்?

1. தேசியக் கல்வி நிறுவனங்கள் தவிர்த்த - தொடக் கக் கல்வி, நடுநிலைக்கல்வி, உயர்நிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, எல்லாத் தொழிற் கல்வி நிறுவனங்கள் இவற்றைத் தொடங்குதல், நடத்துதல், பாடத் திட்டங்களை வகுத்தல், தேர்வுகள் நடத்துதல்; அலுவலர்களையும் ஆசிரியர்களையும் அமர்த்துதல் உட்பட்ட கல்வி தொடர்பான முழு அதிகாரம் 1937 முதல் 2.1.1977 வரையில், மாகாண அரசுகள் (அ) மாநில அரசுகளின் அதிகாரங்கள் பட்டியலில் (Provincial List or State List) இருந்தது. 3.1.1977 முதல் இவ்வதிகாரங்கள் மாநில அரசு அதிகாரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, பொது அதிகாரங்கள் பட்டியலில் (Concurrent List) சேர்க்கப்பட்டுவிட்டன.

அதனால் கல்வியைக் குறித்து எதுபற்றியும் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுவிட்டது.

இதன் விளைவு என்ன?

(அ)       பாடத்திட்டங்களைத் தீட்டும் அதிகாரம் முற்றிலு மாக மய்ய அரசுக்குக்கீழ் வந்துவிட்டது.

(ஆ)      6ஆம் வகுப்பிற்குமேல் உயர்கல்வி, உயர் தொழிற் கல்வி வரையில் பெரிதும் ஆங்கிலமே பயிற்று மொழியாக நீடிக்கிறது.

இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் கள் உட்பட, எட்டாம் அட்டவணையில் சேர்க்கப்பட் டுள்ள மற்ற 21 மொழிக்காரர்களும், எட்டாம் அட்ட வணையில் சேர்க்கப்படாத நூற்றுக்கணக்கான மொழிக் காரர்களும்-இந்தியர் எல்லோருக்கும் அயல்மொழி யான ஆங்கில மொழிவழியில் படிக்க நேர்ந்துவிட்டது. விடுதலை பெற்ற ஒரு நாட்டில் அவரவர் தாய்மொழி வழியில் மட்டுமே எல்லா நிலைக் கல்வியும் தரப்பட வேண்டும் என்கிற தாய்மொழி உரிமை பறிக்கப்பட்டு விட்டது.

அதனால் ஒவ்வொரு இந்தியனின் தாய்மொழி யின் வளர்ச்சியும் தடுக்கப்பட்டுவிட்டது.

எனவே கல்வி பற்றிய முழு அதிகாரமும் - தேசியச் சிறப்புக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட முழு அதிகாரமும் மாநில அரசின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

ஒருகணம் எல்லோரும் எண்ணுங்கள். இந்திய அளவில் செயல்படு களம் அமைத்துப் போராடி னால் ஒழிய - இந்த அதிகார மாற்றம் வேறு எப்படி, எப்போது மாநிலங்களுக்கு வந்துசேரும்?

2.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பகுதி யிலுள்ள விதி 343(1)இல் கூறப்பட்டுள்ளபடி, “இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக (அ) ஆட்சி மொழியாக, தேவநாகரி எழுத்து வடி விலுள்ள இந்தி இருக்க வேண்டும் - The Official

language of the Union shall be Hindi in Devanagari Script”.

343 முதல் 349 முடிய உள்ள விதிகள் இந்திய ஒன்றியத்தின் பல துறைகளிலும் அலுவல் மொழி இந்தி தான் என்றே பேசுகின்றன.

இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழியாக இந்தி வரித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று முதலில் பேசியவர், காந்தியார். அதை ‘இந்தியா’ ஏட்டில் ஆதரித்து எழுதியவர் தேசியக் கவிஞர் பாரதியார்.

இந்திய தேசியக் காங்கிரசின் உயர்மட்டக் குழு விலும், ஒரு வாக்கு வேறுபாட்டில், இந்திய ஒன்றியத் தின் ஆட்சிமொழியாக இந்தி இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்திய அரசமைப்பு அவையில், இந்திய ஒன்றியத் தின் ஆட்சிமொழியாக இந்தி இருக்க வேண்டும் என்கிற முடிவு 14.9.1949இல் எடுக்கப்பட்டது.

இவ்வாறு முடிவு செய்யப்பட எல்லோராலும் சொல்லப்பட்ட ஒரே காரணம், ‘இந்தி அதிகம் பேரால் பேசப்படும் மொழி’ - இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே இந்தியாவில் அதிகம் பேர் என்பதுதான்.

இந்த கூற்று, மற்ற மொழிகளைத் தாய்மொழிகளைக் கொண்டவர்களை விட - அம்மொழிகளைப் பேசுகிறவர் களைவிட அதிகம் பேரால் இந்தி பேசப்படுகிறது என் பதை அடிப்படையாகக் கொண்டது.

மேலும் அரசமைப்புச் சட்டத்தின் எட்டாம் அட்ட வணையில், அரசமைப்பு விதிகள் 344(1) மற்றும் 351-இன்படி,

மொழிகள் – Languages என்று மட்டும் குறிப் பிட்டுள்ள இந்தி உட்பட்ட 22 மொழிகள் எதற்காக - எந்தத் தகுதியைக் குறிப்பதற்காக வெறும் ‘மொழிகள்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று எல் லோரும் சிந்திக்க வேண்டும்.

பிராந்திய மொழிகள்

தாய்மொழிகள்

பேச்சுவழக்கில் உள்ள மொழிகள்

என்கிறவற்றில் எந்தத் தகுதியைக் கொண்டு இப்படிப் பட்டியலிடப்பட்டுள்ளது?

I.இந்த மூன்றில் எந்த வகையை, ‘மொழிகள்’ என்கிற தலைப்பு குறித்தாலும், இங்கு பட்டியலி டப்பட்ட 22 மொழிகள் மட்டுமே - பிராந்திய மொழிகளா? தாய்மொழிகளா? பேச்சுவழக்கில் உள்ள மொழிகளா? என்பதும், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை யைவிட, மற்ற 21 மொழிகளைத் தாய்மொழி களாகக் கொண்டவர்களின் கூட்டு எண்ணிக்கை யைக் காட்டிலும் அதிகமா, குறைவா என்பதும் தெரியவேண்டும்.

II.            பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான தகுதி (அ) தாய்மொழி, (ஆ) பிராந்திய மொழி, (இ) பேச்சு வழக்கில் உள்ள மொழி என்றால் - இந்த 22 மொழிகளை அல்லாமல் தாய்மொழிகள் எத்தனை? அல்லது பிராந்திய மொழிகள் எத்தனை? பேச்சு வழக்கில் உள்ள மொழிகள் எத்தனை? இந்த 22 மொழிகளை அன்னியில் இப்பட்டியலில் சேர்க்கப் படாத - மீதம் உள்ள மொழிகள் எத்தனை?

22 மொழிகளுடன் பட்டியலில் சேர்க்கப்படாத மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கையின் கூட்டுத் தொகை மட்டும் எத்தனை? இவற்றையும் நாம் காணவேண்டும்.

அரசமைப்புச் சட்ட அவையில், XIV-A – LANGUAGE என்னும் பகுதியின்கீழ் விதி 301 A (1) என உள்ளது - ஒன்றிய ஆட்சிமொழி பற்றிய விதி இந்த வரிசை எண், இறுதியில் 343-(1) என மாற்றப்பட்டது.

இதுபற்றிய விவாதம் 12.9.1949, 13.9.1949, 14.9.1949 ஆகிய மூன்று நாள்கள் அரசமைப்புச் சட்ட அவையில் நடைபெற்றது.

விவாதங்களில் பெரும்பங்கு கொண்ட உறுப்பி னர்கள் என். கோபாலசாமி அய்யங்கார், புருசோத்தம தாஸ்தாண்டன், தமிழக உறுப்பினர்கள் முகமது இஸ்மாயில் சாகிப், கோவை டி.ஏ. இராமலிங்கம் செடியார் போன்றவர்களாவர்.

இறுதியாக, “இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழி (அ) அலுவல் மொழி தேவநாகரி வடிவத்திலான இந்தி ஆகும். எண்கள் ஒன்றியத்தின் அலுவல்களுக்கு இந்தியாவில் இப்போது நடப்பில் உள்ளதும், அனைத்து நாடுகளின் பயன்பாட்டில் உள்ளதும் ஆன வடிவில் இருக்கும்” என்ற விதி, 14.9.1949இல் நிறைவேற்றப்பட்டது.

மற்றெல்லா விதிகளும் அன்றே நிறைவேற்றப்பட்டன.

இதன்படி, இச்சட்டம் நடப்புக்கு வரும் 26.1.1950 முதல் 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் ஒன்றிய அலுவல் மொழியாக இருக்கும்; அதற்குள் இந்தி அலுவல் மொழி யாகப் பயன்படுவதற்குத் தகுதியான மொழியாக வளர்க்கப்படும் என்பதும் முடிவானது.

இனி, இவ்வெளிச்சத்தில் இப்போது உள்ள எட்டாவது அட்டவணையின்கீழ் பட்டியலிடப்பட்ட 22 மொழிகள் - அந்த ஒவ்வொரு மொழியையும் - தாய்மொழியாகக் கொண்டிருப்போர்-மற்றும் பேசுவோர் எண்ணிக்கை, 1961 முதல் ஒவ்வொரு பத்தாண்டிலும் எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

‘2011இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கு வெளியான அரசு வெளியீடு வேண்டும்’ என்று கோரி, 29.7.2016 அன்று, புதுச்சேரி  French Institute and Library என்கிற நூலகத்தாரிடம் கோரினேன். அவர்கள் 2001 கணக்கை மட்டுமே கொடுத்தனர்.

சென்னையிலுள்ள கன்னிமரா நூலகம், சென்னை பெசன்ட் நகரில் உள்ள இந்திய மக்கள் தொகைக் கணக்கு இயக்ககம் இவற்றில் 16.8.2016இல் தேடினேன். 2011 மக்கள் தொகைக் கணக்குப் புள்ளிவிவரங்கள் இன்றுவரை இந்திய அரசினரால் வெளியிடப்படவில்லை என்பதை உறுதியாக அவர்கள் தெரிவித்தனர்.

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் “மொழிகள்” என்கிற தொகுதியில் :

SEPTEMBER 2016 3 9 16 Page 20

 

SEPTEMBER 2016 3 9 16 Page 21

SEPTEMBER 2016 3 9 16 Page 22

SEPTEMBER 2016 3 9 16 Page 23