இன்றைய சூழ்நிலையில், இயற்கை அதிகம் பாதிக்கப்பட்டுள்து; காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டுள்ளன. தாவரங்கள் பாதுகாக்கப்படவில்லை. நமக்குப் பயன் தரும் வேளாண்மையிலும் நச்சுக் கலந்த வீரிய வகைத் தாவரங்களைக் கொண்டு உற்பத்தி செய்வ தால் நாமும் நல்ல உணவுப் பொருட்களை உண்பதில்லை, நாம் பயன்படுத்தும் அனைத்துக் காய்கறிகள், பழவகைகள், இறைச்சி போன்றவற்றிலும் வீரிய வகைகளைக் கொண்டு உற்பத்திச் செய்வதால் இரசாயன நச்சு நம் உடலில் சேர்கின்றது. நாம் வாழும் காலமும் குறைந்து கொண்டே உள்ளது என்பது உண்மையே.

இதைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படு வதில்லை. எப்படியாவது மக்கள் மீது வரியைச் சுமத்தி, வருமானத்தை அடைகின்றனர். தினக்கூலிகாரர்கள் கூட வரிகட்டுகின்றனர். இது அவர்களுக்குத் தெரிய வில்லை.

ஒரு பொருளை வாங்கி பயன்படுத்தினாலே அந்தப் பொருள் மீது போடப்பட்ட வரி, அதை நுகர் வோர் தலைமீது சுமத்தப்படுகிறது. அனைத்து வீரிய வகைகளையும் ஒழித்து, இயற்கையாக அனைத்தையும் விளைவிக்கவும், இயற்கையைப் பாதுகாக்க வும் நாம்தான் முயற்சிக்க வேண்டும்.

இயற்கையும்வாழ, மனித இனமும் வாழ, நீர் நிலைகள், குளம், குட்டைகள், ஏரிகள், ஓடைகள் அகிய வற்றை அந்தந்தப் பகுதியில் வாழும் மக்கள் முன் முயற்சி எடுத்துப் பாதுகாக்கவேண்டும். இதைச் செய்யத் தவறினால் நாம் வாழத்தகுதியற்றவர்களாவோம்.

இன்றைய சூழலில் நம்மை ஆட்சி செய்பவர்களே அனைத்து நீர்நிலைகளையும் அழித்து வருகின்றனர். எவர் ஒருவர் இதுபோன்றச் செயலில் ஈடுபட்டு வருகின்றாரோ அவரையும் அவர் சார்ந்தோர் கட்சியையும் தூக்கி எறிய மக்களால் செய்யமுடியும்.

பணம், மது, கறிச்சோறு, அன்பளிப்பு போன்றவற்றைக் கொடுத்து, வாக்குக் கேட்டால், தயங்காமல் மயங்காமல், நல்லவர்களை அடையாளம் கண்டு, வாக்களியுங்கள், கூட்டுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள, மானிய ஊழல், பால் கொள்முதல் ஊழல் அனைத்தும் பார்த்துவரும் நாம்தான் கவனமாகச் செயல்பட வேண்டும்.

இயற்கையை பாதுகாக்க வேண்டும், மதுக்கடை நடத்தி நம்மை அழிக்கும் அரசும் நமக்கு தேவை இல்லை. இதுபோன்று நமக்கு நாமே சிந்தித்தால் அனைவரும் நலம் பெறலாம்.