விடுதலை பெற்ற இந்தியாவில் கடந்த 70 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளில் குழப்பமும் தேக்க நிலையும் கடந்த மூன்றாண்டுகளாக பிரதமர் மோடி பதவி ஏற்றவுடன் நிலை கொண்டுள்ளது. இதனுடைய தற்காலிக நீண்ட விளைவுகள் பெருமளவிற்கு இந்திய சமூக ஒற்றுமை யையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

TCS strike 3501950இல் பிரதமர் நேரு திட்டக்குழுவை தேசிய அளவில் உருவாக்கினார். திட்டக்குழு உருவாக்கி இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை அவர் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றினார். மூன்றவாது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் நேரு மறைந்துவிட்டார். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் ஒரு தொலை நோக்குப் பார்வை இல்லாமல் திட்டங்கள்  தீட்டப்பட்ட தால் அதனுடைய  நீண்ட கால விளைவு வேளாண் துறையில் பெரும் துன்பத்தையும் துயரையும் உருவாக் கியது. இன்றும் அது தொடர்கிறது.

சான்றாக, வேளாண் துறையில்  பசுமைப் புரட்சி  என்ற பெயரில் அதிக அளவிற்கு உரங்களைப்  பயன்படுத்திய தனால் தற்காலிகமாக உணவு உற்பத்தி இலக்குகளை அடைவதில் வெற்றி பெற்றாலும், பசுமைப் புரட்சி நடந்தேறிய பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இன் றைக்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிற அளவிற்கு நிலம் நச்சுத் தன்மையை அடைந்து உற்பத்தித் திறனை இழந்துவிட்டது. மேற்குவங்கம் உத்திரப்பிர தேசம் போன்ற மாநிலங்களில் இந்த நில உரங்கள் உற்பத்திக்காக அதிகம் பயன்படுத்தாத காரணத்தினால் பெருமளவிற்கு நிலம் நச்சுத்தன்மை அடைவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. அரிசி உற்பத்தியில் இன்றும் பல பின்னடைவுகளுக் கிடையில் மேற்குவங்கமும் உத்திர பிரதேச மாநிலமும்தான் அதிக உற்பத்தியைத் தரு கின்றன. அதற்கு அடுத்த நிலையில்தான் ஆந்திரம் பஞ்சாப், தமிழ்நாடு, ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தொழில்துறையில் கடந்த ஆண்டு 2016-2017இல் முதல் நான்கு மாத காலங்களில் தொழில்துறையின் பங்கு மூலதன சேமிப்பு நிரந்தர முதலீட்டு வீதம் ஆகியன சரிந்து வருகிறது. உற்பத்திக் காரணிகளும் வேலை வாய்ப்புகளும் சரிவைச் சந்திக்கும் போது ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பில் பூகம்பத்திற்கு ஒப்பான அதிர்வுகள் ஏற்படும். இத்தகைய சூழலிலும் வேளாண் தொழில் வளர்ச்சி மட்டும்தான் இன்றைக்குக் குறைந்து வருகின்ற நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி யைக் காப்பாற்றி வருகிறது.

சென்ற ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 600 கோடி அளவிற்குக் குறைந்துள்ளது என்பதை, மும்பை யிலிருந்து வெளிரும் அரசியல் பொருளாதார ஏடு (சூன் 3, 2017) என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த வீழ்ச்சியைக் கூடக் கணக்கிடுவதற்கு திட்டக்குழுப் போன்ற ஓர் அமைப்பு இல்லாததும் ஒரு பெரும் குறை யாகச் சுட்டப்படுகிறது. 12ஆம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் இடையில் மோடி திட்டக்குழுவைக் கலைத்து விட்டதால், ஒன்றிய அரசிற்கே இந்தப் பொருளாதார சரிவுகளைப் பற்றித் துல்லியமாகக் கணக்கிட முடிய வில்லை.

இன்றைக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சியைக் காப்பாற்றி வருகிற வேளாண் துறைக்கு மோடி அரசு நன்மைகளைவிடத் தீமைகள் தான் அதிகமாகச் செய்துள்ளது.

சான்றாக இந்தியாவின் வேளாண் உற்பத்தி முன்னிலையில் உள்ள மாநிலங்களில் விவசாயிகள் கடும் கடன் சுமையைச் சந்தித்து வருகின்றனர். மோடியால் உருவாக்கப்பட்ட நிதிஆயோக் அமைப்பு தற்காலிக துயர் துடைப்புத் திட்டத்தையோ நீண்டகால வளர்ச்சித் திட்டத்தையோ அளிக்காமல்; அது ஓர் ஒன்றிய அரசின் அடிமை அமைப்பாக உள்ளது. தமிழ் நாட்டில் இருந்து விவசாயிகள் தில்லியில் பல நாட்கள் போராடியும் மோடி அரசு விவசாயிகளின் நேர்மையான கோரிக்கைகளுக்குச் செவிச் சாய்க்கவில்லை. இன் றைக்கு உத்திர பிரதேசத்தின் முதல்வர் தன்னிச்சை யாக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய் துள்ளார். மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் போராட் டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாஜக ஆளும் இந்த மாநிலம் தற்போது சில வேளாண் கடன் சலுகைத் திட்டங்களை அறிவிக்க முன் வந்துள்ளது. மோடி இந்த மூன்றாண்டு காலத்தில் வேலை வாய்ப்புகளைக் பெருக்குவதற்கு எந்த உருப்படியான திட்டங்களையும் மேற்கொள்ள வில்லை. ஆண்டிற்கு ஒரு கோடி வேலைவாய்ப்பு களைத் தருவேன் என்று தேர்தல் காலத்தில் அறிவித்த பிரதமர் மோடியின் வாக்குறுதி, தூள்தூளாகிப் போனது. தொழில் துறையின் எல்லாப் பிரிவுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக, பணித்துறை யில் (service sector) மென்பொருள் உற்பத்தித் துறையில் பணியாற்றுகிறவர்கள் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் வேலைகளை இழந்து வருகின்றனர்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழந்துள்ளதால் அந்த நாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனுப்பும் மாதத் தொகை பல லட்சம் கோடி அளவிற்குக் குறைந்து வருகிறது. அவர்களும் வேலையிலிருந்து வெளியேறி இந்தியாவின் பல மாநிலங்களுக்குத் திரும்புகின்றனர்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பை- வேலையின் மையைப் பெருக்கும் நிலையை எதிர்கொள்ள ஒரு சரியான வெளிநாட்டு அணுகுமுறைக் கொள்கையைக் கடைப்பிடிக்க மோடி அரசு தவறிவிட்டது.

உயர் மதிப்புப் பணங்கள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பால், வங்கிகளின் செயல்பாடுகள் முடங்கி யுள்ளன.

2014ஆம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் 2 இலட்சத்து 61 ஆயிரத்து 843 கோடியாக இருந்தது. 2017இல் வாராக்கடன் 8 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சூன் 9 2017 “தமிழ் இந்து”வில் வணிகவீதி பகுதியில் எம்.ரமேஷ் என்ற கட்டுரையாளர் 2017ஆம் ஆண்டில் மத்திய அரசு தாக்கல் செய்த நிதி பட்ஜெட் செலவு மதிப்பு ரூ.9.72 லட்சம் கோடியாகும். ஆக வங்கிகளின் வாராக்கடன் தொகையை வசூல் செய்தால் மத்திய அரசின் பட்ஜெட்டையே போட்டுவிட முடியும் என்று சுட்டியுள்ளார். மேலும் வாராக்கடனைப் பெற்று வங்கிக்குச் செலுத்த வேண்டிய குழுமங்களின் பட்டியலையும் பின்வருமாறு வெளியிட்டுள்ளார்:

1. அம்பானியின் ரிலையன்ஸ் ரூ.1.25 லட்சம் கோடி 2. வேதாந்தா குழுமம் ரூ.1.03 லட்சம் கோடி

3. எஸ்ஸார் குழுமம் ரூ.1.01 லட்சம் கோடி

4. அதானி குழுமம் ரூ.96,031 கோடி

5. ஜே.பி. குழுமம் ரூ.75,163 கோடி

6. ஜே.எஸ்.டபிள்யு குழுமம் ரூ.58,171 கோடி

7. ஜி.எம்.ஆர்.குழும் ரூ.47,976 கோடி

8. வான்கோ குழுமம் ரூ.47,102 கோடி

9. வீடியோகான் குழுமம் ரூ.45,405 கோடி

10. ஜி.வி.கே குழுமம் ரூ.33,933 கோடி.

இந்த 10 நிறுவனங்கள் 2016ஆம் ஆண்டுவரை செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.573682 கோடிகளாகும். இதைத்தவிர தனி நபர்கள் வங்கி களிடமிருந்து பெற்ற கடன் விவரங்களை வெளியிடு வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவிக்கிறது. 1934ஆம் சட்டத்தின்படி இவ்வாறு வெளியிடக்கூடாதாம். ஆனால் வங்கிகளிடமிருந்து மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களையும் விவசாயிகள் பெற்ற கடன்களையும் திரும்பப் பெறுவதற்கு சொத்துப் பறிமுதல் நடவடிக் கைகளை வங்கிகள் மேற்கொள்கின்றன. இதிலிருந்து இந்திய வங்கிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? யாரைக் காயப்படுத்துகிறார்கள்? என்று வெட்ட வெளிச்சமாகிறது.  

தனியார் வங்கியின் வாராக்கடன்களையும் சேர்த் தால் 7 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்து வருகிறது. பொதுத்துறை வங்கிகளில்  கடன் பெற்றோர் பெரும் பாலானோர் இந்தியப் பெருமுதலாளிகளே ஆவர். 2016இல் பிப்ரவரித் திங்களில் ஒரு இலட்சம் கோடி வாராக்கடனைத் தள்ளுபடி செய்துவிட்டனர். டிசம்பர் 2016இல் தள்ளுபடி செய்த தொகையின் அளவு ஒரு இலட்சத்து 54 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. சரிகின்ற பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து இன்னும் ஒரு செயல்திட்டத்தையும் உருவாக்காதது தில்லி நடுவண் அரசு ஆட்சியாளர்கள் பொருளாதார உண்மைகளை புள்ளிவிவரங்களை உணராமல் பெரும் முதலாளிகள் பக்கமே சாய்ந்து வருகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்கள் விவசாயிகள்தான் பாதிப்புக்கு உள்ளாயினர் என்பதைப் பல வல்லுநர்கள் தரவுகளுடன் சுட்டியுள்ளனர். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் சிறுதொழில் புரிவோர் சிறுவணிகர்கள் வங்கிகளில் கடன்களைப் பெற முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்தியப் பொருளாதாரத்தில் அமைப்புசாராத் தொழில் கள் வழியாகத்தான் சாதாரண ஏழை எளிய மக்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். இந்தப் பொருளாதார வீழ்ச்சி அமைப்புசாராத் தொழிலாளர் களைப் பெருமளவில் பாதித்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை ஆய்வு செய்து தீர்வுக்கான திட்டங்களைத் தீட்டாமல், சமூகத் தளத்தில் பெரும் குழப்பங்களைச் செய்து வருகிறது ஒன்றிய மோடி அரசு. சான்றாக, உலக அளவில் பல வல்லுநர் குழுக்களும் மருத்துவக் குழுக்களும் இறைச்சி உணவில்தான் அதிகப் புரதம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களும் சிறுபான்மை மக்களும் மாட்டிறைச்சியைக் குறைந்த விலையில் பெற்று தங்கள் உணவின் தேவையை எதிர்கொள்கின்றனர். ஆனால் திடீரென்று ஒன்றிய அரசு ஒரு அவசர அறிவிக்கை வழியாக மாட்டிறைச்சி உண்பதற்குத் தடையை ஏற்படுத்தியுள்ளனர். சரிந்து வருகிற  இந்தியப் பொருளாதாரத்தில் மாட்டிறைச்சி யினுடைய ஏற்றுமதிப் பங்கை உணராமல் இந்த மத வெறியர்கள் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்கள்.

சான்றாக 2016-17 ஆண்டில் மட்டும் இந்தியாவினுடைய மாட்டிறைச்சி ஏற்றுமதி மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி களாகும். உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. கடந்த 2000 ஆயிரம் ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சியில் அதை ஒட்டிய துறையான கால்நடை வளர்ப்பு வளர்ச்சியும் பிரிக்க முடியாத அளவிற்கு இந்தியப் பொருளாதாரத்திற்குப் பால் நெய் வெண்ணெய் போன்ற பொருட்களையும் இத்துறை வழங்குகிறது. ஏற்றுமதியில் இந்தப் பொருட்களும் முதன்மை வகிக்கின்றன. இந்தியாவிற்கு ஓர் அறிவியல் பூர்வமான  கால்நடை கொள்கை தேவை என்பதைப் பல வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேவையற்ற பசுக்களையும் எருமைகளையும் இறைச்சிக்காகப் பயன்படுத்தினால்தான், பால் தரக்கூடிய பசு எருமை களுக்குத் தேவையான தீவனங்களையும் வழங்க முடியும் என்று குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் வடமாநிலங் களில்தான் 52 விழுக்காடு அளவிற்கு உள்ளனர் என்று, 2011 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் இலவச கால்நடை வழங்கும் திட்டத்திற்காக இராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்று பசு மாடுகளை வாங்கிக்கொண்டு திரும்பும் போது தமிழ்நாடு அரசு ஊழியர்களைப் பசு பாதுகாவ லர்கள் என்ற பெயரில் கடுமையாகத் தாக்கி வன்முறை யில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயல்கள் ஊக்கு விக்கப்படுமானால் இந்தியா சிதறுண்டு போகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்நிலையில் புரதம் நிறைந்த  மாட்டிறைச்சி உண்பவர்களைத் துன்புறுத்துவதும் பாஜக ஆளும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் வேடிக்கை பார்ப்பதும் குழந்தைகளின் வளர்ச்சியையே பாதிக்கும்.

மேலும் உணவு உரிமை என்பது தனிமனித உரிமையாகும். உலகில் எந்த நாட்டிலும் உணவு உரிமையைப் பறிக்கின்ற செயல் நடைபெறவில்லை. மேலும் உணவு பண்பாட்டு உரிமையாகவும் போற்றப் படுகிறது. இவ்வாறு கடந்த மூன்றாண்டுகளாக மோடி அரசு பொருளாதாரத் திட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதனால் இதுவரை காணாத அளவிற்கு ஏற்றத்தாழ்வுகள் பெருகி வருவதை அண்மை புள்ளி விவரங்கள் பறைசாற்றுகின்றன. 2010ஆம் ஆண்டில் ஒரு விழுக்காட்டு மக்கள் நாட்டின் 40.3 விழுக்காட்டு  செல்வத்தைச் சுரண்டிச் சேர்த்துள்ளனர். இந்தச் செல்வந்தர்கள் மேலும் தங்களின் வருமானம் சொத்து இவற்றைப் பெருக்கி 2016இல் நாட்டின் 58.4 விழுக் காட்டு  செல்வத்தைக் குவித்துள்ளனர். பணக்காரர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் விரைந்து வளரும் போக்கு கடந்த மூன்றாண்டுகளில் அதிகரித்துள்ளது. 10 விழுக்காட்டு மக்கள், சொத்துக்களை 2014இல் 74 விழுக்காடு வைத்திருந்தனர்.

2016இல் இவர்களின் சொத்து விழுக்காட்டு அளவு 80.7 அளவாக உயர்ந் துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகள் மோடியின் ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மோசமான நிர்வாகத்தின் காரணமாக ஏற்பட்ட பின்னடைவாகும். உலகிலேயே ஏற்றத்தாழ்வுகள் மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது என் பதையும் இக்கூற்று உணர்த்துகிறது. பெரும்பான்மை யான மக்கள்  துன்பத்திலும் துயரத்திலும் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்திலும் சிக்கித் தவிக்கும் சூழலில் இந்தப் பெரும் பிரச்சினைகளின் கவனத்தைத் திருப்புவதற்காக மதக் கருத்துக்களையும் மதவாதி களையும் மதம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை யும் சமூகம் சார்ந்த சச்சரவுகளையும் பாஜகவும் அதனுடைய துணை அமைப்புகளான சங் பரிவாரங் களும் பரப்புகின்றனர். வெற்றி பெறுவதாக நினைத்துக் கொண்டு இந்தியாவையே புதைகுழிக்குத் தள்ளுகிறார் கள் என்ற உண்மை வெளி வரத் தொடங்கியுள்ளது.