ஹோமியோபதி மருத்துவத்தின் செயல்திறன் மற்றும் வளர்ச்சி என்பது சமீப வருடங்களாக உலகளாவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது கண்கூடான உண்மை. ஹோமியோபதி மருத்துவத் துறைக்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் அரசுகள் போதிய அக்கறை செலுத்துவதில்லை. போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்பதும் கண்கூடான உண்மையிலும் உண்மை.

தொட்டியில் வளர்க்கப்படும் போன்சாய் ஆலமரமாக இல்லாமல் இயற்கையின் மடியில் இயல்பான சூழலில் வளர்ந்துள்ள ஆலமரம்தான் ஹோமியோபதி மருத்துவம்.

அலோபதி மருத்துவத்தில், பல நோய்களுக்கு - ஹெச்.ஐ.வி, சிக்குன் குன்யா, சார்ஸ் முதற்கொண்டு சமீபத்திய பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், குரங்குக் காய்ச்சல் வரை - மருந்துகள் இல்லை என கைவிடப்பட்ட போதெல்லாம் நோயின் பெயர்களுக்கு முக்கியத்துவம் தரா மல், தோன்றும் நோய் குறிகளின் அடிப்படையில் ஹோமியோபதி மருத்துவ முறையில் மருந்துகள் தேர்வு செய்து கொடுத்து, ஹோமியோபதி மருத்துவர்கள் வெற்றி வாகைச் சூடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி புதிய புதிய நோய்களை அலோபதி மருத்துவம் அறிமுகப்படுத்தும் போதெல்லாம், இயல்பாகவே மக்கள் ஹோமியோபதி மருத்துவத்தை நாடுவதும், அலோபதி மருத்துவம் அம்பலப்பட்டு நிற்பதும் தற்போது வாடிக்கையாகி விட்டது. டாமிபுளூ மாத்திரைகளின் வியாபார நோக்கத்திற்குத்தான், பன்றிக்காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி குளிர் காய்ந்து கொண்டிருந்தது அலோபதி மருத்துவம், என்பதை மக்கள் பரவலாக பேச துவங்கி விட்டார்கள்.

பெரும்பாலான அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், பல புதிய நோய்களை உருவாக்குகின்றன என்பதைப் பற்றியும் பொது மக்கள் அறிந்து கொண்டு, உலகளாவிய அளவில் மாற்று மருத்துவ முறைகளை நாடிச் செல்கிறார்கள். இவ்வாறு மாற்று மருத்துவ முறைகளை மக்கள் நாடுவதற்கு காரணங்கள், மாற்று மருத்துவர்களின் அணுகுமுறை, நோயறிதலில் எளிய முறை, பின்விளைவுகள் இல்லாமை, அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்தல், அனைத்திற்கும் மேலாக குறைந்த செலவினம் மற்றும் மனநிறைவு என பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதே ஆகும்.

மாற்றுமருத்துவ முறைகளில் ஹோமியோபதி ஒன்று எனக் கூறி, ஓரங்கட்டப்பட்டாலும், உண்மையில் ஹோமியோபதி மருத்துவம் பிரதான மருத்துவ முறையாகும். கடந்த நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் வானளாவிய அளவில், அரண்மனைப் போன்ற மிகப்பெரிய கட்டிடங்களில் ஹோமியோபதி மருத்துவமனைகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தன. அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்வதிலிருந்து, பிரசவத்திற்கான வசதிகள் முதற்கொண்டு, பிரேத பரிசோதனை வரை அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக ஹோமியோபதி மருத்துவமனைகள் திகழ்ந்தன.

காலப் போக்கில், லாபநோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மேற்கத்திய நாடுகள், ஹோமியோபதி மருத்துவம் சிறந்து விளங்கிய போதும் லாபநோக்கில் பயன்தராத, இம்மருத்துவ முறையை புறக்கணிக்கத் துவங்கின. பின்னர் தன்னார்வலர்கள் மட்டுமே இதுநாள் வரையில் ஹோமியோபதி எனும் ஜோதியை அணையாமல் காத்து வருகின்றனர்.

இந்தியாவில் கூட தன்னார்வலர்களின் தொடர்ந்த முயற்சியால் மட்டுமே, மத்திய-மாநில அரசுகள் ஹோமியோபதி மருத்துவ முறையை அங்கீகரிக்கவும், அதற்கான சட்டம் இயற்றவும், கவுன்சில்கள் அமைக்கவும், கல்லூரிகள் துவங்கவும் வழிவகை காணப்பட்டது. இதன் விளைவாக தற்போது நூற்றுக்கும் மேலான ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஹோமியோபதி மருத்துவத்தை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய - நவீன - மிக நவீன என பல்வேறு முகமூடிகளை அணிந்து வந்தாலும், அலோபதியின் ஆபத்தான பக்கங்களை மக்கள் மிக எளிதில் அடையாளம் கண்டு புறக்கணிக்கத் துவங்கி விட்டார்கள். அக்காலத்திலும், இக்காலத்திலும், எக்காலத்திலும் முகமூடியே இல்லாமல் கம்பீரமாக வளர்ந்து வரும் ஹோமியோபதியின் மீது சேற்றை வாரி இறைத்துத்தான் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிற அவல நிலைக்கு அலோபதியின் காப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், லேன்செட் எனும் பத்திரிக்கை இம்முயற்சியில் ஈடுபட்டு மூக்குடைபட்டது யாவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து ஹோமியோபதியின் வளர்ச்சி அலோபதியின் வீழ்ச்சி என அச்சம் கொண்டவர்கள், இங்கிலாந்தில், இளம் விஞ்ஞான வலைப்பின்னலின் குரல் (Voice of Young Science Network) என்பதின் பெயரால் உலக சுகாதார நிறுவனத்திற்கு சில கோரிக்கைகள் 01-06-2009 அன்று விடுத்துள்ளனர்.

அவையாவன....

வளரும் நாடுகளில் ஹோமியோபதி மருத்துவம் பெருமளவில் வளர்ந்து வருவதால் அச்சம் ஏற்படுகிறது. அந்த நாடுகளின் மக்கள் இம்மருத்துவ முறையால் பாதிக்கப் படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு உலக சுகாதார நிறுவனம் ஹோமியோபதி மருத்துவ முறையை கண்டித்து பகிரங்கமாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.

ஹெச். ஐ. வி, டிபி, மலேரியா, இன்புளூயென்சா மற்றும் குழந்தைகளின் வயிற்றுப்போக்கு ஆகியவற்றிற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சையளிக்க தடை விதிக்க வேண்டும். -என்பதாகும்.

இளம் விஞ்ஞான வலைப்பின்னலின் குரல் - கோரிக்கைக்கு இணங்க உலக சுகாதார நிறுவனம் (21-08-2009) உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது மாபெரும் உலக மருத்துவ முறையான ஹோமியோபதியை தவறான மருத்துவம் என்று அறிவிக்க, ஏதோ ஒரு சிலரைக் கொண்ட முட்டாள்கள் அமைப்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க 80 நாட்களுக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய அவசியத்தை பற்றி, உலக சுகாதார நிறுவனத்திடம் நேர்மையிருந்தால், உலகில் ஹோமியோபதியை நேசிக்கும் கோடிக் கணக்கான மக்களிடம் விளக்கம் தர வேண்டும்.

உண்மை என்னவென்றால், இது நாள் வரை உலக சுகாதார நிறுவனம் முறைப்படியான கூட்டத்தில், ஹோமியோபதியின் மீதான தனது அதிகார பூர்வமான கருத்துக்களை அறிவிக்கவில்லை. உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள சில உட்பிரிவு பொறுப்பாளர்களின் தான்தோன்றித்தனமான கருத்துக்களைத்தான் கோமாளிகளின் கூட்டம் பரப்பிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் அவர்களைக் கண்டிக்காமல் மௌனம் சாதித்துக் கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

51 வகையான நோய்களுக்கு அலோபதியில் மருந்து இல்லை என வரையறுத்து, அவற்றை குணப்படுத்துவோம் என அலோபதி மருத்துவர்கள் கூறக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது நடைமுறையில் எந்த அளவிற்கு பின்பற்றப் படுகிறது என்பதையெல்லாம் மூடி மறைத்து விட்டு, ஹோமியோபதியின் வளர்ச்சிக்குத் தடை போடும் உலக சுகாதார நிறுவனத்தின் வஞ்சகத் தன்மையை வன்மையாக கண்டிக்கிறோம்.

உலக சுகாதார நிறுவனத்தை கண்டித்து, டாக்டர்.ஜார்ஜ் வித்தௌல்காஸ் முதற் கொண்டு பல ஹோமியோபதியர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திசைகாட்டிக் கருவியின் காந்த முள் நேற்று தெற்கு திசையை நோக்கி இருந்தது. இன்றைக்கு மேற்கு திசையை நோக்கி காட்டுகிறது எனக் கூறினால் தெளிவான சிந்தனை உள்ள மனிதர்கள் யாராவது நம்புவார்களா? எக்காலத்திலும் காந்த முள் வடக்கு திசையைத்தான் சுட்டிக்காட்டும் என்பது விஞ்ஞான ரீதியான உண்மை.

அது போல, பெயரே இல்லாத அநாமதேய மருத்துவத்திற்கு, அலோபதி என்ற அழகான பெயர் சூட்டிய மாமேதை டாக்டர்.ஹானெமன் மிகத்தெளிவாக, திட்டவட்டமாக ஹோமியோபதி மருத்துவ முறையை பற்றிய விஞ்ஞான பூர்வமான தத்துவங்களை தனது ஆர்கனான் நூலில் விளக்கியிருக்கிறார்.

ஹோமியோபதியை பற்றி தவறான கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் நவீன கோமாளிகள், ஆர்கனான் பற்றி எதுவும் பேசாமல், தாங்கள் குருடர்கள் என்பதை மறைத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகத்திற்கு மேடையமைத்துக் கொடுத்து, ஏற்கெனவே தரம் தாழ்ந்து விட்ட உலக சுகாதார நிறுவனம் தன்னை மேலும் தாழ்த்திக் கொண்டுள்ளது.

இச்சுழலில், ஆஸ்திரேலியாவில், நியு சவுத் வேல்ஸ் சுப்ரிம் கோர்ட், ஹோமியோ பதி மருத்துவ முறையை கொச்சைப் படுத்தும் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் தாமஸ் சாம் ஹோமியோபதி விரிவுரையாளராக ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். அவரது நான்கு மாதக் குழந்தை குளோரியாவின் தோல் நோய்க்கு ஹோமியோபதியில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். சிகிச்சை பலன் தராத நிலையில் ஓன்பதாவது மாதத்தில் குழந்தை இறந்து விட்டது.

குழந்தை குளோரியாவிற்கு அலோபதி முறையில் ஏன் சிகிச்சை அளிக்கவில்லை என்பதற்காக, தந்தை தாமசுக்கு ஆறு ஆண்டுகளும், தாய் மஞ்சுவிற்கு நான்கு ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

தற்போது, மனித உரிமைகள் இலங்கைத் தமிழர்களிலிருந்து உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் அப்பட்டமாக, அராஜகமாக, கண்ணெதிரே பல்வேறு முறைகளில் மீறப்படும் நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சிகளும் பிற ஊடகங்களும் வண்டி வண்டியாக - லாரி லாரியாக அல்ல.... கப்பல் கப்பலாக கொண்டு வந்து நமது வீட்டு வாசலில் தினம் தினமல்ல..... வினாடிக்கு வினாடி கொட்டிக் கொண்டிருக்கின்றன.

இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க திராணியற்ற ஐ.நா சபைகள், உலக சுகாதார நிறுவனங்கள், நீதி மன்றங்கள் தங்களின் அதிகாரத்தை ஹோமியோபதியின் மீது துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கின்றன.

முரண்பாடான தீர்ப்பை வழங்கியுள்ள நீதிமன்றம், குழந்தை குளோரியாவிற்கு அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சையளித்தும் இறந்து விட்டிருந்தால், சிகிச்சையளித்த அலோபதி மருத்துவருக்கும் சிறைத் தண்டனை வழங்குமா...? என்பதே கேள்வி!

ஒரு ஒன்பது மாதக் குழந்தை உயிரின் மீது இவ்வளவு அக்கறை செலுத்தும் ஆஸ்திரேலிய நீதிமன்றம், அலோபதி மருத்துவமனைகளில் தினமும் ஆயிரக்கணக்கில், தவறான மற்றும் தேவையற்ற சிகிச்சைகளால் உடலளவிலும், மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுக் கொண்டும், உயிரிழந்து கொண்டும் இருப்பவர்களின் மீதும் அக்கறை செலுத்துமா?

அலோபதியில் தோல் நோய்கள் உள்ளமுக்கப் படுவதால், பின்னர் ஆஸ்துமா முதற் கொண்டு பல்வேறு பாதிப்புகள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, அலோபதியில் நன்கு பயிற்சி பெற்ற தோல் நோய் சிறப்பு மருத்துவர்களில் பலர், பல தோல் நோய்களுக்கு ஹோமியோபதியில் குணப்படுத்த முடியும் என பரிந்துரைக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், ஒரு குழந்தையின் இறப்பு கூட ஹோமியோபதியில் நிகழக்கூடாது, நிகழ்ந்தால் அலோபதியில்தான் இருக்க வேண்டுமென்பது உண்மையில் தீர்ப்பு அல்ல. மாறாக ஹோமியோபதியின் மீதான அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி! இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சிறைத் தண்டனை ஹோமியோபதி மருத்துவர் தாமஸ் சாம் தம்பதியினருக்கு வழங்கப்பட்டது என்ற போதிலும், உண்மையில் ஹோமியோபதி மருத்துவத்திற்குத்தான் என்பதை ஹோமியோபதியர்கள் உணர வேண்டும். சிறைத் தண்டனை பெற்ற போதும், டாக்டர். தாமஸ் சாம் கூறியது என்னவென்றால்,

“அலோபதி மருத்துவம், மேலும் இழிவான நிலையில் குழந்தையின் வாழ்நாளை நீடிக்கச் செய்யலாம். ஆனால், அவளை முழுமையாக குணப்படுத்தாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்”

“தோல் நோயை குணப்படுத்துவதில் ஹோமியோபதி மருத்துவம் எந்த விதத்திலும் அலோபதிக்கு குறைந்தது அல்ல” என்பதே ஆகும்.

ஊரார் வீட்டுக் குழந்தையை ஹோமியோபதியில் பரிசோதிக்காமல் தனது குழந்தைக்கு முழு நம்பிக்கையுடன் சிகிச்சை அளித்த மருத்துவர். தாமஸ் சாமுக்கு தலை வணங்குவோம். தூங்குபவன் தொடையில் கயிறு திரிப்பதாகக் கூறுவார்கள்.....! மாறாக உழவு செய்து, நடவு நட்டு, அறுவடையும் செய்யுமளவிற்கு தூங்கிக் கொண்டிருப்பவர்கள் உண்டென்றால் அவர்கள் ஹோமியோபதியர்களாகத்தான் இருக்க முடியும்.

இல்லையெனில் அவர்களுக்கு இவ்வளவு துணிச்சல் வருமா ?

இனியாவது விழித்தெழுவோம்!

ஹோமியோபதியின் மீதான தாக்குதலை முறியடிப்போம்!!

ஹோமியோபதி மருத்துவர்களை காப்போம் !!!

ஹோமியோபதி மருத்துவத்தை வளர்ப்போம் !!!!