திருச்சி புத்தூரில் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும், அந்தப் பகுதி மக்களுக்குக் கல்வி வாய்ப்புகளைத் தருவதற்காக உருவாக்கப்பட்டது பெரியார் கல்வி நிலையம்.

இத்தகைய சீர்மிகு கல்வி நிறுவனமான பெரியார் கல்வி வளாகத்தின் சுற்றுச் சுவர் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையினரால் இடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அதிகாரிகள் கொடுத்துள்ள கடிதம் முறையற்றது.

தமிழகம் பெரியாரின் மண். தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாத நிலையில் எப்படியேனும், பெரியாருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

பாஜக, எச்.ராஜாவின் நாவடக்கமற்ற பேச்சுகள் மூலம் தந்தை பெரியாருக்கு எதிரான நச்சு விதைகளை விதைக்க முயன்றும் முடியவில்லை.

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிக், கலவரத்தை உண்டு பண்ன முயன்றதும் உண்டு.

பாஜகவுக்கு எதிர்கொள்கை உடையவர் தந்தை பெரியார்.

ஆனால் அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்டிருக்கும் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ்க்கு தெரியாதா- அண்ணா உருவான இடமே தந்தை பெரியார் என்று.

இடிக்கப்பட்ட கல்வி வளாகச் சுவரை அரசே கட்டிக் கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில், இப்பொழுது பெரியாரால் நிறுவப்பட்ட, மக்களுக்குப் பயன் தரும் கல்வி நிறுவன சுற்றுச்சுவரை, பாஜக வின் எடுபிடி அதிமுக அரசை கொண்டு இடிக்கச்செய்தது கண்டிக்கத்தக்கது.