தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
மிளகு - 25 கிராம்
சோம்பு - அரைத்தேக்கரண்டி
கிராம்பு - 2
எண்ணெய் - 100 மில்லி
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - 10 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

மிளகு, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பூண்டு இவற்றை நன்றாக மைபோல் அரைத்து கொள்ள வேண்டும். சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் வதக்க தேவையான அளவு எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும்படி நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் கழுவிய சிக்கன் துண்டங்களை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு சிக்கன் துண்டங்கள் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக விட வேண்டும். சிக்கன் நன்கு வெந்தவுடன் தண்ணீர் இல்லாத அளவிற்கு குறைந்த அனலில் 5 நிமிடம் வைத்து இறக்கினால் பெப்பர் சிக்கன் ரெடி.


Pin It