எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெரியார் அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்கள்.

- சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் 25.12.2010,சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான்.

எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராக 1977 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தந்தை பெரியார் அவர்களோ 1973 ஆம் ஆண்டு இறுதியில் இறந்து போய் விட்டார். தான் முதல்வர் ஆவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய்விட்ட பெரியாரைச் சக்கர நாற்காலியில் வைத்து எம்.ஜி.ஆர் எப்படி மேடைக்கு அழைத்து வந்திருக்க முடியும் என்பது நமக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.