பொள்ளாச்சியில் 25.09.2011 அன்று இளம் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும்விதமாக புன்னகை - கவிதைத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மௌனம் இரமேசு அவர்களின் எதிரில் இருக்கை காலியாக இல்லை கவிதை நூலினை கவிஞர் அவைநாயகனும், இரா.பூபாலன் அவர்களின் பொம்மைகளின் மொழி கவிதை நூலினை க.அம்சப்ரியாவும் அறிமுகம் செய்து வைத்தனர். கல்லூரி மாணவர்களின் கவியாளுமையைத் தூண்டும்விதமாக கவியரங்கம் நடைபெற்றது. மேலும் கல்லூரிப் படைப்பாளிகளுக்கென கவிதைப் போட்டியும் நிகழ்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கவிதைகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் எழுத்தாளர் சு.வேணுகோபாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இளங்கவிஞர்களுக்கு பொருத்தமான கவிதைகளை எடுத்துக்கூறி சிறந்த உரையை வழங்கினார். கவிஞர் சூர்யநிலா வாழ்த்துரை வழங்கினார்.

பரிசுபெற்ற கவிஞர்களுக்கு திரைப்பட இயக்குநர் பொள்ளாச்சி சசி அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். புன்னகை ஆசிரியர் செ.ரமேஷ்குமார் வரவேற்புரை வழங்க, சோ.கிருஷ்ணகுமார் நன்றியுரை கூறினார். கவிஞர் சோழநிலா நிகழ்வினை ஒருங்கிணைத்து, கவியரங்கினை நெறிப்படுத்தினார்.

கல்லூரி மாணவர்களில் பரிசு பெற்றவர்கள்.

முதல் பரிசு  : வீ. முருகேஸ்வரி,
    ஸ்ரீராமு கலை அறிவியல் கல்லூரி,
    நா.மூ.சுங்கம், பொள்ளாச்சி.
இரண்டாம் பரிசு  : பா. அருண்குமார்,
    ந.க.ம. கல்லூரி. பொள்ளாச்சி.
மூன்றாம் பரிசு  : ச. மதிவதனி,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி.
    திப்பம்பட்டி, பொள்ளாச்சி.
ஆறுதல் பரிசு  : சு.பிரகாஷ்,
    வித்யாசாகர் கல்லூரி,