வெள்ளிநரை கம்பிகள்
மதிப்பில்லை - எனினும்
இறுதியில் ஒற்றை ரூபாய்!
*
வயது நிறைந்த முத்தொன்று
வாசலையே பார்த்திருக்கிறது
யமனின் வருகைக்காக!
*
முதுமைக் குழந்தைகள்
புதிதாய் பிறப்பெடுத்தனர்
முதியோர் இல்லத்தில்!
*
பேருந்து நிலையத்தில்
திவ்ய தரிசனம் -
காற்று அடித்ததால்!
*
கருவிலே சுமந்தவளை
காக்கையாய் மாற்றுகிறான் -
முதிய வயதில்!
*
பிறரையும் வாழ வையுங்கள்
இறக்கும் போதாவது-
கண்ணீருடன் தீக்குச்சி !