பயம் சிலரை 

பூவிலேயே பற்றிக்கொள்கிறது. 

பூ பிஞ்சாகும்பொழுது 

பயம் புழுவாகிறது. 

 

பிஞ்சு காயாகும்பொழுது 

பயம் வண்டாகிறது 

காய் வளரும்பொழுது 

பய வண்டு 

சிறிது சிறிதாக 

கொஞ்சம் கொஞ்சமாக 

காயின் உள்சதையைக் 

குடைந்து தின்ன ஆரம்பிக்கிறது. 

காய் பழமாகும் 

சமயத்திலெல்லாம் பயவண்டு 

எதையும் 

விட்டுவைப்பதில்லை 

வெறும் மேற்தோலைத் தவிர 

உட்பகுதியை வெறும் 

ஓடாக்கி வைத்திருக்கிறது...