நமது கிராமம்

சிறிய கல்தெய்வத்தால் விரிந்தது

அறுவடையிலிருந்து ஒரு நெல்

தென்னையிலிருநது ஒரு நெற்று

வாழையிலிருநது ஒரு சுளை

வரப்புகளில

வீடடுப்பறவையின் இரத்தம்

குடிகளுக்கு மேளத்துடன ஒரு வெறியாட்டு

இரவுக் கொடைநிலத்தில்

திறந்த வெளிப் புணர்ச்சி

மழைபெய்கிறது மாரி மனம் குளிர்கிறாள்

கூலியாள் விதையை நனைக்கிறான்.

மலர் வார்த்தைகள்

எனது விடியல்

மரத்தைப் போல பனி சுமந்து

மலர்களைக் காட்டி

உற்சாகமாய் இருப்பதை

உஙகளுக்ச் சொல்கிறேன்

எனது சாலைகள தூய்மையானதாய்

மனிதர்கள் இடதுபுறம் நடந்தபடி

கட்டிடங்கள் பணியில் இருப்பதாய்

ஒரு நாளுடன் சேர்ந்து

உங்களுடன் நம்புகிறேன்

தவறவிட்ட அபாயங்கள் சில

ஞாபகத்தில் இருக்கும் அச்சத்திற்கு

துயரத்துடன் எப்போதும் மௌனிக்கிறோம்

எவரேனும் வந்து போகும்

வாழ்க்கையோடு

வார்த்தைகளை கொள்ளும் உறவிற்கு

நான் பல ஆயிரம் மைல்களை கடந்துள்ளேன்

பழம்பொருள் ஒன்றை விற்றுள்ளேன்

பல்வலி காலத்தில் நீங்களும் வந்திருந்தீர்கள்

ஒரு முறை பலி வாங்கியும்

சில முறை முத்தமிட்டும்

நான் இப்படி இருப்பதாக

அம்மரத்திடம் என்ன யோசனை இருக்கமுடியும்

யாரையேனும் அதிகபட்சமாக

விமர்சித்ததின் வலியில்தான்

அம்மலர்கள் மலர்ந்துள்ளன

இதை நீங்கள் நம்புவது என் ஞாபகத்தின்

அச்சத்தில் இருக்கிறது.

 

- பா.தேவேந்திர பூபதி