எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சி, மாற்றம் தானாய் நிகழ்வதில்லை மாறாக நிகழ்த்தப்படுவது விவசாயம், தொழில் அறிவியல், போன்ற அடிப்படை துறை சார்ந்து மானுடச் சமூகம் உற்பத்தி மற்றும் மாற்றத்தில் பங்கு கொள்ள அவர்கள் எழுச்சியுற மனத்தகவு பெற கலை, இலக்கியம், மொழி உதவுகின்றன

இத்துறை சார்ந்த மேம்பாடுகளுக்கும், தத்துவம், இயகம்சார் படைப்புகளும் பார்வைகளும் உதவுகின்றன இவ்வகையில் தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கு இயகத்தின் பங்களிப்பு குறித்த இரண்டு நாகள் தேசியக் கருத்தரங்கம் மதுரையில் 2010 ஜனவரி 28,29 தேதிகளில் நடைபெற்றது

சாகித்ய அகாதமி, தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைகழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து கருத்தரங்கை சாத்தியமாக்கியது

காமராசர் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்கள் உகள்ளிட்டு மாநிலம் முழுவதுமிருந்து நூறுபேர் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்

ஆறு அமர்வுகளில் அமர்வுத் தலைவர்கள் உகள்ளிட்டு பத்தொன்பது பேர் கருத்தாளர்களாகப் பங்கேற்றனர்

தொடக்க நிகழ்வு

தொடக்க விழாவில் சாகித்ய அகாதமி தென்மண்டலச் செயலாளர் எஸ் குணசேகரன் இடதுசாரி, மார்க்சீயம் சார்ந்த இயகத்தின் இலக்கியப் பங்களிப்புகளைத்தான் நாம் முற்போக்கு இயகத்தின் பங்களிப்பாக கருத வேண்டும் என கருத்தரங்கின் மையப்புகள்ளியைத் தொட்டு வரவேற்றுப் பேசினார்

தேசிய பன்னாட்டு பரிமாற்றத்திற்கு மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் தமிழ்துறை உதவுவது போல, பல்கலைகழகத்திற்குகள்ளும் தமிழை ஆட்சி மொழியாக விரிவுபடுத்த உதவ வேண்டும் என்றும், ஆங்கிலத்தின் ஆய்வு உரைகளை தமிழில் கொண்டு வர தமது பல்கலை முயலும் என்றும் தலைமையேற்றுப் பேசினார் துணைவேந்தர் இரா கற்பககுமரவேல்

தமுஎகச பொதுச்செயலாளர் ச தமிழ்ச்செல்வன், நாம் வாழும் காலத்தின் முற்போக்கு என்பது மார்க்சீயம் சார் படைப்பும் பார்வையும் ஆகும் என்றும் இந்த சந்திப்பு புகள்ளியில் நின்று பேசுவதும், விமர்சிப்பதும் கருத்தரங்கிற்கு பலம் அளிக்கும் என்றும் அழுத்தமாக மையப்புகள்ளியை தொட்டுக் காட்டினார்

ஒவ்வொரு காலகட்டத்து படைப்பாளிக்கும் ஒரு தத்துவ பின்புலம் இருந்தது கம்பன், இளங்கோ போன்றோருக்கும் தத்துவப் பார்வை இருந்தது நம் காலத்தில் தாகூர், பாரதி போன்றோரும் தத்துவப்பார்வை கொண்டவர்கள்தான் வானம்பாடி காலத்தில் அழகியலா? தத்துவமா? என்று முரண்பாடு வந்த போது, நாங்கள் தத்துவத்தின் பகம் இருந்தோம் தத்துவமும் அழகியலும் ஒரு படைப்புக்கும் படைப்பாளிக்கும் தேவை என சாகித்ய அகாதமி தமிழ் ஆலோசனைக்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிற்பி தொடக உரையில் குறிப்பிட்டார்

ஆண்டுகள் 50 | அமர்வுகள் 6 | ஆய்வுகள் 12 கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் பொன்னீலன், நமது பார்வைக்கும் படைப்புக்கும் சாட்சியாக பஞ்சும் பசியும், மலரும் சருகும், தாகம் விளங்கிக்கொண்டிருக்கின்றன நம் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் நமது படைப்புகள் மோசம் என்பார்கள் என்றும் பெருமன்றமும் தமுஎகசவும் பிராண்ட்தான் வேறு ஆனால் ஃபிராடக்ட் ஒன்றுதான் என சிறப்புரையில் குறிப்பிட்டார்

கருத்தரங்க அமர்வுகள்

இலக்கிய இதழ்களின் பங்களிப்பு - ச மாடசாமி பெண்ணியப் படைப்புகள் - சு இரவிக்குமார், சிவகதைகள் - மனிமாறன், நாவல்கள் - சு வெங்கடேசன், தமிழ் அடையாள உருவாகம் - ந முத்துமோகன், நாட்டுப்புற இலக்கியம் - டி தங்கவேல், சங்க இலக்கியம்- வீ அரசு, தத்துவப்பின்புலம் - மதுக்கூர் ராமலிங்கம் தலித்இலக்கியம் - எஸ் லட்சுமணப் பெருமாகள், நவீன கவிதைகள் - ஜீவி, திறனாய்வு - பிரளயன், திறனாய்வாளர்கள் - பா ஆனந்தகுமார் என கருத்தாளார்கள் தமது கருத்துகளை முன்வைத்து உரையாற்றினர்

பேராசிரியர் ச மாடசாமி செம்மலர் படைப்பாளிகளான மேலாண்மை பொன்னுச்சாமி, தேனி சீருடையான், பொகள்ளாச்சி அம்பலம் போன்றோர்களின் படைப்புகளைத் தொட்டு காட்டி இவர்களுக்குக் கதைகள் வராது, பிரச்சார நெடியோடுதான் எழுதுவார்கள் என்ற மாற்று முகாம் சார்ந்தோரின் கருத்துகளை மறுத்து இந்தப் படைப்பாளிகள்தான் எளிய மனிதர்களை கதைகளில் உலவவிட்டார்கள் என உணர்ச்சி ததும்பப் பேசினார்.

Femino writtings  என்கிற பெண்கள் பற்றிய எழுத்து, Femi­nist writtings என்கிற கலகக்குரல் சார்ந்த பெண் எழுத்து, Female writtings என்கிற சுயம், யதார்த்தம் குறித்த பெண் எழுத்துகள் பற்றியும் இதன் ஊடாக பயணித்த இரா மீனாட்சி, சல்மா, குட்டிரேவதி, அ வெண்ணிலா, வர்த்தினி, பாலபாரதி, பாரதிகிருஷ்ணன் போன்றவர்களின் பங்களிப்பை தொட்டு காட்டினார் சு இரவிக்குமார் என்கிற ஸ்ரீரசா

கு அழகிரிசாமி, கந்தர்வன், மேலாண்மை, தமிழ்ச்செல்வன், ஷாஜகான், மாதவராஜ், காமராஜ், சீருடையான், அல்லி உதயன், ஆதவன் தீட்சண்யா உதயசங்கர், லட்சுமணப் பெருமாகள் போன்றோர்களின் முற்போக்கு சிறுகதைகள் குறித்து தெளிவாகப் பேசினார் மணிமாறன்.

சு வெங்கடேசன் நாவல்கள் பற்றி பேசும்பொழுது, சமூகக் கொந்தளிப்பை, எளிய மனிதர்களை நாவலில் பதிவு செய்தவர்கள் முற்போக்காளர்கள் என்றும் தத்துவத்தின் கலை வடிவம், வாழ்வின் பரந்த பகுதிகளை உணர்வுபூர்வமாக பதிவு செய்த தற்காலத்திய ‘சலவான்’ பாண்டியக் கண்ணன், ‘நிறங்களின் உலகம்’ தேனி சீருடையான் தொட்டு பொன்னீலன், டி செல்வராஜ்,

கு சின்னப்பபாரதி, தொமுசி ரகுநாதன் போன்றோர்களின் எழுத்துகள் பற்றி வெடிப்புற பதிவு செய்தார்.

தமிழ் அடையாள உருவாகத்திற்கு 150 ஆண்டு வரலாறு உண்டு என்றும் தமிழ் அடையாளத்தை உருவாக்கியதில் வகள்ளலாருக்கு முக்கியப் பங்களிப்பு உண்டு என்றும் அயோத்திதாசப் பண்டிதரின் தலித்அடையாள அரசியல் பற்றியும் பேசி மேட்டுக்குடிவர்க தமிழ் அடையாளத்தால் ஈழப்போர் தோற்றது என்றும் எளியமகள் பகம் நின்று சமூக உகள்முரண்பாடுகளை வளர்த்து மோதவிட்டு முன்னேற வேண்டுமென ந முத்துமோகன் குறிப்பிட்டார்.

சிலப்பதிகாரம் போன்ற எளிய மகளின் நாட்டார் பாடல்கள் பண்டிதர்களால் காவியமாக புனையப்பட்டது என்றும் முற்போக்கு பார்வைக்குகள் கொஞ்சம் பிற்போக்கு இருக்கும் என்றும் பிற்போக்கு பார்வைக்குகள் சிறிது முற்போக்கும் இருந்து மோதும் என ‘செம்மலர்’ ஆசிரியர் எஸ்ஏ பெருமாகள் பேசினார்

கோட்பாட்டோடு நேரடியாக சாராத பொதுவான முற்போக்காளர்களின் பங்களிப்பையும் அங்கீகரிக வேண்டும் என்று தத்தவப்பின்புலம் பற்றி பேசும் பொழுது மதுக்கூர் ராமலிங்கம் குறிப்பிட்டார்.

டிகேசி மகாராஜன், பாஸ்கர தொண்டைமான் போன்றோரின் அரட்டை அரங்க திறனாய்வுக்கு அப்பாற்பட்டு சமூக நோக்கில் திறனாய்வை முன்னெடுத்த கலாநிதிகைலாசபதி, கலாநிதிசிவத்தம்பி, தொமுசி ரகுநாதன், திக சிவசங்கரன், ச செந்தில்நாதன், அருணன் போன்ற முற்போக்குத் திறனாய்வாளர்கள் பற்றி பிரளயன் பட்டியலிட்டுப் பேசினார்

நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் டிகே ரங்கராஜன் வாழ்த்திப் பேசும் பொழுது வெற்றிடங்களில் முற்போக்கு எழுத்துகள் உருவாகாது என்றும் இடதுசாரிகளின் போராட்டங்கள், இதன் வீச்சுகளை உகள்வாங்குவதும் இயன்ற அளவில் போராட்டங்களில் பங்கேற்று புரிந்து கொள்கிற அனுபவமும் முற்போக்கு இலக்கிய எழுத்து உருவாக உதவும் என்றும் சீர்திருத்தவாத இயகம் அதன் வீச்சுக்கு ஒரு எல்லை உண்டு என்றும் கருத்தரங்கம் செல்ல வேண்டிய பாதையை தெளிவுப்படுத்தினார்.

தடம்பதித்த முற்போக்கு திறனாய்வாளர்கள் பற்றி முனைவர் ஆனந்தகுமார் பேசும் பொழுது பாரதியை மறுத்த பிஸ்ரீயை எதிர்த்து ஜீவா நடத்திய எழுத்துப் போராட்டம் தொமுசி ரகுநாதனின் இலக்கிய விமர்சனம் ஆய்வு சார்ந்து துல்லியமானத் தரவுகளோடு இருக்கும் என்றும் குறிப்பிட்டார்

முற்போக்கு என்பதன் ஆதாரமே மார்க்சீய அணுகுமுறைதான் இதற்கு வெளியே நின்று பேசுவது சீர்த்திருத்தவாதம் பாட்டும் தொகையும் என்றிருந்ததற்கு சங்க இலக்கியங்கள் என பெயரிட்டதே பேராசிரியர் வையாபுரிபிகள்ளை தொபொமீ, முவ, மபா குருசாமி

ந சஞ்சீவி போன்றோர் மபொசி மரபு சார்ந்து தேசிய, தமிழ்த்தேசிய அணுகுமுறையோடு சங்க இலக்கியங்களைப் பார்த்தனர் இதற்கு அப்பாற்பட்டு இடதுசாரி, மார்க்சீய பார்வை சார்ந்து கிரேக வாய்மொழி மரபைப் புரிந்து, புறநானுற்றை அணுகியவர் கலாநிதி கைலாசபதி இவருக்கு அடுத்து கலாநிதிசிவத்தம்பி என இரண்டே பேர்தான் அமரர் ஜீவா தனது இறுதிகாலத்தில் தமிழ் அமுதம் என்ற பெயரில் வெகுஜன அணுகுமுறையோடு சங்க இலக்கியங்களை அணுகினார் கோ கேசவன், நா வானமாமலை,

நா சுப்ரமணியம், கே முத்தையா, அருணன் போன்றோர் கைலாசபதி, சிவத்தம்பி மரபை தமிழகத்தில் தொடர்ந்தவர்கள் என சங்க இலக்கியமும் முற்போக்காளர்களும் என்ற தலைப்பில் பேராசிரியர் அரசு உரையாற்றினார்

சிகரம் சசெந்தில்நாதன், கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் ஏ ஆதித்தன், திசு நடராசன், மு மணிவேல், டி தங்கவேல், ம திருமலை, இ முத்தையா, எஸ் லட்சுமணப் பெருமாகள்,.

யூ பன்னீர்செல்வன் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று பேசினர் நிறைவு விழா மதுரை காமராசர் பல்கலைகழக தமிழியற்புலத்துறை தலைவரும், சாகித்ய அகாதமி பொதுக்குழு உறுப்பினருமான இரா மோகன் இரண்டு நாகள் கருத்தரங்கை ஒருங்கிணைத்தும், நிறைவு நிகழ்விற்கு தோழமையோடும் தலைமை தாங்க அடுத்துப் பேசிய முனைவர் தமிழண்ணல் பல்கலைகழகமும், மகள் சங்கமிக்கும் இடமாக இந்தக் கருத்தரங்கைப் பார்க்கிறேன் என்றும் திராவிட இயகப் பற்றாளாகிய நான் உங்கள் எளிமையால், நேர்மையால் உங்களை நோக்கி வருகிறேன் என்றும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை பாராட்டினார்.


நிறைவுரை செய்த தமுஎகச மாநிலத்தலைவர் அருணன் திரைப்படத்துறையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முற்போக்கு இயகம் சார்பான பங்களிப்பை உதாரணங்களோடு சொல்லிப் பாராட்டினார் பொருளாதார பிரச்சனை மட்டுமின்றி சமூகம் விடுக்கும் பல வகைப் பிர்ச்சனைகளையும் உகள்வாங்கி முற்போக்கு இயகப் படைப்பாளிகள் படைக்கிறார்கள் எனவும் இவர்களின் பங்களிப்பு மகத்தானது, பெருமைப்படதகது என்றார்

சாகித்ய அகாதமி இடதுசாரிகளின் இலக்கியப் பங்களிப்பை உணர்ந்து இந்தச் தேசியகருத்தங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிற இந்த சூழலில் சாகித்ய அகாதமியை முற்போக்காளர்கள் பிடித்து விட்டார்களென சிலர் புலம்புகிறார்கள் எனவும் பனிரென்டு கருத்தாளர்களும் தங்கள் உரையை எழுதித் தந்து அவைகள் நூலாக வெளிவரும் பொழுதுதான் கருத்தரங்கின் உண்மையான வெற்றி என பேசி கருத்தரங்கை ஏற்பாடு செய்த அமைப்புகள், பங்கேற்பாளர்கள், கருத்தாளர்களுக்கு நன்றி சொல்லி நிறைவு செய்தார்.

-இரா.தெ.முத்து