(1925-1995)

-2008  

kundrakkudi_adikalarஇவரின் இயற்பெயர் அரங்கநாதன். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவாளப்புத்னூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறு வயதில் ரா.பி. சேதுப்பிள்ளை வீட்டின் ஜன்னல் அருகில் நின்று தினம் ஒரு குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது இவரின் வழக்கமாக இருந்தது. பள்ளி இறுதி வகுப்புவரை படித்த பிறகு தருமபுரி ஆதினத்தில் 1944ஆம் ஆண்டு கணக்கர் வேலையில் சேர்ந்தார். இதன் பிறகு அங்கேயே தமிழ் கற்றார். இத்திருமடத்தின் இருபத்தி ஐந்தாவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்தி கந்தசாமித் தம்பிரான் என்று ஆக்கினார். பிறகு குன்றக்குடி ஆதினத்திற்கு இளவரசரானார். அப்போது தெய்வசிகாமணி அருணாசல தேசிகப் பரமாச்சாரிய சுவாமிகள் என்ற பெயர் சூட்டப்பட்டது.

1949ஆம் ஆண்டு அத்திருமடத்தின் நாற்பத்தி ஐந்தாவது குருமகா சந்நிதானமாகப் பொறுப்பேற்றார். குன்றக்குடியில் இவர் செய்த சமூக சேவையால் மக்களால் குன்றக்குடி அடிகளார் என்று அழைக்கப்பட்டார். இவர் மணிமொழி தமிழகம், அருளோசை ஆகிய இதழ்களையும் நடத்தினார். 1972ல் சோவியத்யூனியனுக்கு மேற்கொண்ட பயணத்தின் விளைவாகக் குன்றக்குடி கிராமத்திட்டம் என்ற ஒன்றை உருவாக்கி மக்கள் மேம்பாட்டிற்காக உழைத்தார். தமிழகத்தில் மதக் கலவரங்கள் ஏற்பட்ட போது பாதையாத்திரைகளை நடத்தி மதஒற்றுமைகளுக்கு வழிகாட்டினார். இவருடைய சிறுகதைகள் அறிவொளி இயக்கத்தின் மூலமாக எளிய மக்களையும் சென்றடைந்தது. எங்கே போகிறோம்? என்ற இவரது கட்டுரை தினமணி இதழில் தொடராக வந்தது. இந்தக் கட்டுரை இன்றைக்கும் வழிகாட்டுவதாக உள்ளது.

1. சொல்லமுதம்

2. மண்ணும் விண்ணும்

3. முத்து மொழிகள்

4. அமுத மொழிகள்

5. ஈழத்துச் சொற்பொழிவுகள்

6. திருவள்ளுவர் காட்டும் அரசு

7. குறட்செல்வம் திறனாய்வு

8. அப்பர் விருந்து

9. வாழ்க்கை விளக்கு

10. திருவள்ளுவர் காட்டும் அரசியல்

11. புனிதநெறி

12. வானொலியில் அடிகளார்

13. மனம் ஒரு மாளிகை

14. குறட்செல்வம்

15. சிந்தனைச் செல்வம்

16. அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர்

17. தமிழமுது

18. திருவருட் சிந்தனை

19. சைவசித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

20. வாக்காளர்களுக்கு வள்ளுவர் அறிவுரைகள்

21. சமுதாய மறுமலர்ச்சி

22. சிந்தனைச் சோலை

23. Thirukkural a world literature

24. வாழ்க்கை நலம்

25. சிலம்பு நெறி

26. சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

27. எங்கே போகிறோம்

28. பொங்கல் பரிசு

29. அடிகளார் உவமை நயம்

30. கவியரங்கில் அடிகளார்

31. பெரிய புராணச் சொற்பொழிவுகள்

32. சமய மறுமலர்ச்சி

33. அறவழிகாட்டி

34. திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி விளக்கம்

35. நாயன்மார்களின் அடிச்சுவட்டில்

36. நமது நிலையில் சமயம் சமுதாயம்

37. மொழிவழிச் சிந்தனைகள்

38. திருவள்ளுவர்

39. ஆலயங்கள் சமுதாய மையங்கள்

40. கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

41. திருவாசகத்தேன்

42. தமிழும் சமயமும் சமுதாயமும்

43. பாரதி யுகசந்தி

44. சமய இலக்கியங்கள்

45. கடவுளைப் போற்று - மனிதனை நினை

46. திருக்குறள் பேசுகிறது

47. பாரதிதாசனின் உலகம்

48. சிந்தனை மலர்கள்

49. மண்ணும் மனிதர்களும்

50. குறள் நூறு பொருளுரை

51. திருக்குறள் உரை

52. அருள் நெறி முழக்கம்

Pin It