சட்டம் இயற்றுதலும்
அரசாணை வெளியிடுதலும்
கடிதம் எழுதுதலும்
தமிழனுக்கு ஒன்றுதான்..

கடிதங்களின் முகவரி
பிரதமருக்கு எனினும்
தம்பிகளின் மேடைப் பேச்சே
அண்ணனின் கைவண்ணம்.

தமிழ் வழியில் கல்வியென
சட்டம் இயற்றுதலும்
சரித்திரத்தின் நோக்கமே
பேரைச்சொன்னால்தானே
பேரறிஞர் ஆகமுடியும்.

சமச்சீர் கல்வியென
அரசாணை வந்தாலும்
செம்மொழியில் படித்தால்
வேலை உறுதியென
அரசிதழில் வெளியிட்டாலும்
அரசு அறிவிப்பதே
பள்ளிகளில் கட்டணமென
கட்டளையாய் சொன்னாலும்
தமிழன் அறிவான்.

கற்பனையும்
வார்த்தைகளும்
காவியமாய் இருந்தாலும்
திரைவசனங்கள்
வாழ்வை மாற்றாதென
வரலாறும் அறியும்.

சட்டம் இயற்றுதலும்
அரசாணை வெளியிடுதலும்
கடிதம் எழுதுதலும்
தமிழனுக்கு ஒன்றுதான்..