வயதான பெரியவர்களை அரவணைக்காமல் அவர்களை அவமதிப்பதில் நாட்டிலேயே சென்னைதான் மிகவும் மோசமாக உள்ளதாக ஹெல்ப்ஏஜ் இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்ப்ஏஜ் நிறுவனத்திற்காக சிக்மா ரிசர்ச் அன்ட் கன்சல்டிங் நிறுவனம் நடத்திய இந்த கருத்தாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள முடிவுகள் :

சதவீதம் பேரும், வாய் வார்த்தையாக அவமானப்படுத்தப்படுவதாக      378 சதவீதம் பேரும், அடிப்படைச் செலவுக்குப் பணம் கொடுக்காமல் உதாசீனப்படுத்துவதாக 35 சதவீதம் பேரும்,    மரியாதை தருவதில்லை என்று 34 சதவீதம் பேரும் கூறுகின்றனர்.  உடல் ரீதியாக தாங்கள் துன்புறுத்தப்படுவதாக 34 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் முதியவர்களுக்கு மரியாதை இல்லை என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருத்த தலைக்குனிவாகும். இது கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வேண்டியதில்லை.  நேரிலேயே நாம் தினசரி பார்க்கலாம்.  பெருகி வரும் முதியோர் இல்லங்கள் அதற்கு ஒரு நல்ல சான்று.  தெருவுக்கு தெரு தற்போது நர்சரிப் பள்ளிகளை விட முதியோர் இல்லங்கள்தான் பெருகிக் கொண்டிருக்கின்றன.

நாளை நமக்கும் வயதாகும், முதுமை வரும் என்பதை ஒரு விநாடி இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் நினைத்துப் பார்த்தால், நிச்சயம் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளுக்கு வேலையே இருக்காது.