தமிழீழ விடுதலையை அழிக்க ஐநா மனித உரிமை அவையில் அமெரிக்காவால் 2012லிருந்து 2015வரை முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்தான அலசல்

2009ல் தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசால் தமிழருக்கெதிராக நடந்த இனப்படுகொலையை அடுத்து உலகநாடுகள் ஒவ்வொன்றும் அவரவர்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழர்களுக்கு தீர்வு தருகிறோமென்று பேசினார்கள். இதில் கொடுமை என்னவென்றால் யாரெல்லாம் 2009இல் ஈழத் தமிழர்களை அழித்தார்களோ அவர்களே முன்னின்று இந்த வேலையை செய்தார்கள். அதில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து இவர்களின் பங்கு மிகப்பெரியது. தமிழர்களின் 60ஆண்டுகால விடுதலை போராட்டத்தை நசுக்கும் வேலையை 2009க்கு பின்னர் ஏனைய நாடுகளே செய்தது. அதாவது தமிழர்களுக்கு தீர்வு என்ற பெயரில் 2012லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐநா அவையில் அமெரிக்காவின் சார்பில் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது.

Eelam protest2012இல் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து இப்போது ஏன் பேச வேண்டுமென்று சிலருக்கு தோன்றும். அதாவது இந்த அமெரிக்க தீர்மானத்தை முன்வைத்து தான் ஈழ விடுதலை என்பது இலங்கைக்குள் தமிழர்களுக்கான தீர்வாக சுருக்கப்பட்டு இன்று முட்டுச்சந்தில் போய் நிற்கிறது. மேலும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பது இல்லை எதிர்ப்பது என்ற நிலையை வைத்து தான் ஈழ விடுதலை அரசியலின் போராட்ட போக்கே தமிழகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் மாற்றப்பட்டது. ஆகவே தான் இந்த அமெரிக்க தீர்மானங்கள் குறித்து நாம் மீளாய்வு செய்வது அவசியம். அதுவே எதிர்காலத்தில் தமிழர்களின் போராட்ட அரசியலில் நாம் சரியான நிலைப் பாட்டினை எடுக்க உதவும்.

அமெரிக்காவும் ஈழத்தமிழர் சிக்கலும்:

அமெரிக்க தீர்மானங்கள் குறித்து பார்ப்பதற்கு முன் 14,933கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இலங்கையின் மீது அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்பதை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே இந்த தீர்மானங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

இலங்கையின் வழியாக தனது பிராந்திய நலன்களை தெற்காசிய பிராந்தியத்தில் நிலை நிறுத்தவும், ஆசிய பசுபிக் பெருங்கடலில் தனது கப்பற் படையை அமைக்கவும் மேலும் உலகின் புதிய சக்தியாக உருவாகிவரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும், விரும்பிய மேற்குலகத்திற்க்கு மிகப்பெரும் சவாலாக பசுபிக் கடல் பகுதியில் உருவாகி வந்த தமீழீழமக்களின் விடுதலை கோரிக்கையும் அதனை முன்னின்று களத்தில் செயல்பட்ட தமிழீழமக்களின் பிரதிநிதிகளான விடுதலைபுலிகளின் போராட்டமும் இருந்தது. இதன் விளைவாக அவர்களை அழித்தால்தான் தனது செல்வாக்கை நிலைநிறுத்த முடியும் என்ற நிலையில் இலங்கையின் வழியாக அதை செய்துமுடித்தது அமெரிக்கா. இதற்க்கு ஏராளாமான சான்றுகள் கடந்த காலங்களிலிருந்து தரமுடியும். உதாரணமாக

“1950களில் அமெரிக்காவின் இராணுவத் தலைமை அந்நாட்டு அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கை தருகிறது. அதில் தெற்காசிய பிராந்தியத்தில் நமது செல்வாக்கு இருக்க வேண்டுமானால் இலங்கையிலுள்ள இயற்கை துறைமுகமான  திரிகோணமலை நம் கட்டு பாட்டிலிருக்க வேண்டும்"

இதன் பின் 1970களிலிருந்து தொடர்ச்சியாக இலங்கைக்கு அமெரிக்கா இராணுவ பயிற்சி அளிப்பதும், இஸ்ரேல் வழியாக ஆயுதங்களை வழங்குவதும், இன்னொரு புறத்தில் நார்வே மூலம் பேச்சுவார்த்தை எனும் நாடகம் போடுவதுமாக இருந்தது. இதனை குறிப்பிட்டு தான் பிரபாகரன் அவர்கள். 'அமெரிக்காவின் அமைதி முகம் நார்வே, ஆயுதமுகம் இஸ்ரேல் என்று சொன்னார்’. அத்தோடு அமைதி பேச்சுவார்த்தையில் இருந்த காலகட்டத்தில் அதனை மீறி 2006இல் திரிகோணமலை பகுதியில் தாக்குதல் நடத்தி இலங்கை அரசை அமைதி பேச்சுவார்த்தையை மீறச்செய்து தமிழர்கள் மீது போரை நடத்த செய்ததும் அமெரிக்காதான். இதன் விளைவாகவே 2009இல் 1,46,679தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

அமெரிக்க தீர்மானமும் அமெரிக்காவின் நரித்தனமும்:

இதில் மேலே சொன்னது ஈழப்போரில் அமெரிக்கா செய்த பங்களிப்பின் மிக மிகச் சிறிய தொகுப்பு தான். இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள இதற்கு முந்தைய கட்டுரையான 'ஈழம் ஏகாதி பத்தியங்களின் ஆடுகளம்' என்ற கட்டுரையையும், 'ஈழப்போரில் அமெரிக்காவின் பங்கு' என்ற மே17 இயக்கத்தின்  சிறு வெளியீட்டு நூலையையும் படித்தால் புரிந்து கொள்ளலாம். இவ்வளவு உதவிகளை செய்த அமெரிக்கா தான் 2012லிருந்து ஐநா அவையில் தமிழர்களுக்கு தீர்வு தருகிறோமென்று தொடர்ந்து தீர்மானங்களாக கொண்டு வந்து ஈழவிடுதலை என்ற ஒன்றை இன்று சர்வதேச மட்டத்தில் இல்லாமல் செய்துவிட்டது.

அதாவது 2009இல் தமிழர்களின் உரிமையை கோரிய மக்களையும் அந்த மக்களை ஒன்றிணைந்து போராடிய விடுதலைபுலிகளையும் இலங்கை அரசின் வழியாக அழித்தவிட்ட அமெரிக்காவுக்கு, அவர்களின் விடுதலை கோரிக்கையை அழிக்க முடியவில்லை. அதை இல்லாமல் செய்வதற்கு தான் அயோக்கிய ஐ.நா தீர்மானங்கள்..

உதாரணமாக அதுவரை தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்று இருந்த சர்வதேச விவாதத்தினை அமெரிக்கா தனது வஞ்சக தீர்மானம் மூலம் உள்நாட்டு விசாரணை அதாவது குற்றவாளியே தன்னை தானே விசாரித்துக்கொள்ள (LLRC) வேண்டுமென்று மாற்றி 2012ல் முதன்முதலில் ஐநா அவையில் தீர்மானமாக வைக்கிறது. இப்போது சிலருக்கு சந்தேகங்கள் எழக்கூடும். அதாவது சர்வதேச அளவில் எப்போது இதுபோன்ற விவாதம் அதிகார மட்டத்தில் நடந்தது அதை அமெரிக்கா கெடுத்ததென்று.

இனப் படுகொலை முடிந்த சில தினங்களில் மே26, 2009அன்று ஐநா மனித உரிமைகள் கூட்டத்தில் அதனுடைய தலைவர் நவநீதம் பிள்ளை இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட  வேண்டும் என்று கூறினார். http://www.ohchr.org/EN/NewsEvents/Pages/DisplayNews.aspx?NewsID=8823&LangID=E அதனை தொடர்ந்து ஐநாவின் தலைமை அலுவலகத்தில் ஜுன் மாதம் தொடங்கி பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன. அப்பொழுது பேசிய ஐநா அலுவலர்கள் பலரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருந்தனர். அவைகளுள் சில,

1.இலங்கையின் கடந்தகால உள்நாட்டு விசாரணையின் செயல்பாடுகள் இலங்கை அரசை உண்மையான பொறுப்புதாரியாக அடையாளம் காட்டவில்லை.

2.இலங்கையில் ஐநா செயல்படுவதற்கான போதிய அரசியல் வெளிபடுத்தவில்லை.

3.நீதி மற்றும் விசாரணை தொடர்பான விசயங்களில் ஐநாவின் திட்டமிடலுக்கும், வழிகாட்டலுக்கும் தேவையான அறிக்கையினை மனித உரிமை கமிசன் தயாரிக்க வேண்டும்.

இதன்படி ஜுன்23, 2009அன்று முடிவுற்ற அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நவிபிள்ளை தலைமையிலான மனித உரிமை கவுன்சில், இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறியது.

அதன் பிறகு ஐநாவில் மூவர் குழு என்னும் பெயரில் நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப் பட்டது. அந்தக்குழு தனது அறிக்கையினை 2011மார்ச் இறுதியில் வழங்கியது. அந்த அறிக்கையின் முதல் பரிந்துரையாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டு மென்று கூறியது. மேலும் இலங்கை அரசு அமைத்த LLRC என்னும் அமைப்பும் அதில் உள்ள அதிகாரிகளும் நேர்மையானவர்கள் இல்லை என்றும் கூறியது.

இப்படி ஐநாவின் நடைமுறைகளின் படி அதனுடைய மட்டத்தில் சர்வதேச  விசாரணையை பற்றிய விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தான் அமெரிக்கா 2012ல் LLRC அடிப்படையில் உள்நாட்டு விசாரணைக்கோரி ஒரு தீர்மானத்தினை முன்வைக்கின்றது. அதாவது உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதை பற்றி தன்னிச்சையாக உச்ச நீதிமன்றமே முன்வந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் போது, உச்ச நீதி மன்றத்தில் வழக்கை நடத்த வேண்டாம் கட்டப் பஞ்சாயத்து செய்து வழக்கினை முடித்துக் கொள்ளலாம் என்று கூறுவதை போல்தான் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமைகின்றது. இதுபோன்ற நிகழ்வு என்பது, குற்றவாளியை பாதுகாப்பதற்க்கான ஒரு நகர்வே அன்றி குற்றவாளியை தண்டிப்பதற்கோ அல்லது பாதிக்கப்பட்டவனுக்கு நீதி, நிவாரணம் வழங்குவதற்கோ மேற்கொள்ளப் பட்ட நகர்வு அல்ல.

கடந்த 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் அமெரிக்கா முன் வைக்கும் தீர்மானங்கள் ஐநாவே முன்வந்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்திவிடக் கூடாது என்பதற்காக, உள்நாட்டு விசாரணையை முன்வைத்தே இருந்தது. இப்படிப்பட்ட உள்நோக்கங்களை கொண்ட அமெரிக்கா, இனப் படுகொலைக்காக இல்லாமல் போர் குற்றங்களுக்காக அதுவும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரதி நிதிகளான விடுதலை புலிகளையும் சேர்த்து விசாரிக்க கோரி ஒரு தீர்மானத்தினை முன் வைத்தால் அது தமிழர்களை ஒட்டு மொத்தமாக முடக்குவதற்க்கான செயலே.

போர்குற்ற விசாரணையும் அமெரிக்காவின் சதியும்:

போர்குற்ற விசாரணை என்பது இரு தரப்பினர் மீதும் விசாரிக்கும் நடைமுறை கொண்டது. அதனை ஏன் அமெரிக்கா ஐநா கொண்டு வரும் போது தடுத்தது தற்போது தானாக கொண்டுவர வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பு. இதற்கான பதில் மிக எளிமையானது ஏற்கனவே அமெரிக்காவின் பங்கு என்பது தனது பிராந்திய நலன் சார்ந்ததாகும். இந்த இனப் படுகொலையை இலங்கை வழியாக செய்து முடிந்தபின் அதனை வைத்து தனது நலனை முன்னிறுத்த விரும்பிய அமெரிக்காவுக்கு இராசபக்சேவின் அதிதீவிரமான சீனாவின் பாசம் இடைஞ்சலை ஏற்படுத்துகிறது.

2012 & 2013 ஆகிய இரண்டு தீர்மானங்கள் வழியாக அமெரிக்கா இலங்கையின் பக்கம்தான் என்று சொல்லாமல் சொல்லிய பிறகும் இராசபக்சே அரசு சீனாவின் பக்கமே சாய்ந்தது. எனவே இப்போது இராசபக்சே அமெரிக்காவுக்கு தேவையில்லை. அந்த இடத்தில் அமெரிக்க சார்பு ஆட்களை உட்கார வைத்துவிட்டு தமிழர்களை கொலை செய்தவனை தண்டித்து விட்டோம் என்று சொல்லி அமையவிருக்கும் புதிய அமெரிக்க சார்பு அரசை கொண்டு தமிழர்களுக்கு நல்லிணக்கம் அதாவது சில உதவிகள் செய்து கொடுக்கப்பட்டு தமிழர்களுக்கும் தீர்வு தந்துவிட்டோமென்று தமிழீழ விடுதலையை முற்றும் முழுவதுமாக அழித்து விடும் சதி தான் இதன் பின்னால் இருப்பது.

இதைதான் அமெரிக்கா 2014 தீர்மானத்தின் போது செய்தது. அதாவது இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறலை விசாரிக்க ஐநாவின் மனித உரிமை மன்றம் மார்டி அத்திசாரி (Martti Ahtisaari) என்பவர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது. இவர்கள்

  1. புலிகளையும் விசாரிக்க வேண்டுமென்றும்
  2. இலங்கையில் நடந்தது ஒரு மதச் சிறு பாண்மையினருக்கான மோதல் என்ற ஒரு அபத்தத்தை வரையறுத்தது. தமிழர்களை ஒரு தனித்த தேசிய இனம் என்பதை திட்டமிட்டு மறைத்தது. இது போன்ற ஒன்றை தான் இதுவரையில் தீர்மானங்களாக முன்வைத்து வந்தது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள். இந்த தீர்மானம் எந்தவகையிலும் தமிழர்களுக்கு தீர்வில்லை என்பதை தாண்டி இலங்கைக்கும் எந்த பாதிப்பும் இல்லாதது. இதனை இராசபக்சேவே சொன்னார்.

உதாரணமாக இந்த தீர்மானம் குறித்து இராசபக்சே மற்றும் கோத்தபய இராசபக்சேவின் கருத்தை பார்த்தாலே தெரியும் இதை ஏன் இராசபக்சே வகையறாக்கள் எதிர்க்கிறார்கள் என்று.

"மார்ச் 22,2014 அன்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய இராசபக்சே இலங்கையின் எதிர்கட்சிகள் சர்வதேச சக்திகளுடன் ஒன்று சேர்ந்துகொண்டு எனது அரசை நீக்க ஐநா அவையை பயன்படுத்துகிறது" என்றார் http://www.thehindu.com/news/international/south-asia/rajapaksa-sees-opposition-bid-to-topple-him-with-global-support/article5822275.ece

 இப்போது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மான மென்பது நாட்டிற்கு ஆபத்தை தருமென்று ஒரு பொய் பிரச்சாரத்தை செய்கிறார்கள். இந்த தீர்மானத்தால் நாட்டுக்கு எந்த பாதிப்புமில்லை. மாறாக இலங்கையில் இராசபக்சேவின் அரசை மாற்றி விட்டு மேற்குலகு சார்புடைய ஒருவரை நியமிப்பதற்காக நடக்கும் வேலைதான் இந்த தீர்மானம். "இது கோத்தபய இராசபக்சே மார்ச் மாதம் இலங்கை இராணுவ விழாவில் பேசியது"

 அது சரி இந்த தீர்மானத்தால் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துகள் பற்றி பார்ப்போம். அதாவது இந்த போரில் விடுதலை புலிகளும் இலங்கையின் இராணுவம் குற்றமிழைத்திருக்கிறார்கள் எனவே இருவரையும் விசாரிக்க வேண்டும் என்பதே போர் குற்ற விசாரணை. இரு தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்னும் நடைமுறை பின்பற்றப்பட்டால், இலங்கை இராணுவ அதிகாரிகள் யாரையும் கைது செய்யும் சூழல் இல்லை. ஏனெனில், இனப் படுகொலையை நிகழ்த்திய இராணுவ தளபதிகள் பலரும் ஐநாவின் அதிகாரிகளாகவோ, வெளிநாட்டு தூதர்களாகவோ நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.

எனவே இவர்களை உலகிலுள்ள எந்த அரசாலும் அமைப்பாலும் கைது செய்ய முடியாது. இதற்கு உதாரணம் வேண்டுமென்றால் 2014இல் அமெரிக்காவை உளவு பார்த்ததாக இந்தியாவை சேர்ந்த அதிகாரி ‘தேவயானி கோபர்கடே’ அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்டார். உடனே இந்திய அரசு அவரை ஐ.நாவில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமித்தது. இதனால் அமெரிக்க அரசால் அவரை மேற்கொண்டு விசாரணை ஏதும் செய்யமுடியாமல் இந்தியாவுக்கே அனுப்பிவிட்டது.. இந்திய அதிகாரி தேவயாணி விவாகரத்தில் அவரை ஐநாவின் அதிகாரியாக இந்தியா நியமித்ததும் அவரை அமெரிக்க அரசாங்கம் கைது செய்ய முடியாத சூழலை கவனித்தால், எந்தவொரு ஐநா அதிகாரியையும் உலக அரசாங்கங்கள் கைது செய்ய முடியாது என்பது எளிதில் புரியும்.

ஆனால் தமிழர்கள் தரப்பில் போர்குற்றம் விசாரணை என்ற பெயரில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலரும் விடுதலை புலிகள் அமைப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படக்கூடும். புலிகள் அமைப்பிலிருந்து இறுதி காலத்தில் பாதுகாப்பாக வெளியேறிய பலரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள். இப்படி தேடப்படும் குற்றவாளியாக ஒருவரை அறிவித்தால் உலகில் இருக்கும் அனைத்து நாடுகளும் அவரையும் அவருடன் இணைந்து செயலாற்றிய அனைவரையும் தங்களது நாட்டிற்குள் நுழையவோ, தங்களது நாட்டில் வசிக்கவோ அனுமதி மறுப்பதோடு மட்டுமின்றி அவர்களை கைது செய்யவும் முயலும். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி தமிழீழ ஆதரவு செயற்பாட்டாளர்கள் அனைவர் மீதும் நீளும். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் ஈழத்திற்கான போராட்டங்கள் ஒட்டுமொத்தமாக முடக்கப்படும்.

உலகில் இருக்கக்கூடிய 193நாடுகளில் 32நாடுகளில்தான் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருந்தது. அதில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் மட்டும் 27ஆகும். இப்போது அங்கும் தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. அப்படிப்பார்த்தால் உலகில் மொத்தம் 5நாடுகள் மட்டுமே விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்த நாடுகளாக இருக்கிறது.

இதனை விரும்பாத அமெரிக்கா முன்வைக்கும் திட்டமே இந்த போர்குற்ற விசாரணை. அவ்வாறு ஒரு விசாரணை முன்மொழியப்பட்டால் . விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாட்டாளர்கள் மட்டுமின்றி, தமிழீழ ஆதரவு அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரும் உலகெங்கும் இருக்கும் அனைத்து நாடுகளாலும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறும். இது ஏறத்தாழ உலகில் இருக்கும் அனைத்து நாடுகளும் தமிழீழத்திற்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும் ஒரு சூழலை உருவாக்குவதற்க்காக அமெரிக்கவால் முன்னெடுக்கப்படும் ஒரு செயலாகவே இது இருக்கின்றது.

இதை ஏதோ யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை. 2014இல் இந்த தீர்மானம் நிறைவேறிய உடனேயே இலங்கை அரசு விடுதலைப் புலிகளோடு தொடர்பென்று சொல்லி 16அமைப்புகளையும் 424 தனிநபர்களையும் தடை செய்தது. மேலும் இலங்கை அரசு தடை செய்த அதே அமைப்புகளையும் தனி நபர்களையும் இந்தியாவும் தடை செய்ததும் இதனடிப்படையில் தான். இனி புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தமிழக தமிழர்களோ, தமிழீழத் தமிழர்களோ அவர்களுடன் அரசியல் செயற்பாடுகளை செய்ய முடியாது மீறி செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமென்று கைது செய்யும் சூழல் உருவாகும். இப்படிப்பட்ட தீர்மானத்தை தான் அமெரிக்கா 2014இல் நிறைவேற்றி ஒரே நேரத்தில் தனக்கு எதிரான இராசபக்சேவையும், தமிழர்களின் விடுதலையையும் ஒடுக்க முயன்றது.

இந்த நேரத்தில் இலங்கையில் நடந்த சனாதிபதி தேர்தலில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இராசபக்சே அரசை மாற்ற இராசபக்சே கட்சிக்குள்ளேயே இருந்த 2009 தமிழினப்படுகொலையின் போது இராசபக்சே அமைச்சரவையில் அங்கம் வகித்த மைத்திரிபால சிறீசேனாவை பிரித்து இராசபக்சேவுக்கு எதிராக நிற்கவைத்து அவருடன் இலங்கை எதிர்கட்சிகளான இரணில் விக்ரமசிங்கே மற்றும் சந்திரிகாவையும் கூட்டணி சேரவைத்து ஜனவரி 08’2015 வெற்றியும் பெறவைத்தது.

இதற்கு பலனாக இலங்கையில் சீனா கட்டிவரும் துறைமுகப்பணியை நிறுத்திவைப்பதாக வந்தவுடனே சிறிசேனா அரசு அறிவித்தது. தனக்கு சாதகமான அரசு இலங்கையில் வந்தவுடன் 2014இல் ஐநா உருவாக்கிய மார்டி அத்திசாரி தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவின் அறிக்கையை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் வைக்கவிடாமல் 6மாதகாலம் அவகாசம் என்று இலங்கையை இந்தியாவும் அமெரிக்காவும் காப்பாறியது. இதன்பின் இந்த அறிக்கையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து இன்று வரை அந்த அறிக்கையை ஐ.நாவில் சமர்பிக்கவிடாமல் தடுத்து இலங்கையை சர்வதேச மட்டத்திலிருந்து முற்றிலும் அமெரிக்காவும் இந்தியாவும் காப்பாற்றிவிட்டது. ஆனால் அமெரிக்கா தீர்மானம் தமிழர்களுக்கு விடிவு தரும் நம்புங்கள் என்று தமிழர்களுக்கு சொன்னவர்கள் இதுகுறித்து இன்றுவரை வாய்திறக்கவில்லை. ஒரு லட்சம் தமிழர்களின் இறப்புக்கு நீதி என்பது அமெரிக்கா இந்தியாவின் சதியால் இன்று நிர்கதியில் இருக்கிறது.

 அமெரிக்க தீர்மானமும் மே 17 இயக்கமும்:

ஈழ விடுதலை என்ற கொள்கையில் ஒருநாளும் மே 17 இயக்கம் சமரசத்திற்கோ அல்லது தவறான நிலைப் பாட்டையோ எடுத்ததில்லை. இயக்கம் ஆரம்பித்த காலத்தில் மே 17’2010இல் திருநெல்வேலியில் நடத்திய முதல் பொதுக்கூட்டத்திலேயே ‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் இலங்கை அரசை இனப் படுகொலை அரசு என்று அறிவிக்கவேண்டுமென்றும் கோரிக்கையை வைத்தது இயக்கம்.

இதில் இன்றளவும் எந்தம் மாற்றமில்லாமல் இயக்கம் இயங்கி வருகிறது. அதனோடு இந்த கோரிக்கையை சிதைக்க நினைக்கும் சக்திகளை சமசரசமின்றி எதிர்த்து அம்பலப் படுத்தியிருக்கின்றோம். அதன்படி தான் ஐ.நாவிலும் நடக்கும் அனைத்து நாடகங்களையும் ஆரம்ப கட்டத்திலிருந்து பல்வேறு வழிகளில் அம்பலப்படுத்தியிருக்கின்றோம்.

அதாவது 2011இல் ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்ட பொழுதில் மே17 இயக்கம் இது சமரசத்திற்கு வழி செய்யும் சதியை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது என்று 2011 மே மாதம் 28 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் இருக்கும் செ.தெ.நாயகம் பள்ளியில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து அறிவித்தோம். அதோடு ஐ.நாவின் மூலமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் முன்வைக்கும் சதிகளையும் விவரித்தோம். இதன் காரணமாக போர்க்குற்றம், போன்ற வார்த்தைகளை ஏற்க மறுப்பதும், இனப் படுகொலைக்கான தீர்வு தேவை என்றும், அத்தீர்வு பொது வாக்கெடுப்பு என்றும் முன்வைத்தோம்.

அதன் பிறகு 2012இல் அமெரிக்கா இலங்கை அரசு செய்த உள்நாட்டு விசாரணையான LLRC அறிக்கையை முன் வைத்து தீர்மானம் கொண்டு வந்த பொழுதிலும் மே17 இயக்கம் 18,மார்ச் 2012இல் சென்னை மெரினாவில் சுமார் 7000 மக்களை திரட்டி பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை என்றும் அமெரிக்க தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என்றும் பதிவு செய்தோம். இலங்கையின் அரசியல் சாசனத்தையும், LLRC அறிக்கையையும் எரித்தோம்.

eelam protest12இதை 2012 மேமாதம் நினைவேந்தலில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களைக் கொண்டு அழுத்தமாக ஊடகத்தில் பதிவு செய்தது மே17 இயக்கம்.

Ealam vaiko2013 அமெரிக்க தீர்மானம் கொண்டு வரும் முன்னர் ஐ.நா அலுவலகத்தினை முற்றுகையிட்டு தீர்மானத்தினை வலிமையானதாகவும், சர்வதேச விசாரணை கோருகின்ற வழிமுறையை முன்வைக்க வேண்டுமென்று பதிவு செய்தோம். இதை செய்ய மறுக்கும் ஐ.நாவின் கொடி எரிக்கப்பட்டது.

2013 இல் அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்க வேண்டுமென்கிற காரணங்களை மாணவர் தலைவர்களிடம் புரியவைத்து அக்கோரிக்கையை முன் நகர்த்தினோம். அமெரிக்க தீர்மானம் மூலமாக அனைத்து தீர்வும் கிடைக்கும் என்று விவாதங்களை எதிர்கொண்டு அதன் பொய்மைத் தன்மையை அம்பலப்படுத்தினோம். 2013 மார்ச் மாதம் 17ஆம் தேதி சென்னை மெரினாவில் மக்களை திரட்டி அமெரிக்கத் தீர்மானத்தை எரித்தோம். மாணவர்களால் அமெரிக்க தீர்மானம் பல இடங்களில் எரிக்கப்பட்டது.

eelam protest132014இல் ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் அயோக்கிய தீர்மானத்திற்கு எதிராக தமிழர்களின் கோரிக்கைகள் அடங்கிய ’தமிழர்களின் தீர்மானம்’ ஒன்றை ஈழத் தமிழர்கள், புலம் பெயர் தமிழர்கள் மற்றும் மே 17 இயக்கம் இணைந்து தயாரித்து அதனை தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒப்புதலோடு பத்திரிக்கையின் வாயிலாக சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களுக்கான தீர்மானத்தை வெளியிட்டோம். மேலும் அந்த தீர்மானத்தின் நோக்கம் குறித்து விளக்கும் கருத்தரங்கத்தையும் ஏற்படுத்தியிருந்தோம்.

ஆனால் தமிழர்களின் கோரிக்கையை மறுத்துவிட்டு அமெரிக்கா தனது நலன் சார்ந்து ஒரு அயோக்கிய தீர்மானத்தை முன்மொழிந்தது. எனவே அமெரிக்காவின் தூதரகத்தினையும், ஐநாவின் அலுவலகத்தினையும் முற்றுகையிட்டு அமெரிக்க தீர்மானம் தமிழர்களுடைய இறைமையையும், இனப் படுகொலைக்கான நீதியையும் மறுக்கிறது என்று பதிவு செய்தோம். அமெரிக்க தீர்மானமும் ஐ.நாவின் கொடியும் எரிக்கப்பட்டது.

2015இல் ஐ.நாவின் அலுவலகம் இத்தீர்மானத்தின் மூலமாக இலங்கையை காக்கிறது என்றும், இத்தீர்மானம் தமிழர்களை மேலும் பின்னடையச் செய்கிறது என்றும் ஐ.நா அலுவலகம் மற்றும் இரண்டு முறை ( மார்ச் & செப்டம்பர்) அமெரிக்க தூதரகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இதில் ஐநா மற்றும் அமெரிக்க கொடிகள் எரித்து சாம்பலாக்கப்பட்டது.

2015 ஜனவரியில் அமெரிக்காவின் அதிகாரி ஐ.நாவிற்கு மாற்றப்பட்டு அவர்கள் மூலமாக இலங்கை அரசே விசாரணை நடத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்தினோம்.

இந்த தமிழீழ எதிர்ப்பு கொள்கை அரங்கு (anti-eelam coalition platform ) என்பது அமெரிக்காவின் தலைமையிலான கூட்டணி நாடுகளாக அமெரிக்கா-இங்கிலாந்து-இந்தியா-இலங்கை எனும் கூட்டமைப்பு (cooperation ) தங்களுடைய சுயநலம் மற்றும் தம்முடைய ராணுவ-பொருளாதார பொது நலன்களை குறித்து உருவாக்கி வளப்படுத்தி இருக்கும் புதிய இந்தியப் பெருங்கடல் கூட்டு செயல்திட்டத்தின் (co-optive aaction plan) நடவடிக்கைகளின் கொள்கை ரீதியாகவும் (ideological orientation towards regional hegemonic interests of India and Imperialist interest designs of west ) பல கருத்தரங்குகளை தமிழகம் முழுவதும் நிகழ்த்தியது மே17 இயக்கம்.

2016இல் அமெரிக்கா, இங்கிலாந்து இந்தியாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஐநா இலங்கை குறித்தான அறிக்கையை மேலும் இரண்டு ஆண்டுகள் தள்ளி வைத்ததை கண்டித்து ஐநா அலுவலகம் மே 17 இயக்கத்தினால் முற்றுகை இடப்பட்டது.

இப்படியாக ஈழ விடுதலைக்கு எதிரான அமெரிக்க – இந்திய – இங்கிலாந்து – இலங்கை கூட்டணியை எல்லா இடங்களிலும் அம்பலப்படுத்தியது மே 17 இயக்கம். இதன் விளைவாக அமெரிக்க அதிகார மட்டத்திலான உயரதிகாரிகளிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2011 இல் முதன்முதலில் மே17 இயக்கம் முழங்கிய இலங்கை அரசை இனப்படுகொலை அரசு என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவி என்ற கோரிக்கையும், ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்து என்ற கோரிக்கையும் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதுமட்டுமில்லாமல் ஐநா அரங்கினுள்ளே சென்று ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என்று முதன்முதலில் பதிவு செய்ததும் மே17 இயக்கமே. இப்படி அனைத்து விதங்களிலும் ஈழவிடுதலைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்த்து சமரசமில்லாமல் நின்றது மே 17 இயக்கம்.

eelam protest14eelam protest15ஒடுக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டு நீதிக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திகள் ஒன்று ஒண்டென்றால் அவை எந்தச் சபையோ, பேரவையோ, அமைப்போ, அமெரிக்காவோ, இந்தியாவோ விடுதலையை வென்று தராது என்பது தான். மனித உரிமைகள் மீதான இவர்களின் அக்கறை என்பது ஆடு நனைகிறது என்று ஒநாய் அழுத கதையின்றி வேறல்ல.. விடுதலையின் பாதையை நாம் தீர்மானிப்போம். தமிழீழம் வெல்வோம்.