Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2008

ஒரு செருப்பு
கவிஞர் பல்லவன்


இமயமலையைக்
கைப்பற்றி விட்டனர்
மொகலாயர்கள்!

பாதுஷாக்களின்
சாம்ராஜ்யம்
ஆனது இந்தியா!

முகமதியரின்
ஆட்சிக்கொடி
கம்பீரமாகப்
பறந்தது
தில்லிப்பட்டணத்தில்!
அன்னை தந்தை
அண்ணன் தம்பி
பாசமெல்லாம்
சுல்தான்களில்
காலடிகளில்
மிதிபட்டுக்
கொண்டிருந்தது!

மதவெறிகொண்ட
இசுலாமியரின்
இரும்புப் பிடியில்
இந்திய தேசம்
விழி பிதுங்கியது!

குலைநடுங்கிக்
கொண்டிருந்தனர்
பரதக் கண்டத்துக்
குறுநில மன்னர்கள்!
அலங்கரிக்கப்பட்ட
பல்லக்கு ஒன்று
தில்லியைவிட்டுப்
புறப்பட்டது
ஒளரங்கசீப்பின்
ஒருகால்செருப்பைச்
சுமந்தபடி...

அவனி அம்பத்தாறு
தேசத்து ராஜாக்களும்
அந்தச் செருப்புக்குத்
தலைவணங்க வேண்டும்.
தவறாமல் கப்பம்
செலுத்த வேண்டும்.
ஒளரங்கசீப்பின்
அரசக்கட்டளை
எட்டுத் திக்கிலும்
எதிரொலித்தது!

செருப்பை
வழிபட மறுத்தாலோ
வரிகட்டாமல்
எதிர்த்தாலோ
அம்மன்னனை
வேட்டையாடி
விலங்கிட்டு
இழுத்துச்செல்லும்
பாதுஷாவின் படைகள்!
பயந்தாங்கொள்ளி
ராஜாக்கள் பலர்
பாதுகையை
விழுந்து விழுந்து
வணங்கினர்!

இதோ...
மதுரை மண்ணில்
அந்தப் பல்லக்கின்
பவனி!

மானமறத்தி
ராணி மங்கம்மாவின்
மகன் முத்துவீரப்பனின்
கொலு மண்டபத்தின்
உள்ளே
நுழைந்துவிட்டது
அந்த மூடு பல்லக்கு!

குருதி கொப்பளிக்க
கோபம் கொந்தளிக்க
பல்லக்கை
எட்டி உதைத்தான்
முத்து வீரப்பன்!

நிலைகுலைந்து
போனார்கள்
ஒளரங்கசீப்பின்
படைவீரர்கள்!

முத்துவீரப்பனின்
வாழ்க்கை
முடியப் போகிறது!
பாதுஷாவின்
சினத்தீயில்
எரிந்து கரிந்து
சாகப்போகிறான்
தமிழ்மன்னன்!

இப்படி
எண்ணமிட்டனர்
இசுலாமியத்
தளகர்த்தர்கள்.

பரிதாபமாக
விழுந்துகிடந்த
ஒளரங்கசீப்பின்
ஒற்றைச் செருப்பைத்
தமது காலில்
அணிந்தபடி
பொங்குமாங்கடலானான்
முத்துவீரப்பன்!

மனிதனுக்கு இரண்டு
கால்கள் இருப்பது
உங்கள் மன்னுக்குத்
தெரியாதோ?
ஒரு செருப்பு
இங்கே!
மறு செருப்பு
எங்கே?

அவமானச் சின்னமான
அச்செருப்பையும்
தில்லி பாதுஷாவின்
அரசாணையையும்
காலில் போட்டு
மிதித்தான்
மதுரை மன்னன்!

கப்பம் என்னடா கப்பம்!
கண்டவனுக்கு எல்லாம்
கப்பம் கட்டத்
தமிழகம் ஒன்றும்
கொத்தடிமை நாடல்ல!
போய்ச் சொல்லுங்கள்
டில்லி பாதுஷாவிடம்!

மண்ணின் மைந்தர்கள்
நாங்கள்!
மானப் பிறவிகள்
நாங்கள்!

வந்தேறிகளுக்கு
எல்லாம்
வரிகட்டும் வழக்கம்
எங்களுக்கு இல்லை!

வரிகேட்க வந்தோரின்
வாய்கிழித்து
அனுப்பாமல்
விரட்டி அடித்தான்
முத்து வீரப்பன்!
தலைதெறிக்க
ஓடியது
மொகலாயப்படை!

பயந்தபடியே
மதுரையில் பட்ட
அவமானத்தை
பாதுôஷாவிடம்
விவரித்தனர்
வீரர்கள்.

கொதிப்பேறிப் போனான்
ஒளரங்!
கொதிநிலை
அடங்கிய பின்னர்
தன் செயலுக்கு
வருந்தினான்!

தலைவணங்காத்
தமிழ் மன்னனின்
தன்மானமும்
தமிழ்வீரமும்
ஒளரங்கசீப்பின்
ஆணவத்தைப்
புரட்டிப் போட்டது!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com