Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Non-Veg Recipe
முட்டை பஃப்ஸ்

தேவையான பொருட்கள்:

Egg Puffs முட்டை - 6 (வேக வைத்து பாதியாக்கியது)
சிக்கன் ஸ்டாக் - 1/2 கியூப்
இஞ்சி & பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 12
தக்களி - 1/2
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - கொஞ்சம்
மல்லித் தூள் - 1/4 ஸ்பூன்

ரெடிமேடாக கிடைக்கும் பஃப் ஷீட்ஸ் 12 வாங்கிக் கொள்ளவும். ஒரு பஃப்ஸுக்கு பாதி முட்டை வைக்க வேண்டும்.


செய்முறை:

3 ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து அதில் வெங்காயம், கறிவேப்பிலை வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டை அதில் போட்டு, வதக்கி பின் தக்காளி சேர்த்து மேலும் வதக்க வேண்டும். தக்காளி நன்கு உடைந்து வதங்கியதும் மற்றுமுள்ள பொடிவகைகளைச் சேர்க்க வேண்டும். மேலும் 3 நிமிடம் வதக்கி பின் வேக வைத்த முட்டையை இட்டு பிறட்டி தண்ணீர் வற்ற வதக்க வேண்டும்.

பின் இந்த மசாலாவில் இருந்து பாதிமுட்டையையும் கொஞ்சம் மசாலாவையும் ஒரு ஷீடில் வைத்து ஓரங்களை மடிக்க வேண்டும். இப்படி 12 ஷீட்டையும் செய்து வைக்க வேண்டும். பின் ஓவென் டோஸ்டரில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்போது முட்டை பப்ஸ் தயார்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.