Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

எவ்வகை ரோஜா?...
ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்..

Rose Girl லேசாய்ப்பனி பெய்திடுமோர்
அதிகாலை வேளையில்,
சோம்பலைப் போர்வைக்குள்
போர்வையாய்ப் போர்த்தி
மெல்லுறக்கந்தனை இன்னமும்
மிச்சம் வைத்திருக்கும்
ஊராருக்கிடையில்,
குளிர்பனியில் நனைந்தே
மிதந்துவரும் பூவையவள்
தரிசனம் வேண்டி நிற்கிறேன்
அனிச்சயாய் என்
விரல்களினிடையில் சிக்குண்ட‌
இந்த கருப்புக்குடைக்குள்...

எனக்குத்துணையாய், அழகிலவள்
துப்பட்டாவில் பூத்திருக்கும்
ரோஜாவிற்க்கிணையாய்,
தெருவோரம் தேங்கி நிற்கும்
தண்ணீரில் நீந்திப்பழகும்
தவளைகளைத் தட்டிக்கொடுக்கும்
புற்களுக்கு மத்தியில்
பூத்திருக்கும் பட்டு ரோஜா
அவளைப்பார்த்து வியப்புற்றது
உலகிலுள்ள ஈராயிரம்
ரோஜாக்களில் இவள்
எவ்வகை என்றே...

- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.. (ashwin_i1980@yahoo.co.in)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.