Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

படிக்கத் தொடங்கும்முன்....
நீ“தீ”

விழிகள்
பெருமூச்சுடன்
புத்தகத்தை தேடுகிறது
பேசத்தொடங்குகிறேன்

புத்தகத்திற்கும்
எனக்குமான தொடர்பு
இரவுகளில் தான் அதிகம்

புரியாமல் தான் வாசிப்பேன்
வாயில்லா புத்தகம்
எதுவும் பேசுவதில்லை
என்னை பேசவிட்டு
வேடிக்கை பார்க்கும்

படிக்கும் ஆர்வம்
தினமும் அதிகரிக்கிறது
பக்கத்திற்கு பக்கம் - உன்
கட்டுப்பாடுகள் உடைகிறது

பக்கங்களை புரட்டும்போதெல்லாம்
என்னையே புரட்டிவிடுகிறது
ஆனால்
இன்னமும் என்னால்
முழுமையாக படிக்கமுடியவில்லை
ஒரு கட்டத்தில்
வாசிப்பு தடைபடுகிறது


உதிர்ந்து போன
உறக்கங்களுடன்
கசங்கிய பக்கங்களாய்
என் மார்பில்
தலைவைத்து படுத்துறங்கும்
புத்தகத்தின்
புரிதலின் புன்னகையை
அதிகாலையில் உணர்கிறேன்


- நீ“தீ” (hsnlife@yahoo.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.