Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
டிசம்பர் 2008

அம்பேத்கர் அழுதார்...
கவிபாஸ்கர்

கருஞ்சட்டைக் கிழவன்
சாதிப் பேய்கள்
தலையில்
ஓங்கி அடித்தான்
கைத்தடியால்
சாகவில்லையே சாதி...

சட்டப் “படி”
வந்தவிட்டது
மீண்டும்
”மதங்”கொண்டு
கருஞ்சட்டை
அணியப்போகும்
கல்லூரியில்...

சட்டத்தின்
பட்டத்தை
காலடியில் மிதித்து
சாதியின் பட்டத்தை
பெயரெழுதி
பட்டமிடுகிறார்கள்
சட்ட மாணவர்கள்

சமூகக்காவல்
வேடிக்கைப் பார்க்க
பத்திரிக்கைகள் மட்டும்
படமெடுத்து
சுடச்சுட தின்றன!

ஆட்சி மன்றம்
பதவி நாற்காலி
ஆடாமல் அசையாமல்
இருக்க,
நாற்காலி கால்களுக்கு
சாதி ஆணிகளை
அடித்து கொண்டிருந்தன...

சட்டக்கல்லூரி
வளாகத்தில்
அம்பேத்கர் மட்டும்தான்
அழுதார்....

“சட்டமும்
சாதியாய்”
அடித்துக் கொண்டதை
நினைத்து....


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.