Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
அம்மா என்பவள் காத்திருப்பவள்
செல்மா பிரியதர்ஸன்

நினைவுகள் எல்லாம்
சரியாக இருக்கும் பட்சத்தில்
அம்மா என்பவள்
மெலிந்த தேகமும்
கந்தலான உடையும் அணிந்தவள்
சமையல் பாத்திரங்களுக்கு முன்பு
வியர்வை துடைப்பவள்
நெருப்பை சீராக வளரவிடுபவள்
அழுக்குத் துணிகளை அள்ளிக்கொண்டுபோய்
ஆற்றிலே அலசுபவள்
அவை உலரும் நேரத்தில்
கரையோரக் காடுகளில் நட்ட
யூகாலிப்டஸ் கன்றுகளுக்கு
நீர் வார்ப்பவள்

நினைவுகள் எல்லாம்
சரியாக இருக்கும் பட்சத்தில்
அம்மா என்பவள்
வயலில் விளைந்த காய்கறிகளை
கூடைகளில் அள்ளிப்போய்
வீதிகளில் விற்பவள்
மீந்தவற்றை உப்புச் சேர்த்து உலரவைப்பவள்
நள்ளிரவு வரை
பொட்டல்களில் அறுத்த
உளுந்தம் பயிறுகளை
திருவைகளில் வைத்துத் திரிப்பவள்

அம்மா என்பவள்
குழந்தைகளை உறங்கவைத்துக்
கணவனுக்குக் காத்திருப்பவள்
மூன்றாம் ஜாமத்தில்
பணிவிடைகள் போல் சிலவற்றை
தன் கணவனுக்குச் செய்ததை
பிள்ளைகள் அறிந்தபின்னும்
வெட்கமற்ற அதிகாலையில்
ஊறவைத்த தானியங்களின் மேல்
உலக்கை குத்துபவள்

நினைவுகள் எல்லாம்
சரியாக இருக்கும் பட்சத்தில்
வறுத்த கம்பு மாவரைத்து
உலர்ந்த ஈசல்களில் கருப்பட்டி தூவி
கலந்து தருபவள்
உமிகள் கட்டிய துணியை
சூடாக்கி ஒத்தடம் தருபவள்

அம்மா என்பவள்
பணியாரம் சுட்டவள்
வடித்த சுடு கஞ்சியில்
தனது கணவனது வேட்டியை
முக்கி எடுப்பவள்
பொதுவில் அழியவிட்ட
குளத்து மீன்களை உளசுபவள்
சேவற்கட்டில் ஜெயித்த சேவல்களின் இறகுகளை
வெண்ணீரில் கொய்து
குழம்பு சமைப்பவள்
தின்னிக் கோழி முட்டைகளை
அடை வைப்பவள்
தன் மகள் ருதுவான நாட்களில்
கால்களை கட்டிக்கொண்டு அழுதவள்

நினைவுகள் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில்
எனக்குத் தெரியாததெல்லாம்
மாதா கோயில் மணியோசைக்கு
தனது சமையற்கட்டில் முக்காடிட்டு
ஏன் கண்ணீர் சொரிந்தாள் என்பதும்
ரசத்திற்கரைத்த அம்மியில்
ஏன் அரளிவிதைகளைத் தட்டினாள் என்பதும்.
பிறகு என் சந்தேகமெல்லாம்
கஞ்சியிலிட்ட விறைத்த ஆடைகள்
பொதுவில் அழியவிட்ட மீன்கள்
மற்றும் அந்த யூக்லிப்டஸ் மரங்களின் மீதும்தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP