தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பற் படையால் வாரம் ஒருமுறை, பதினைந்து நாள் ஒருமுறை எனத் தவணை முறையில் தாக்கப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது அன்றாடமோ ஒன்று விட்டு ஒருநாளோ தாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தாக்கப்படும் மீனவர்கள் நிர் வாணப்படுத்தப்பட்டு இழிவு படுத்தப் படுகின்றனர். சித்திரவதை செய்யப்படு கின்றனர். அவர்களது வலைகள் அறுக் கப்படுகின்றன. பிடித்து வைத்துள்ள மீன்கள், இறால்கள் பறிமுதல் செய்யப் படுகின்றன. இத் துடன் படகுகளும் உடைத்து சிதைக்கப் படுகின்றன.

ஆனால் இதையெல்லாம் கேட்பதற்கு அம்மீனவர்களைக் காப்பதற்கு தமிழ் நாட்டில், தில்லியில், இந்தியாவில் எவரு மில்லை. அம்மீன வர்கள் பாதுகாப்பற்ற அனாதைகளாகத் தங்கள் துயர நிலைக் காகப் புலம்பித் தவிப்பதைத் தவிர, மிஞ்சிப் போனால் கடலுக்குப் போகமாட்டோம் என வேலை நிறுத்தம் செய்து தங்களைத் தாங்களே காயப் போட்டுக்கொள் வதைத் தவிர வேறு வழியின்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள், தமிழ்நாட்டு மக்கள் இல்லையா? அவர்கள் இந் தியாவின் மக்கள் இல்லையா? அவர்களைக் காப்பாற்ற வேண்டியது தமிழகத்தின், தில்லியின் கடமை இல்லையா? அப்படி இருக்க ஏன் இப் படி எல்லாரும் மெத்தனமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்?

இவர்களுக்கு கட்டையில் சூடு, சொரணை, தன்மானம், ரோஷம், போன்ற உணர்ச்சிகளெல்லாம் எதுவுமே இல்லையா?

என்னடா ஓர் சுண்டைக்காய் நாடு, 1 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு சின்னஞ்சிறு நாடு 100 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் குடிமக்களைக் கொஞ்சம்கூட அச்ச மின்றித் தாக்குகிதே. மிகக் கேவலமாக நடத்துகிறதே என்று ஏன் யாருக்குமே உரைக்கவில்லை.

எந்தத் தைரியத்தில் இலங்கை இப்படி நடந்து கொள்கிறது. இந்தியா எதுவும் செய்யாது என்கிற இளப்பம், அகம்பாவம், ஆணவம்தானே. தில்லி ஏன் இப்படி நடந்து கொள்கிறது. தமிழ்நாடு அரசு ஏன் இப்படி இருக் கிறது? மீனவர்களைக் கேட்டால் என்ன சொல்கிறார்கள். கடற்பகுதியில் கடல் புலிகளின் செல்வாக்கு மேலோங்கி யிருந்தவரை சிங்கள கடற்பறை எங்கள் கிட்டே நெருங்கியதில்லை. எங்களைத் தாக்கவும் முனைந்ததில்லை. கடற் புலிகள் எங்களுக்குப் பாதுகாப்பா யிருந்தார்கள்.

ஆனால் கடற்புலிகளின் செல் வாக்கு சரிய சரிய எங்கள் மீதான தாக்கு தல் அதிகரித்துள்ளது. தற்போது கடற் புலிகளை முற்றாக அழித்தொழித்து விட்டதாக சொல்லப்படும் நிலையில் இத்தாக்குதல் அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது என்கிறார்கள்.

இந்திய, தமிழக ஆட்சியாளர் களைப் பொறுத்தவரை, அவர்கள் தாங்களாக தமிழனைக் காக்க முன்வர மாட்டார்கள். காப்பாற்றிக் கொண் டிருப்பவனையும் உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள்.

சந்தனக்காடு வீரப்பன் இருந்த வரை அங்கு சந்தன மரங்களுக்குப் பாதுகாப்பு, யானைகளுக்குப் பாது காப்பு, கன்னட ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து தமிழர்களுக்குப் பாது காப்பு எல்லாம் வீரப்பன்தான். ஆனால் வீரப்பன் மறைவுக்குப் பிறகு சந்தன மரங்கள் வெட்டப்படுவதும், யானை கள் கொல்லப்படுவதும், கன்னட ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக் கையும் அதிகம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

அதேபோலத்தான் இங்குள்ள நிலையும். கடற்புலிகள் தமிழக மீனவர் களைக் காப்பாற்றி வரும் வரை வாலாட்டாமல் இருந்த சிங்களக் கடற்படை இந்திய அரசின் உதவியோடு அவர் களை வீழ்த்தியபின் தற்போது வாலாட்டுகிறது. அவர்களை இப்படி வாலாட்ட அனுமதிக் கிறது இந்திய அரசு. அராஜக மும் அட்டூழியமும் நடைபெற விட்டு வேடிக்கை பார்க்கிறது.

சரி, தமிழக மீனவர் களைத் தமிழக அரசும் காப் பாற்றாது, தில்லியும் காப்பாற் றாது என்றால், பிறகு யார்தான் அவர்களைக் காப்பாற்றுவது? அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டி யதுதானா. அப்படியானால் ஆயுதத் தோடு தாக்க வரும் சிங்களக் கப்பற் படையை மீனவர்கள் வெறும் கையால் எப்படி எதிர் கொள்வது? இவர்களும் ஆயுதம் ஏந்த வேண்டியதுதானா? ஏந்தி னாலும் பயிற்சி பெற்ற ராணுவத்திடம் பயிற்சி பெறாத மீனவர்கள் எப்படி சண்டையிடுவது. ஆகவே மீனவர்களும் தங்களுக்குள் பயிற்சி பெற்ற ராணு வத்தை உருவாக்க வேண்டியதுதானா.

இப்படி யோசித்துப் பாருங்கள். தமிழனுக்கென்று, தமிழ்நாட்டுக் கென்று ஒரு ராணுவம் இருந்திருந்தால், அது தமிழக மீனவர்களை இப்படி அல்லாட விட்டு வேடிக்கை பார்க் குமா? தமிழக மக்கள் தங்களைக் காக்க தங்கள் வரிப் பணத்தில் தில்லிக்கு கிஸ்தி செலுத்தி அந்த ராணுவம் வந்து தங்களைக் காக்கும் என்று நம்பி ஏமாந்து, தில்லியிடம் முறையிட்டு, புலம்பிக் கொண்டிருப்பதை விட, தாங்களே நேரடியாக ஒரு ராணுவத்தை உரு வாக்கிக் கொண்டால். தமிழக மீனவர் களைக் காப்பாற்றலாம் இல்லையா? தமிழர்கள் இப்படி சிந்தித்தால், செயல்பட்டால் என்ன தவறு?

கேட்டால் சிலபேர் இது பிரிவினைவாதம். தேசத் துரோகம் என்று சொல்வார்களே எனலாம். சொல்லி விட்டுப் போகட்டும் இந்த எண்ணம் ஏற்பட இது செயலுக்கு வர யார் காரணம்? யார் பொறுப்பு? ஆட்சியாளர்கள்தானே? ஏண்டா, நீயும் எங்களைக் காப் பாற்ற மாட்டாய். நாங்களாகவும் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள விட மாட்டாய் என்றால், வீணாய், வெட்டி யாய் அந்நியன் கையில் அடிபட்டுச் சாகவா நாங்கள் பிறந்திருக்கிறோம். உனக்கு சிங்களவன் வேண்டும் என்றால் நீ போய் அவனோடு கூடிக் குலவு. சொந்தம் பாராட்டிக் கொள். அதற்காக நாங்கள் ஏனடா பலியாக வேண்டும் என்கிற கேள்வி தமிழர்களிடத்திலே எழாதா?

இந்தியன் தாக்கப்படுகிறான் என்று இந்தியப் பிரதமருக்கும் சொரணை உறைக்கவில்லை. தமிழன் தாக்கப் படுகிறான் என்று தன்மானத் தமிழர் தமிழக முதல்வருக்கும் தைக்கவில்லை. பிறகு மீனவர்கள் என்னதான் செய்வது?

நினைக்கக் நினைக்க, நாளும் நடைபெறும் செய்திகளை படிக்கப் படிக்க, பார்க்கப் பார்க்க கொதிப்புத் தான் எகிறுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாவலர்கள் இதற்கு ஒரு பதில் சொல்லட்டும். அன்றாட வாழ்வே வதைவிற்குள்ளாகிப் போன தமிழக மீனவர்கள் வாழ்வு மலர அவர்களே ஒரு தீர்வு சொல்லட்டும்.