கல்கத்தாவில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றின் பெயர் தி டெலிகிராஃப். அது கிழக்கிந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் தலையாயது என்று கருதப்படக் கூடிய பத்திரிக்கை. அதில் கடந்த மாதம் ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை போலந்து நாட்டில் சோசலிசத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த லே வேலசா குறித்தது.
பொதுவாக மாநில மொழிகளில் வெளிவரும் பத்திரிக்கைகளைக் காட்டிலும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் தரமானவையாக இருப்பதற்குச் சாதகமான சில சூழ்நிலைகள் உள்ளன. ஏனெனில் ஆங்கிலப்...








